மஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு!

தாமரை

Facebook User
மகாபாரதத்தின் காலத்தைக் கணிப்பதில் மிக உதவியாக இருப்பதாகக் கருதப்படுவது மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள கிரகங்களின் நிலையே ஆகும்.
வானியலிலும் ஜோதிடத்திலும் வல்லவர்கள் சிலர் மகாபாரதக்கால கோள் நிலைகளை இதைக் கொண்டு ஆராய்ந்துள்ளனர்.

மகாபாரதம் படிப்பதால் நாமும் இதை ஆராய்வோமே என்று தோன்றிற்று.

முதலில் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றிற்குரிய இராசிகளை அறிந்து கொள்வோம். கூடவே ராசியின் ஆட்சிக் கிரகம் மற்றும் உச்ச – நீச்ச விவரங்களும்.

ஆக 12 ராசிகளுக்கு ராசிக்கு 2-1/4 நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரங்கள். எந்த நட்சத்திரம் எந்த இராசியில் விழுகிறது என இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

raasi.jpg

அடுத்து அறிந்து கொள்ள வேண்டியது காலண்டர்.
இன்று நாம் பயன்படுத்துவது சக அம்ச அடிப்படையிலான சூரியக் காலண்டர்.

இதில் உள்ள 12 மாதங்கள் சூரியனின் இடத்தைப் பொறுத்து அமைகின்றன.

அதாவது சூரியன் மேஷ இராசியில் இருக்கும் மாதம் சித்திரை. சித்திரை நட்சத்திரத்திற்கு அருகில் சந்திரன் இருக்கும் பொழுது பௌர்ணமி வருவதால் சித்திரை மாதம் என்று பெயர்.

சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் பொழுது வரும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அது போல ஆனி மூலம், ஆடி மூலம், ஆவணி திருவோணம், புரட்டாசி பூரட்டாதி ஐப்பசி அசுவினி, கார்த்திகை – கார்த்திகை, மார்கழி – மிருகசீரிஷம், தை – பூசம், மாசி – மகம், பங்குனி – உத்திரம் ஆகியவையும் ஆகும். சூரிய காலண்டர் 365.25 நாட்கள் கொண்டது.

சந்திர காலண்டர் சந்திரனின் இருப்பைக் கொண்டு கணக்கிடப்படுவது. சந்திரன் 29.45 நாட்களுக்கு ஒரு முறை இராசி மண்டலத்தை சுற்றி வருவதாகத் தோன்றும். சில சமயம் 28 நாட்கள், சில சமயம் 29 நாட்கள் ஆகும். சாதரணமாக சந்திர காலண்டரில் 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள். மாதங்களின் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்தப் பெயரில் வரும்.

சந்திரக் காலண்டரில் இருவகை உண்டு

1. அமாவாசை தொடங்கி சதுர்த்தசி வரை கொண்ட காலண்டர் – இது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இந்த காலண்டர் மூலமே நட்சத்திரங்கள் அடிப்படையிலான அனைத்து பண்டிகைகளும் நிர்ணயிக்கப்படும். இதனால்தான் சில பண்டிகைகள் சில சமயம் ஆடி மாதம், சில சமயம் ஆவணி மாதம் என மாறிவரும்.

2. பௌர்ணமியில் தொடங்கி கணக்கிடப்படும் மாதம்.

இந்த சந்திர மாதக்கணக்கில் வருடத்துக்கு 354 நாட்களே வரும். எனவே ஐந்து வருடங்களுக்கு இரு மாதங்கள் கூடுதலாக வரும்.

மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்டது அமாவாசையில் தொடங்கும் சந்திரக் காலண்டர். இதை சில இடங்களின் வாயிலாக அறியலாம்.

1. விராட பர்வத்தில் துரியோதனன் விராட நாட்டின் பசுக்களை கவர்ந்த போது அர்ச்சுனன் கண்டறியப் படுகிறான். அதனால் ஆண்டுக் கணக்கை பீஷ்மர் விளக்குகிறார்.

பீஷ்மர் 13 ஆண்டு கணக்கைச் சொல்லும் பொழுது .

பீஷ்மர் சொன்னார், “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டுமாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகியபிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் சுழன்று வருகிறது. அதில் வரும்கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும்மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டுமாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்குஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால்சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றேமுடிந்துவிட்டது}. - See more at: http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section52.html

இரண்டாவதாக

kaumudemāsirevatyāṃśarad ante himāgame|
sphītasasyasukhekālekalpaḥ
sattvavatāṃvaraḥ||

MB 5.83/7(Cr Ed 5.81/7)

கௌமுட மாதம் என்பது கார்த்திகை மாதம் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று கிருஷ்ணர் உபப்பல்யத்திலிருந்து தூது கிளம்புகிறார்.

கார்த்திகை மாதம் பௌர்ணமியில் தொடங்குவதாக இருந்தால் கார்த்திகை இறுதியில்தான் கிருஷ்ணர் பயணம் தொடங்கி இருக்க முடியும்.

