//மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது, ஜெயா எப்படி பொறுப்பாவர்??? --- நடுநிலை நாயகர்கள்//

//மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது, ஜெயா எப்படி பொறுப்பாவர்??? --- நடுநிலை நாயகர்கள்//
எப்பா நாயகர்களே, மிடாஸ் சசிகலா & இளவரசிக்கு சொந்தமானது என்றால், சென்ற 2012 ஆம் ஆண்டு, இவர்களை தனது போயஸ்கார்டன் வீட்டிலிருந்து ஜெயா வெளியேற்றிய போது, மிடாஸ் நிறுவன போர்டிலிருந்து சசி & இளவரசி நீக்கப்பட்டு, சோ ராமசாமி சேர்க்கபட்டது எப்படி?? சில மாதங்களில், மீண்டும், சசி & இளவரசி கும்பல், ஜெயாவுடன் சமரசமாகியவுடன், சோ நீக்கப்பட்டு, சசி & இளவரசி மிடாஸ் நிறுவன போர்டில் சேர்க்கபட்டது எப்படி??
அதாவது, ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து எப்படி அவரை நீக்கிவிடுவார்கள்?? இதிலிருந்தே தெரியவில்லையா மிடாஸ் ஒன்றும் சசிகலாவுக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது..... இதே போன்றது தான் இப்போது ஆயிரம் கோடிக்கு தியேட்டர்களை வாங்கிய "ஜாஸ்" (JAZZ - JaS - J for ஜெயா ; S for சசி) நிறுவனமும்...
 
Back
Top