மஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு!

பாண்டவர் ஆண்டது 36 வருடங்கள் என மஹாபாரதமே சொல்கிறது.

கோள்களின் இயங்கு நிலை மஹாபாரதக் காலத்திலும் அதேதான் என்பதை நான் அளித்துள்ள உதாரணங்கள் கொண்டும் காணலாம்.

ப்ஞ்சாங்கக் கணிப்பு யுகாதி - அதாவது கலியுகம் பிறந்த நாளிலிருந்து இன்று வரை நடந்து வருவதாகும்.

எனவே கோள்களின் இயக்கத்தை நிலைகளைக் கொண்டு காலம் கணிப்பது மிக எளிதாக இருக்கும்.

குழந்தை கூட 10 மாதம் வயிற்றில் கருவாய் இருந்து சில மணி நேரப் போராட்டங்களில் பிறந்தாலும், குழந்தையின் தலை வெளிப்பட்ட நேரத்தை பிறந்த நேரமாகக் கொள்கிறோம். அது போல் என்னதான் சந்தியா காலம் என நாம் கால வரையறை வைத்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் வினாடியை பஞ்சாங்கம் சரியாகக் கணிக்கிறது.

சூரியன் உதிப்பதற்கு முன்னேயே அருண உதயம் உண்டாகிறது. வெளிச்சம் வரத் தொடங்கிவிடுகிறது. சூரியன் மறைந்து பல நிமிடங்கள் வரை வெளிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனாலும் சூரியன் உதிக்கும் வினாடி, மறையும் வினாடியை பஞ்சாங்க கணிப்புகள் சொல்லி விடுகின்றன.

கலியுகம் பிறந்த வினாடி என்பது கிருஷ்ணன் உயிர் பிரிந்த வினாடியாக பல புராணங்களில் சொல்லப்படுகின்றன. அந்த வினாடியே பஞ்சாங்கங்கள் காட்டும் கலி பிறந்த வினாடியாகும்.
 
முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று தான். நான் மறுக்கவில்லை. அன்றும் கோள்கள் இயங்கின என்பதும் மறுக்கஇயலாத கூற்றுதான். ஆனால் அவற்றின் தன்மையை அதாவது இயக்கங்களின் தன்மையை பற்றியே நான் சொல்லவருகிறேன். ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன் ஸ்ரீ ராமர் வாழ்ந்ததாக சொல்லப்படும் துவாபர யுகத்திலேயே கோள்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமரின் ஜாதகமாக ஒரு கட்டத்தை இப்பொழுது கூட பலர் வீட்டில் வைத்து பூஜிக்கிறார்கள்.

அதை வைத்து தசரதன் மரணம் சீதையை பிரிய நேரிட்ட கிரஹ அமைப்பு எல்லாமுமே அலசப்பட்டன. எனவே கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப பூமியில் ஜீவராசிகளின் இயக்கங்களும் அமைந்துள்ளன என்பது இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.

கோள்களின் இயக்கங்கள் இன்று இருக்கும் அமைப்பை வைத்து என்றோ நடந்த நிகழ்ச்சியை நிர்ணயிக்க முடியுமா என்பது தான் என் கேள்வி. காரணம் பலன்கள் என்பவை ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் நபரின் திறனை பொறுத்தது. சில விஷயங்கள் ஆய்பவரின் கவனத்திலிருந்து தப்பலாம். உதாரணமாக மஹாபாரத நிகழ்ச்சி ஒன்றையே கூறலாம்.