பீஷ்மர் மாசி மாதம் (மக மாதம்) 9 ஆம் நாள் சொல்கிறார். நான் 8 மற்றும் 50 இரவுகளாகப் அம்புப் படுக்கையில் கிடக்கிறேன் என்று.

பின்னோக்கி கணக்கிடுவோம். 9 நாட்கள் மாசி, 30 நாட்கள் தை, 19 நாட்கள் மார்கழி ஆகியவை போயிருக்கின்றன 58 இரவுகளுக்கு. பீஷ்மர் அம்புப்படுக்கையில் விழுந்தது 10 ஆம் நாள் போரில். ஆக மார்கழி மாதம் 11 ஆம் நாள் பீஷ்மர் அம்புப்படுக்கையில் விழுந்திருக்க வேண்டும். அப்படியானால் மார்கழி 2 ஆம் நாள் போர் ஆரம்பித்திருக்க வேண்டும்.

கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஆரம்பித்திருந்தால் ரேவதி நட்சத்திரம் 27 ஆம் நாள் வரும். கண்ணன் அஸ்தினாபுரம் செல்லவே இரு நாட்கள். அத்தினாபுரத்தில் சில நாட்கள். அப்பொழுதே மார்கழி பிறந்திருக்கும். எனவே மார்கழி ஒன்றாம் நாள் போர் ஆரம்பித்திருக்க வாய்ப்பில்லை. எனவே அமாவாசையே மாத முதல் நாளாகக் கொள்ளப்பட்டது என அறியலாம். இப்பொழுது எந்த காலண்டர் உபயோகப்படுத்துவது எனத் தெளிவாக தெரிகிறது.

இனி கிரக நிலைகளைப் பார்க்கலாம்.

ராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரைநட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையேமுன்னறிவிக்கின்றன.

வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும்அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மகநட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும்கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியைநோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒருசந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப்புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகைகலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச்சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச்சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப்பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதிநட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2]. நெருப்பின்பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச்சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதைஅடித்துக் கொண்டு} நிற்கிறான்.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html

இப்படி போரின் முன்பான அமாவாசை தினத்தன்று கிரகங்கள் இருந்ததாக விளக்கம் பீஷ்ம பர்வத்தில் வருகிறது.

1. ராகு சூரியனை அணுகுகிறது.
2. வெண்கோள் சித்திரைநட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது
3. வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது
4. செவ்வாய் மகத்தை {மகநட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது
5. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான்
6. சனி பக நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான்
7. பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியைநோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒருசந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான்.
8. வெண்கோள் இந்திரனுக்குப்புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகைகலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது.
9. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப்பீடிக்கிறது.
10. கடுங்கோள் சித்திரை மற்றும் சுவாதிநட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது
11. செவ்வாய்வக்கிரமாகி, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் நிற்கிறான்.

இதில் தனித்தனியாகப் பார்த்தால் ஒரு அர்த்தம் கிடைத்தாலும் சில கிரகங்கள் எவையென அறிதல் வேண்டும்..

இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஜோதிடத்தில் கிரக பார்வைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன்,ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள்.
ஆனால் குரு, சனி,செவ்வாய் ஆகியகிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு.
செவ்வாய்:- தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7, 8-ம்வீடுகளைப் பார்ப்பார்.
குரு:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பார்.
சனி:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம், 7-ம், 10-ம் வீடுகளைப் பார்ப்பார்.
இது போக - சூரியனுக்கு - 4 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு 4 , 8 - ஆம் பார்வைகளும் உண்டு. ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.

9. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப்பீடிக்கிறது.

சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள் என்றும் கொள்ளலாம். இது கார்த்திகை மாதம் என்பதால் சூரியன் விருச்சிக ராசியில் இருக்க வேண்டும். எனவே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள் எனக் கொள்ள வேண்டும்.

ராகுவை எடுத்துக் கொள்வோம்.

ராகு சூரியனை அணுகுகிறது. ராகு ஒன்று கேட்டை நட்சத்திரத்தில் இருக்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். கேது கேட்டையில் இருக்கிறது. அப்படியானால் ராகு ரோகிணி நட்சத்திரத்தை அணுகுகிறது. ராகு ரிஷப ராசியில் இருக்கிறது.

ராகுவுக்கு 180 டிகிரி நிலையிலேயே எப்பொழுதும் கேது இருக்கும். அதனால் கேது அனுஷம் அல்லது கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக இராசியில்இருக்க வாய்ப்புண்டு. இங்கே வெண்கோள் (கேது), இந்திரனுக்குப்புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகைகலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது என எட்டாவது பாய்ண்ட் சொன்னாலும், 2 ஆவது கருத்து வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரைநட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது என்று சொல்கிறது. சித்திரை நட்சத்திரம் என்பது கன்னி-துலாம் ராசியாகும். கேதுவுக்கு 11 ஆம் பார்வை உண்டென்பதால் கேது கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது 11 ஆம் பார்வையாக சித்திரை நட்சத்திரத்தைப் பார்க்கிறது எனக் கொள்ளலாம்.

