புலி

dellas

New member
சிறுவர் கதை என்று ஒரு வரியில் விளங்கிவிடும் கதை. அடிமைக்களையில் இருந்து, தன் மக்களை மீட்க போராடும் ஒரு கதாநாயகன். வழக்கம்போல் அரச பரம்பரையின் சூட்சிகளிலிருந்து நான்கு பறவைகளின் உதவியால் தப்பிக்கும் குழந்தை கதாநாயகன், வளர்ந்தபின் திரும்பவும் அரசுகட்டிலை ஆக்ரமிக்க நடக்கும் போராட்டம்.

கதாநாயகன் தோற்றத்திலும், நடை, உடை, பேச்சு, பாவனை எதிலுமே அன்னியப்பட்டு தெரிகிறார். இசை பல இடங்களில் தனியே செல்கிறது. "ஜிங்கிலி" என தொடங்கும் பாடல் தாளம் போட வைக்கிறது. ஒளிப்பதிவில் ரம்மியம் தெரிகிறது. ஒலிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஒரு முன்னணி திரைப்பட கதாநாயகன் இது போன்ற ஒரு கதைகளில் நடிப்பது சற்றே ஆச்சரியம்தான். பச்சைத் தவளை, ஒற்றைக்கண் ராட்சசன், பிரமாண்ட ஆமை, கருஞ்சிறுத்தை என கற்பனை மிருகங்களை உலா விட்டிருப்பது அழகு. ஆனால் VFX தொழில்நுட்பம் முழுவதும் காட்சியோடு பொருந்தவில்லை.

தர்க்கம் செய்யாமல், ஒரு மாயஜால கற்பனை என்று நினைத்து படம் பார்த்தால். கண்டிப்பாக பெரிய குறை ஏதும் இல்லை.
 
Back
Top