இன்று கர்ணன் குந்தியின் புதல்வன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவே பாரத நிகழ்வுகள் நடைமுறையில் இருந்த காலத்தில் குந்தியை தவிர யாருமே அறியாத ஒன்று. குந்தியும் பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர் அடையாளம் காட்டும் வரை திருமணத்திற்கு முன் தான் பெற்ற மகன் யார்? அவனுடைய தற்போதைய நிலை என்ன? என்பதை அறிந்திருக்கவில்லை. ஒரு சிறிய ரகசியம் அனைவரையும் முட்டாளாக்கிய சம்பவம் கர்ணன் மரணத்திற்கு பின் உலகிற்கு தெரியவந்தது. மேலும் நள்ளிரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சன் கொன்றான். ஆனால் அதே நேரத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை கொன்றார்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஜோதிட கணக்குகள் ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே நம்மை வழிநடத்தி செல்ல திறனுள்ளவைகளாக உள்ளன. மிகவும் நுட்பமாக அதற்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று அனைத்தையும் செயல்படுத்துகிறது. இந்த நுட்பமே யுத்தகளத்தில் சூரியனை ஒரு நாழிகை மறைத்தது. அமாவாசைக்கு முந்திய தினத்தன்றே சூரியனையும் சந்திரனையும் ஒன்றினைக்கவைத்து அனைவரையும் குழப்பியது. குழப்பத்தில் விளைந்த கலகமே மஹாபாரத போர். அதில் வென்றவர்களுக்கு அழுதார்கள் தோற்றவர்களும் அழுதார்கள். போரின் முடிவில் சோகத்தை தவிர எதுவும் இல்லை.

தவிர அன்று இருந்த அறிவுக்கூறு மனிதரிடம் இன்று இல்லை. ப்ரம்மாஸ்திர வித்தை கலியுகத்தில் தொடரவில்லை. காரணம் இந்த வித்தைகளெல்லாம் கலியுகத்தில் தொடர்ந்தால் கலியுகம் ஆரம்பித்த உடனேயே அழிந்துவிடும் என்று கூறப்பட்டதாக சில செய்திகள் உள்ளன. பூமியில் தோன்றிய அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். இதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் பூமியில் தோன்றிய ஏழு பேர் சிரஞ்சீவிகளாக வாழ்வதாக கூறப்படுகின்றனர்.

மஹாபலி, பரசுராமர்,பிரஹலாதன், மார்க்கண்டேயர், அஸ்வத்தாமன், வியாசர் மற்றும் ஆஞ்சநேயர் தான் அந்த ஏழு பேர். ஜோதிட ரீதியாக சொல்லப்போனால் இவ்வேழு பேருக்கும் பிறந்த ஜாதகம் உண்டு ஆனால் மாரக திசை வராது. அப்படியானால் மாரக திசை என்ற ஒன்று இல்லாத ஜாதகம் இவ்வெழுவருடையது என்று கொள்ளலாமா? என் கருத்து என்னவென்றால் இவ்வெழுவரையும் நான் முன் சொன்ன நுட்பமான ஒன்று ஏதோ ஒரு காரணத்திற்காக மாரக திசையிலிருந்து விடுத்துள்ளது.;

இதனால் தான் தவம் ஒன்றே சிறந்த வழி என்று முந்தைய என் பதிப்பில் சொன்னேன்.

நண்பர்களே நான் இங்கு சொல்லப்பட்டுள்ள அரிய கருத்துக்களை மறுக்கவில்லை. நான் சொன்ன வழியிலும் ஒரு சிந்தனைப்போக்கு தேவை என்பதற்காக கூறினேன்.

மேலே நான் சொன்ன தகவல்களிலிருந்து சாபம் என்பது என்ன? வரம் என்பது என்ன? இவ்விரண்டும் கோள்களின் தன்மைகளை மாற்றும் வல்லமையை எங்கிருந்து பெறுகின்றன என்ற கேள்விகளும் எழும். எல்லாவற்றையும் ஒரே பதிவில் சொல்ல இயலாது என்பதால் அதிகம் எழுதவில்லை. அறிந்தவற்றை பகிரத்தூண்டும் ஆர்வத்தை இந்த திரி ஏற்படுத்தியுள்ளதால் நான் இங்கு அதிகநேரம் செலவிட்டேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.
 