ஆக இராகு ரோகிணி நட்சத்திரத்திலும், சூரியன், சந்திரன், கேது கேட்டை நட்சத்திரத்திலும் இருக்கின்றன. இன்னும் 5 கிரகங்கள் இருக்கின்றன.

செவ்வாய் பற்றிச் சொல்லும் பொழுது

4. செவ்வாய் மகத்தை {மகநட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது
11. செவ்வாய்வக்கிரமாகி, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் நிற்கிறான்.

ஆக மகம், திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்கள் சொல்லப்படுகின்றன.

அதற்கும் மேலாக கர்ணன் கண்ணனை வழியனுப்பும் பொழுது சொல்கிறான்..

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக்குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html

அதாவது ஏழு நாட்களுக்கு முன் செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தில் வக்ரகதியில் இருந்தது. இந்த ஏழு நாட்களில் அது மகம் வரை செல்ல முடியாது. வக்ர நிவர்த்தியாகி மூலம், பூராடம்,உத்திராடம் தாண்டி திருவோணம் வர வாய்ப்புண்டு. செவ்வாய்க்கு எட்டாம் பார்வை உண்டு. மகரத்திற்கு சிம்மம் எட்டாமிடம் என்பதால் திருவோணம் நட்சத்திரத்தில் மகர ராசியில் இருந்து கொண்டு மகம் நட்சத்திரத்தையும் அதில் உள்ள சனியையும் நேரடியாகப் பார்க்கிறது எனக் கொள்ள வேண்டும்.

அடுத்து

5. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான் எனச் சொல்லி வியாழன் திருவோண நட்சத்திரம் மகர ராசியில் இருப்பதாகச் சொல்கிறார்.

அடுத்து சனி, சனி மக நட்சத்திரத்தில் இருப்பதாக வியாசர் நேரடியாகச் சொல்கிறார்.

6. சனி பக நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான்...

அதே சமயம் கர்ணன் ஏழு நாட்களுக்கு முன்பு சொன்னது

பெரும்பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ளஉயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது.- See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html
ஆக சனி ரோகிணியில் இருந்து மகத்தைப் பார்க்க வேண்டும். அல்லது மகத்திலிருந்து ரோகிணியைப் பார்க்க வேண்டும். ரோகிணியில் இருந்து மகம் நாலாம் இடம். மகத்திலிருந்து ரோகிணி 10 ஆம் இடம். சனியின் பார்வை 3,7 மற்றும் 10. எனவே மகம் என்று சொல்வதே சரி.

அடுத்து வெள்ளி.

7. பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியைநோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒருசந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான்.

வெள்ளி பூரட்டாதி-உத்திரட்டாதி சந்திப்பில் இருக்கிறது. அதாவது மீன ராசியில் இருக்கிறது. ஆனால் இது சாத்தியமில்லை. ஏனெனில் சுக்கிரன் சூரியனை விட்டு 48 டிகிரிக்கு மேல் விலகுவதில்லை.

2. வெண்கோள் சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது

என்பதில் வெண்கோள் என்பதை சுக்கிரன் எனக்கொள்ள (சுக்கிரனின் நிறம் வெண்மை) சுக்கிரன் கன்னி-துலா ராசியில் இருக்கிறது எனக் கொள்ளலாம். கன்னி ராசியில் சுக்கிரன் இருக்குமாயின் பூரட்டாதி உத்திரட்டாதி ஆகியவை சுக்கிரன் பார்வை பெறும். எனவே சுக்கிரன் கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் உள்ளதாகக் கொள்ளலாம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகியவற்றின் இடம் தெரிந்து விட்டது. புதன் எங்கே இருக்கும்?

புதன் சூரியனிடமிருந்து 30 டிகிரிக்குள்தான் இருக்கும். புதன் தனியே சொல்லப்படவில்லை என்பதால் அது சூரியனுடன் இருக்கிறது எனக் கொள்ளலாம்.

இதனுடன் பூச நட்சத்திரத்தில் ஒரு தூமகேது, அதாவது வால் நட்சத்திரம் தெரிவதாக சொல்லி இருக்கிறார்

Karthikai.jpg

இப்படி ஒரு கிரக அமைப்பே போருக்கு முந்தைய அமாவாசையின்போது இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த அமைப்பில் வானியல் ரீதியாக பிழைகள் உள்ளன.

1. சுக்கிரனின் அதிக பட்ச கோணம் சூரியனிலிருந்து 48 டிகிரிகள் அதாவது 4 நட்சத்திரங்கள் என வைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே 100 டிகிரிக்கு மேல் வருகிறது

2. செவ்வாய், சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும் பொழுது மட்டுமே வக்கிரகதி அதாவது பின்னோக்கிய நகர்வைக் கொள்ளும்.

