ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

ரமணி

New member
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****
 
#ரமணி_Clerihew_வாழ்நகை
24/01/2016
9.
வறுமையில் புலவன்
வளம் நிறைந்த புரவலன்
வறுமை வளத்தை நாடியது
முகம் துதித்துப் பாடியது!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
9.
உருத்திரன் ஏற்கனவே முக்கண்ணன் ஆவான்
அருச்சுன னுடன்காட்டில் அன்றுபோர் செய்தே
ஆலாய்ப் பறந்தான் ஆங்கோர் பன்றிக்கு--
நாலாம்கண் முளைத்ததே நச்சென நெற்றியில்!

*****
 
‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
10.
அன்னியூர் அரசன் அன்னியின் காவல்மரம்
புன்னையை வெட்டப் போர்மூண்ட பொழுதில்
இன்னுயிரை அன்னி இழந்தான். இன்று
அன்னியை அறியார் புன்னையை அறிவாரே!

#ரமணி_Clerihew_வாழ்நகை
10.
பாணனோர் நாடோடி
வேந்தனோ காடோடி!
அரண்மனையில் தங்கம்
வறுமையே நாட்டில் எங்கும்!

*****
 
#ரமணி_Clerihew_வாழ்நகை
04/02/2016
11.
சங்கத் தமிழிலக் கியம்
சங்கில் புகட்டும் கல்வியில் பயம்
தமிழா சிரியர் பசப்பில்
தமிழ்மா ணவனோ கசப்பில்!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
11.
ஆதன் தந்தை ஆந்தை என்றால்
பூதன் தந்தை பூந்தை என்றால்
அருவன் தந்தை ஆரென்பீர்? அருவந்தை!
பரிசில் பலவும் பகிர்ந்தே தருதந்தை!

*****
 
#ரமணி_Clerihew_வாழ்நகை
12.
வாழும் தமிழ் பொங்கும்
வையத் தினில் எங்கும்
வாவாத் யாரே வூட்டாண்டே
வந்தேன் மச்சான் கேட்டாண்டே!

12.
மன்னன்செங் குட்டுவன் மாண்பாம் இருகை
அன்னவன் நண்பன் யாரெனில் அறுகை
அறுகை மன்னன் அமரில் சிறைப்பட்டான்
இருகை மன்னன் இவனை விடுவித்தான்!

*****
 
#ரமணி_Clerihew_வாழ்நகை
13.
பத்துப்பாட்டு நூல்பேர் யாவும்
பட்டுப் பட்டென மனதில் தாவும்
விரிவாய்ப் படித்தோம் நெடுநல்வாடை
உருவில் ஆனது நெடுநாள் வடை!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
13.
அள்ளன் அதியனை எதிர்த்துத் தோற்றான்
அள்ளன் அளியனென் றதியன் ஏற்றான்
அள்ளன் விழைந்தது அதியனைப் பகைத்தலையே
எள்ளாய் ஏற்றதோ அதியனின் படைத்தலமை!

[அளியன் = காக்கப்படத் தக்கவன்; எள்ளாய் = எள்ளாகி]

*****
 
#ரமணி_Clerihew_வாழ்நகை
சிங்கன் சிங்கி
சென்றனர் வங்கி
கணக்கைத் திறந்தனர் பணமில் லாமலே
வணக்கம் மோதி வாழகவும் ஃபேமலி!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
14.
ஆதன் அவினி அப்பன் மகனாம்
ஆதல் காற்றில் ஆவது தகனம்
அவிந்த காற்றாய் ஆவது வெளிமூச்சு
அவினி இதன்தமிழ் ஆகும் எனப்பேச்சு!

*****
 
#ரமணி_Clerihew_வாழ்நகை
15.
வரியை உடைப்பது புதுக்கவிதை
சொல்லை உடைப்பது மரபுக் கவிதை
இவ்வி டத்தில் சாப்பா டுப்போ டப்படும்
என்பது உடைந்த மரபுக் கவிதைப் பப்படம்!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
15.
ஆதன் எழினியை ஆனை குத்தியதாம்
ஆதன் கல்லாய்! ஆனை கத்தியதாம்!
ஐயூர் முடவன் அரசர் புகழ்பாடும்
ஐயம் இருந்தால் அகப்பாட் டினைப்பாரும்!

*****
 
#ரமணி_Clerihew_வாழ்நகை
16.
குருவிகள் கத்தலில் காற்றது கலங்க
விழித்துப் பார்த்தார் தாத்தா மலங்க!
குருவிகள் நிறத்தில் தவிடு
தாத்தா காது செவிடு!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
16.
ஆமூர் மல்லன் போர்வையில் பொருந்தான்
தாமோர் சோழனைப் போர்வையில் பொருதான்
போர்வையில் இழந்தான் முக்கா வல்நாட்டை
போர்வையில் விழுந்தான் முக்கா டைப்போட்டே!

[போர்வை = போர்த்திக்கொள்ளும் துணி; பெட்டவாய்த்தலை என்று
இன்று பெயர்கொண்ட ஊரின் சங்ககாலப் பெயர் போர்வை]

*****
 
#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
17.
பரணர் பாடிய பறவைத் தோழன்
உரு-ஆய் எயினன் குலத்தில் வேடன்!
களத்தில் தோற்றே மரணம் எய்திட
வளர்த்த பறவைகள் வான்நிழல் செய்தன!

#ரமணி_Clerihew_வாழ்நகை
17.
அம்புலிமாமா
அற்புதக் குழந்தைப் புத்தகம், ஆமா!
காமிக்ஸ் கண்ணை மறைத்தது
மாமா வீட்டில் மறைந்தது!

*****
 
Back
Top