ராமாயணம் மகாபாரதம் இரண்டுமே கதைகள் மட்டுமே. இதனை பற்றி விரைவில் மிக விளக்கமாக எழுதுகிறேன்.
சமஸ்கிருதம் எழுத்துமொழியா பேச்சு மொழியா என்ற விவாதம் எழுந்ததை அடுத்து என் கருத்து.

சமஸ்கிருதத்தில் மிக பழைய நூல் என்றால் ரிக்வேதத்தினை மட்டுமே கூறுவார்கள். இதன் காலம் என்னவென்றால் கிமு 1500 க்கு முன்பு என்பார்கள். ஆனால் ரிக்வேதம் எழுதப்பட்டதோ கிமு 300 க்கு பிறகே. ரிக்வேதம் வாய்மொழியாக பரப்பப்பட்டு பிறகு எழுதப்பட்டது என்றும் பலர் கூறுகிறார்கள்.

சரி இனி ஆதாரங்களை பார்ப்போம். இந்தியாவில் கிடைக்கப்பட்ட பழைய கல்வெட்டு என்றால் அது சிந்து சமவெளி கால கல்வெட்டுகள். அது நிச்சயம் சமஸ்கிருதம் அல்ல. அதற்கடுத்த கல்வெட்டுகள் என்றால் கி மு 300 வாக்கில் கிடைக்கப்பட்ட மௌரிய கால கல்வெட்டுகள். அவை பாலி மற்றும் பிராக்கிருத மொழியில் (பிரம்மி) எழுத்துருவில் எழுதப்பட்டது. அதே காலக்கட்டத்தில் தமிழ் பிரம்மி எழுத்துருவைக்கொண்ட கல்வெட்டுகளும் நிறைய கிடைக்கப்பெற்றது. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் 60 சதவிகிதத்திற்கு மேல் தமிழ் கல்வெட்டுகளே. இவற்றினால் ஒன்று மட்டும் புலப்படுகிறது. சமஸ்கிருதம் பிறகு பிராகிருத மொழியிலிருந்து தேவநாகரி எழுத்துருக்களை பிரசவித்திருக்கலாம். கிமு விற்கு முந்தைய ஏராளமான தமிழ் கல்வெட்டுகளை என்னால் காட்ட முடியும். கிமுவிற்கு முந்தைய ஒரேயொரு சமஸ்கிருத கல்வெட்டினை காட்ட முடியுமா?

தமிழின் தொல்காப்பியம் ரிக்வேதத்திற்கு முந்தையது. தமிழின் முதல் நூல் அகத்தியம் என்பார்கள். அவருடைய பெயர் புராணத்தில் உள்ளது அதனால் தமிழ் பிறகு வந்தது என்பார்கள். ஆக்கபூர்வமான இந்த விவாத்தினை பிறகு தொடர்கிறேன்.

தக்க சான்றுகளுடன் வரும் விவாதங்களை பெரிதும் வரவேற்கிறேன்.
 
நண்பர் venkat8 அவர்கள் இந்த வாத பிரதிவாதத்தில் இறங்கியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

சம்ஸ்க்ருதம் மொழி பற்றிய ஆராய்ச்சி அதில் எழுதப்பட்டுள்ள நூல்களை அறிந்தே அதன் தொன்மை பற்றி சொல்லப்படவேண்டும். என் கருத்து என்னவென்றால் கி.மு. கி.பி என்ற கால வரையறைகளுக்கு அப்பாற்பட்டது சம்ஸ்க்ருத மொழி இலக்கியம். காரணம் என்னவென்றால் நாள் மாத வருட கணக்குகளுக்கு அப்பாற்பட்டு யுகம் சதுர் யுகம் மன்வந்த்ரம் அதற்கும் அப்பால் கல்பம் ப்ரம்ம ஆயுள் என்று கால நிர்ணயம் பற்றிய தகவல்கள் சம்ஸ்க்ருதத்தில் நிறைய உள்ளன. தமிழிலும் உள்ளன