இரண்டையும் சரி செய்யவேண்டுமெனில் சூரிய சந்திர கோள்கள் கார்த்திகை நட்சத்திரத்தின் கடைசி பாதத்தில் இருப்பதாக கொள்ளலாம். இது சூரிய சந்திரர்கள் ரோகிணியைப் பீடிக்கிறார்கள் என்பதையும் இராகு சூரியனை அணுகுகிறான் என்பதையும் சொல்லும். சுக்கிரன் 48 டிகிரிக்குள் வரும். செவ்வாயின் வக்ரகதியும் சரியாகும். அதுவுமின்றி இன்னுமொரு குறிப்பும் உண்டு

நட்சத்திரங்கள் அனைத்தும் பகையாயிருக்கின்றன. விலங்குகள் மற்றும்பறவைகள் அனைத்தும் அச்சத்திற்குரிய அம்சங்களை ஏற்கின்றன. ஓ! வீரா {துரியோதனா} பல்வேறுவிதமான தீய சகுனங்கள், க்ஷத்திரியர்களின் படுகொலைகளைமுன்னறிவிக்கின்றன. இந்தச் சகுனங்கள் அனைத்தும் குறிப்பாக நமது இல்லங்களில்மட்டுமே மீண்டும் மீண்டும் தெரிகின்றன. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section138.html

சூரியனுக்கு ரிஷபம் பகை வீடு
ராகு ரிஷபத்தில் நீசமடைகிறது
புத்திரகாரனாகிய குரு மகரத்தில் நீசமடைகிறது.
சுக்கிரன் பகைவன் குருவின் வீட்டில் இருக்கிறது
ஆயுள் காரகனாகிய சனி சூரியனுக்குரிய சிம்மத்தில் இருப்பதால் பகையாய் இருக்கிறது
போருக்கு காரணியான செவ்வாய் மகரத்தில் உச்சமடைகிறது.
ஞானத்திற்கு காரகனான கேது உச்சத்தில் இருக்கிறது.
சந்திரக்குலத்தலைவன் சந்திரனும் உச்சமாய் இருக்கும்
இத்தனையும் வைகாசி மாதத்தில் மட்டுமே.

vaikasi.jpg

அடுத்து தூமகேது..

தூமகேது என்பது வால் நட்சத்திரமாகும். இந்த வால் நட்சத்திரம் பூச நட்சத்திரத்தில் தெரிந்தது என்கிறார் பீஷ்மர்.

கார்த்திகை மாதம் எனில் பூச நட்சத்திரம் இரவு பத்து மணி சுமாருக்கு வானில் உதிக்கும்.
வைகாசி மாதமெனில் பூச நட்சத்திரம் காலை பத்து மணிக்கு உதித்து இரவு பத்து மணிக்கு மறையும். எனவே இரண்டு மாதங்களிலும் பூசநட்சத்திரம் தெரியும். ஆனால் தூமகேது தெரியுமா?

வால் நட்சத்திரம் எப்பொழுது தெரியுமென்றால் அது பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் இருக்கும் பொழுது சூரியனின் கதிர்களில் அதன் வால் ஒளிரும். அதாவது வால் நட்சத்திரம் சூரியனில் இருந்து தொண்ணூறு டிகிரிக்குள் இருக்க வேண்டும்.

அடுத்து வால் நட்சத்திரம் சூரியனை நோக்கிச் செல்கிறதா அல்லது சூரியனில் இருந்து திரும்புகிறதா எனவும் பார்க்க வேண்டும்.

சந்திரனின் ஒரு முகம் மட்டுமே பூமியை நோக்கி இருக்கும். அதே கறைகள் அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் சந்திரன் பூமியைச் சுற்றி வர ஆகும் காலமும், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலமும் ஒன்றேயாகும்.

சந்திரவட்டில் உள்ள கறை {களங்கம்}, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html

அதாவது கர்ணன் சொல்கிறான், ஏழு நாட்களுக்கு முன் சந்திரன் தன் கறைகளை மாற்றிக் கொண்டு விட்டதென.அதன் பின் உண்டாவது இது

ஒவ்வொருவகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண்ட ஒரு கிரகம்தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளைமுன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக)பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பதினாறு நாட்களையோகொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்றுநாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும்என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன்ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்துபதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன" என்றார் {வியாசர்}.
- See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html

{வியாசர்திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "எனவே, வழக்கத்திற்கு மாறான நாட்களில்கிரகணங்களுக்கு உட்படும் [1] சூரியனும் சந்திரனும், பூமியில் உள்ளஉயிரினங்களின் பேரழிவுக்குக் காரணம் ஆவார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html
இந்திரனின்வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்க விண்கற்கள் {கொள்ளிகள்} உரத்த சீற்றத்துடன்கீழே விழுகின்றன - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html

கைலாசம், மந்தரம், இமயம் ஆகிய மலைகளில் ஆயிரக்கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்கின்றன; ஆயிரக்கணக்கான சிகரங்களும் பெயர்ந்து விழுகின்றன. பூமி நடுங்குவதன்விளைவால் பெரிதும் பொங்கும் நான்கு கடல்களும், பூமியைத் துன்புறத்த அதன்கண்டங்களைத் {கரைகளைத்} தாண்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html
அதாவது சந்திரனின் சுழலும் வேகம் சற்று மாறி இருக்கிறது. சந்திரன் பூமியைச் சுற்றும் வேகம் திடீரென அதிகரித்தது. பூமியின் மீது எரிகற்கள் விழுகின்றன. அவற்றில் சில மிகப் பெரியவை.

இவையெல்லாம் குறிப்பது என்னவென்றால் சந்திரனுக்கு மிகச் சமீபமாக வால் நட்சத்திரம் கடந்து போனது. அதன் தூசிகள் சந்திரனிலும் சூரியனிலும் விழுந்தன.

ஆக பௌர்ணமிக்கு முன்பே தூமகேது சந்திரனைக் கடந்து சென்றது. அது சூரியனைத் தாண்டி திரும்ப வரும்பொழுது கண்ணிற்கு தெரியும்.

அதாவது இந்த தூமகேது சந்திரனைத் தாண்டி வருகிறது.

இதை ஒரு அறிவியல் ஆதாரமாகக் கொண்டால் வால் நட்சத்திரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்க வேண்டும். அதாவது சூரியனில் இருந்து 90 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.

இது கார்த்திகை மாதம் என்றால் தூமகேது பூசத்தில் இருப்பதால் தூமகேது சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என ஆகும். அப்படியானால் பெரிய பெரிய விண்கற்கள் விழ வாய்ப்பில்லை. இதுவே வைகாசி மாதம் என்றால் தூமகேதுவின் நிலைப்படி தூமகேது சூரியனைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது என்று பொருளாகும்.

இந்த ஆய்வின்படி பார்க்கும் பொழுது,

1. தூமகேதுவின் நிலை
2. சுக்கிரனின் நிலை
3. செவ்வாயின் சஞ்சாரம் ஆகியவை

களப்பலி கொடுத்த நாள் வைகாசி மாதம் இரண்டாவதாக வந்த அமாவாசையில் நடந்தது என எண்ணத் தோன்றுகிறது. தூமகேதுவால் திடீரென வேகம் பெற்ற சந்திரன் காரணமாக 13 ஆம் நாளே அமாவாசையும் கிரஹணமும் உண்டாகின. அதை கௌரவ பண்டிதர்கள் சரியாய் கவனித்து கணிக்காமல் போனதால் அவர்கள் திதி தவறி களப்பலி கொடுத்தனர். தூமகேதுவின் இடறலை அறிந்த கண்ணன் முதல் நாளே அமாவாசை வந்ததை அறிந்து கொண்டான் என அறிவியல் ரீதியாகச் சொல்லலாம்.

அது மட்டுமின்றி தமிழ் நாட்டில் ஆடி 1 முதல் 18 வரை மஹாபாரதப் போர்களம் என்ற ஒரு செவிவழிச் செய்தியும் நம்பிக்கையும் உண்டு. 18 ஆம் பெருக்கு அன்று பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கழுவினார்கள் எனப் பாட்டிகள் கதை சொல்வதுண்டு.

கார்த்திகை அமாவாசை களப்பலி இட்டு மார்கழியில் போர் நடந்ததா? அல்லது கர்ண பரம்பரைக் கதைப்படி வைகாசி அமாவாசை களப்பலி இட்டு, ஆடி மாதம் போர் நடந்ததா என்பது ஆராயத் தக்க கருத்து.

காரணம் உண்டு. போர் நடந்து முடிந்த உடன் தர்மன் பதவி ஏற்கவில்லை. எல்லோருக்கும் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு கங்கை நதிக்கரையில் தங்கி ஓய்வெடுக்கிறான்.

கணக்குப்படி மார்கழி 19 நாள் யுத்தம். துக்கம் அனுஷ்டித்தது 16 நாள். கங்கைக்கரையில் தங்கி இருந்தது குறைந்த பட்சம் 1 மாதம் எனில் தை மாதம் கடந்து விடுகிறது. ஆனால் தைப்பூசத்தன்று தர்மன் முடிசூட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தை 15 ஆம் தேதிதான் தைப்பூசம். (சந்திர காலண்டரின்படி) எனவே இது சாத்தியமல்ல.

</size=3>இதில் சில வேறுபாடுகளும் உண்டு. தர்மன் 1 மாதம் அல்ல.. மூன்று மாதங்களுக்கு மேல் கங்கைக் கரையில் ஓய்வெடுத்ததாக சில நூல்கள் சொல்கின்றன.