கல்வெட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் நம் புலன்களுக்கு எட்டிய கால எல்லை தான் நமக்கு புலப்படும். உண்மை அதற்கு அப்பாற்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு. சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நூல்களை பார்த்தால் நமது அண்ட வெளிக்கப்பால் பல்லாயிரக்கணக்கான பூமி போன்ற உயிரினங்களை கொண்ட கோள்கள் இருக்கின்றன என்று சொல்ல இயலும். இன்று விண்வெளி ஆராச்சியாளர்கள் நமது அண்டவெளிக்கு அப்பால் செல்லவில்லை.

தமிழ் முந்தையதா சம்ஸ்க்ருதம் முந்தையதா என்ற கேள்வி முடிவற்ற நிலைக்கே கொண்டு செல்லும். காரணம் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நில நடுக்கங்களே சில நதிகளின் போக்கை மாற்றி இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் முற்பட்ட கால நிலைகளை இப்பொழுது தெரியும் கல்வெட்டுக்களை வைத்து கணக்கிட இயலுமா என்பது என் மனதில் தோன்றும் கேள்வி.
விண்வெளியில் இருந்து விழுந்த விண்கற்கள் கூட சில சிதைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம்.

ஒளி மற்றும் ஒலி வடிவங்களை கண்ணால் காணலாம் என்பது சம்ஸ்க்ருத நூல்களின் முடிவு. அதை வைத்து தான் மன்திர ட்வஸ்டா என்றும் மந்திர திருஷ்டா என்றும் சிலர் அறியப்படுகிறார்கள்.

அகத்தியருக்கு பின் வந்தது தான் தமிழ் மொழி என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. காரணம் அகத்தியர் தமிழை பரப்பினார் என்று இருக்கலாமே ஒழிய அவரே தமிழின் மூலகர்தா என்று எப்படி சொல்ல முடியும்.

தென்னாடுடைய சிவனே போற்றி

என்ற சொற்றொடரும் முருகன் தமிழ் கடவுள் என்ற செய்திக்கூற்றும் தமிழ் ஆதியந்தம் இல்லாத மொழி என்றே சிந்திக்கவைக்கின்றன. காரணம் சிவனும் முருகனும் அப்படித்தானே.

நானும் பல விஷயங்களை யோசித்து எழுதவேண்டி இருப்பதால் பின்னர் வருகிறேன்.
 
நண்பர் மனோவின் பதிவிற்கு மிக்க நன்றி. நான் எதிர்ப்பார்த்தது தரவுகளுடன் கூடிய பதிவை அதனால் சற்று ஏமாற்றமே. மொழியியல் / மானுடவியல் வல்லுனர்களின் கோட்பாடுகள் / தரவுகளின் படியே விவாதம் செய்ய விரும்புகிறேன்.
'உண்மை அதற்கு அப்பாற் பட்டது' என்ற லெவலில் விவாதம் செய்ய விருப்பமில்லை. நன்றி.

இந்த திரியில் நான் பெரிதும் விரும்புவது வரலாற்று ஆர்வமிக்க வாத்தியின் வாதங்களை.

இந்த் திரியில் வேறொரு நண்பர் திராவிடம் என்பதற்கு ஸ்திர இடம் என்ற பொருளில் அர்த்தம் கூறியிருந்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள் அல்ல.


திராவிடம் என்ற வார்த்தையை முதலில் உலகிற்கு விளக்கிய கால்டுவெல் தன்னுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்த்தில் - தமிழே ஆதிகாலத்தில் ட்ராவில், டரமிலா என்று வழங்கப்பட்டதற்கான அசோகர் கால பாலி மொழி கல்வெட்டுகளை காட்டுகிறார்.

ஆக தமிழை பாலி மற்றும் ப்ராக்ருத மொழியில் ட்ராவிலா ட்ராவிடா என்று எழுதியிருக்கலாம்.
 
Back
Top