அதே போல் பீஷ்மர் சொன்னது ஐந்து பத்தும் மேலும் எட்டு இரவுகளும் அம்புப்படுக்கையில் படுத்திருக்கிறேன் என்பதை சில நூல்களில் 5 மாதங்களும் 8 நாட்களும் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறேன் எனச் சொல்கின்றன. அதாவது ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஐந்து மாதங்கள் 8 நாட்கள் அதாவது அஷ்டமி திதி... என்று சொல்கின்றன.

ஆக மார்கழி இரண்டாம் தேதி போர் ஆரம்பித்த்து என உறுதியாகவும் சொல்ல முடியாது. அதே போல் ஆடி முதல் நாள் போர் ஆரம்பித்தது எனச் சொல்லவும் காரணங்கள் இருக்கிறது.

கிரக நிலைகளில் உள்ள குழப்பங்கள் இதை தெளிவாக்கும் என்ற எண்ணத்தோடு கிரக நிலைகளை அலசியதில் கண்டிப்பாக சில இடங்களில் தவறு உட்புகுந்திருக்கிறது எனத் தெளிவாக தெரிகிறது. நாட்களைக் கவனித்து மாற்றியவர்கள் கோட்களில் கோட்டை விட்டு விட்டார்கள் எனத் தோன்றுகிறது

எது உண்மை? பாட்டி சொன்னதா? பண்டிதர்களின் சொன்னதா?
 
Last edited:
அருமையான பதிவு. இந்த கேள்விக்கு என்ன பதில் ? மஹாபாரதப் போர் எப்போது நடந்தது ? விடை என்ன? விளக்க வேண்டும். உங்கள் இந்த திரியை முடித்த விதம் ஒரு சந்தேகத்தை கேட்க தூண்டுகிறது. மகாபாரதபோர் நிஜமா இல்லை நிழலா? மறை பொருளாக தெரிகிறது. அதையும் நீங்கள் தெளிவு படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

"science and theology are no longer seen as opposed but complementary, two aspects of one truth,"Susan Howatch . உங்கள் ஆன்மிக எண்ணத்திற்கும், உங்கள் அறிவியல் நோக்குக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல காண்கிறது. :) உங்கள் அறிவியல் , வான சாத்திரம் மற்றும் ஜோதிட கணக்கு மிக அருமை . வாழ்த்துக்கள் :)
 
Last edited:
நான் படித்து ஆராய்ந்தவரையில் மகாபாரதப்போர் என்பது நடந்த கதையின் பெரு வடிவம் என்றே சொல்லுவேன். இந்தியாவைப் பொருத்தவரை இது ஒரு உலகப்போர்.

இந்தப்போரில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருந்தது. அந்தப் போரை சுற்றி எழுதப்பட்ட ஒரு மிகப் பெரிய காவியமே மகாபாரதம். வென்றவர்கள் எழுதிய கதை.

இதில் என் சந்தேகம் என்னவென்றால் மகாபாரதத்தில் பல இடங்களில் திராவிட கலாச்சாரமே இருந்திருக்கிறது. பின்னர் இது மாறுதலுக்கு ஆட்பட்டிருக்கிறது என்பதுவே.
 
விக்கிபீடியா படி, குருக்ஷேத்திர போர் கி மு 6000 முதல் கி பி 500 என்று குத்து மதிப்பாக சொல்ல படுகிறது. அது தவறு என சொல்லும் அறிஞர்களும் உண்டு. சரியாக தெரியவில்லை.இது ரிக் வேதத்திலும் காணப் படுவதாக தெரிகிறது. இது சரியா? போர் மூண்ட இடம் குருக்ஷேத்ரம் எனவும் அறியப்படுகிறது. இது சரியா? விளக்க வேண்டுகிறேன்.

இதில் என் சந்தேகம் என்னவென்றால் மகாபாரதத்தில் பல இடங்களில் திராவிட கலாச்சாரமே இருந்திருக்கிறது. பின்னர் இது மாறுதலுக்கு ஆட்பட்டிருக்கிறது என்பதுவே.
இந்த சந்தேகம் ஏன்? பாண்டு புத்திரர்கள் என்பது தமிழக பாண்டவர்களை குறிக்கிறதோ எனும் குறிப்பு ஏதேனும் உண்டோ ? திராவிட கலாசாரம் என்பது என்ன? ஆரிய திராவிட கலாசாரத்திற்கு இடையே என்ன வேறுபாடு? ஐயங்களை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகா பாரத் புராணம் வட இந்திய நாட்டில் நடந்தது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளது போல தோன்றுகிறது. அது போல் திராவிடத்தில் இல்லாததால், benefit of doubt ஆரிய கலாச்சாரத்திற்கே கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து . ஒரு சில பார்வைக்கு :

1. மஹா பாரதம் ( 5வது வேதம் எனவும் சொல்லப்படுகிறது) எழுதியது வியாசர். இவர் பெயரில் வட இந்தியாவில் ஒரு நதியும் ஓடுகிறது. அதன் கரையில் இவரது குடில் இன்றும் உள்ளதாக சொல்கிறார்கள். ( சிந்து நதியின் உப நதிகளில் ஒன்று. ஜீலம், சீனப், ராவி, சட்லஜ், ப்யாஸ் - ) . நதி ப்யாஸ்- வேத வ்யாஸ் போல. இது போல் சான்று திராவிடத்தில் உண்டா?

2. பொதுவாக விஷ்ணுவின் அவதாரங்கள் தேவ - அசுர சண்டைக்கு முற்று புள்ளி வைக்கவே என்பது போல் தோன்றும் . கொஞ்சம் ஆரிய- திராவிட சண்டை போல காணக் கூடும்.. மகாபலி (கேரளா), இரண்யன் ( ஆந்திரா), ராவணன் (தமிழ்நாடு- ஸ்ரீ லங்கா) இவர்களை அழிக்கவே, வாமனாக (த்ரி விக்ரமனாக) , நரசிம்மனாக , ராமனாக விஷ்ணுவின் அவதாரம் போலத்தோன்றும். ஆனால் மகாபாரத்தில் இது இல்லை. இரண்டு வட இந்திய பங்காளி பிரச்சனை போலவே தோன்றுகிறது. ரத்தினமாக, பல நல்ல விஷயங்களும், மனோ தத்துவ விசாரங்களும், பகவத் கீதையும் கிடைத்தது. இது எவ்விதம் திராவிட கலாச்சாரமாகும்? விளக்க வேண்டுகிறேன் :) கணிதம், வான சாத்திரம், உங்கள் ஆய்வு என்ன சொல்கிறது?

3. நடைபெற்ற இடங்கள் : குருக்ஷேத்திரம் (ஹரியானா), ஹஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம் இவை டெல்லிக்கு அருகே. காந்தாரி - காந்தாரம் (இன்றைய ஆப்கான்), ஜயத்திரதன் (சிந்து நாடு), விராட பர்வம் ( விராட் கொஹ்லி நினைவுக்கு வருமே !) என பலவும் வட இந்தியாவை சேர்ந்தவை.

4. ஒரு வேளை, நடந்த காலம் திராவிடம் ஆரியம் என பிரியாது இருந்ததோ? ப்ராஹ்மி எனும் வரிவடிவத்தில் இருந்து பெறப்பட்டது தமிழ் என்கிறார்கள் ப்ராஹ்மி ஸம்ஸ்க்ருதம் அதற்கு முன்னைய ப்ராக்ருததத் (prakriti) மொழிக்கும் மூலம் எனவும் சொல்லப் படுகிறது. இதன் காரணமாக க் கூட, மகாபாரதம் திராவிட கலாசாரம் போல தோன்றலாம். உங்கள் விளக்கம் கேட்க ஆவலாக உள்ளது. :)
 
1. திராவிட கலாச்சாரம் என்று நான் சொல்வது இன்று திராவிட கலாச்சாரமாக சொல்லப்படும் கலாச்சாரம் என்பதாகும்.
2. வைவஸ்வத மனு (சத்திய விரதன்) திராவிட நாட்டைத்தான் ஆண்டதாக புராணங்கள் சொல்கின்றன
3. மகாபாரதத்தில் நான் கூறியபடி காலக்கணக்கு திராவிட நாட்டிற்குரிய சந்திரமான காலக்கணிதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. ஆரிய கலாச்சாரம் இந்தியாவிற்கு வரும் முன்பே இந்தியாவில் இருந்த கலாச்சாரம் த்ராவிட கலாச்சாரம் எனலாம். சங்கத்தமிழில் கூட முல்லை நிலக் கடவுள் கிருஷ்ணன்தான்.
5. கண்ணன் தன் மாமன் மகள் நப்பின்னையை ( நக்னஜித்தின் மகள்) ஏழுக் காளைகளை அடக்கி (தமிழ் கலாச்சாரம்) அதன்பின்னரே வென்று மணக்கிறார்.
6. வேதங்களுக்கு உரை எழுதி அதன் மூலம் தத்துவங்களை அமைத்த ஆச்சாரியர்கள் அனைவரும் தென்னிந்தியர்கள்தான்.
7. 2000 ஆண்டுகளுக்கு முன்பே இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற அரசன் இருந்துள்ளான். தர்மன் செய்த அதே இராசசூய வேள்வியைச் செய்த சங்ககால மன்னன் இவன்
8. சோழர்கள் சூரிய குலத்தவர் என்றும் பாண்டியர்கள் சந்திரகுலத்தவர் என்றும் சேரர்கள் அக்னி குலத்தவர் என்றும், பல்லவர்கள் அசுவத்தாமன் வழி வந்த பரத்வாஜ ரிஷி குலத்தவர் என்றும் அறியப்படுகின்றனர்.
9. மகாபாரதத்தில் வரும் சிபிச்சக்கரவர்த்தியை சோழர்கள் அரச பரம்பரையின் மூத்தவனாக கொண்டாடப்படுகிறான்.

சமஸ்கிருதம் என்பது பேச்சு மொழியாக இருந்திருக்குமா? இந்தக் கேள்வி மிகவும் ஆராய வேண்டிய ஒன்று.

சமஸ்கிருதம் - பிராக்ருதம் என்று இருமொழிகள் வடமொழியில் இருந்ததாகவும், பிராக்ருதம் பேச்சு மொழியாகவும், சமஸ்கிருதம் இலக்கிய மொழியாகவும் இருந்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. சமஸ்கிருதத்தை எவரும் தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை எனவும் கூறலாம். அதனால் அது தேவபாஷை என அறியப்பட்டது.

பல இடங்களில் முனிவர்கள் ஸ்லோகங்களைச் சொல்லி விளக்குவதாக வருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

ஆதித்தமிழில் புராணங்கள் இல்லாமலிருக்க இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் வாழ்க்கைக்கான மொழியாகவும் சமஸ்கிருதம் ஆன்மீகத்திற்கான மொழியாகவும் தமிழ் நாட்டில் இருந்திருக்கலாம். அதே போல் வடக்கிலும் தமிழ் இருந்திருக்கலாம்.

த்ராவிடம் என்பது இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. அது இடத்தைக் குறிக்கும் சொல். த்ரவ + இடம் திராவிடம் ஆகும். திரவம் என்றால் சலம் அதாவது அசைவது. சூரியன் கடகரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே நகர்கிறது அல்லவா? இந்த இடைப்பட்ட பகுதியை ஆங்கிலத்தில் டிராபிகல் ரீஜன் என்கிறோம். இது அடிப்படையில் டிராபிகோ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. அதன் பொருளும் சூரியன் நகரும் பகுதி என்பதே ஆகும்.

மேலும் ட்ராவல் என்னும் பெயரும் த்ரவ - அசைதல் நகர்தல் என்ற வார்த்தையில் இருந்தே உண்டானது. சலம் - திரவம் அசைவது நீர் என பொருள்படும். அசலம் - அசையாதது, நகராதது அதாவது மலை என பொருள்படும்.

எனவே த்ராவிடம் என்பது இன்று ஆங்கிலத்தில் நாம் டிராபிகல் ரீஜன் என சொல்லும் இடமே ஆகும். இங்கு சூரியனின் கதிர்கள் செங்க்குத்தாய் விழுமாதலின் தோல் கருப்பாய் இருக்கும்.

ஆக திராவிட கலாச்சாரம் என்பதை ஆதி கலாச்சாரம் எனவும் பின்னர் ஆரிய கலப்பால் வடக்கின் கலாச்சாரம் மாறியிடுக்கலாம் என்பதும் என்றும் கொள்ளலாம் என சொல்லவருகிறேன்.
 
மகாபாரதம் எழுதப்பட்டது சமகாலத்தில் வாழ்ந்த வியாசரால். ஆனால் இன்று நாம் படிப்பது வியாசர் எழுதிய பாரதம் அல்ல.

நன்கு ஊன்றி கவனித்தால் அனைத்து புராணங்களும் சரி, இதிகாசங்களும் சரி சூதர் என்னும் முனிவரால் நைமிச ஆரண்யத்தில் செய்யும் பிரசங்கத்தின் பதிவாகவே இருக்கும்.

இந்த சூதருக்கு சொன்னவர் வைசம்பாயனர்.

இராமாயணம், மஹாபாரதம் ஆகியவை வெவ்வேறு யுகங்களில் சொல்லப்பட்ட கதைகள் என்று சொல்லப்பட்டாலும் புராண சமாச்சாரங்கள் பிற்காலத்திலேயே அவற்றில் புகுத்தப்பட்டுள்ளது தெளிவாகத் தெரியும். காரணம் இருக்கிறது.

சந்திர வம்சமும் சூரிய வம்சமும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சூரிய வம்ச பட்டியலையும், சந்திர வம்ச பட்டியலையும் இணைத்துப் பார்த்தால் இது புரியும்.

புராணங்கள் மகாபாரத காலத்திற்குப் பிந்தியவை என்பதற்கு ஆதாரமே அவை கிருஷ்ணன் வரை எல்லாவற்றையும் இறந்த காலத்திலேயே குறிப்பிடும்.

அதற்கும் மேலாக

இராமாயணத்திலும் சரி, மகாபாரதத்திலும் சிவனே முக்கிய கடவுளாக அறியப்படுகிறார். பிற்காலத்தில் கதாநாயகர்கள் தெய்வமாக்கப்பட்டு விஷ்ணு உள் நுழைக்கப்பட்டிருப்பதாக அப்பட்டமாக தெரியும். இதற்கு நீங்கள் 18 புராணங்களை படித்து பின்னர் மகாபாரதம் இந்தக் கோணத்தில் படித்தால் புரியும்.

உதாரணமாக இராமர் சிவனை வணங்குவார். ஆனால் நமக்கு காட்டப்படும் வடிவம் அவர் நாமம் போட்டிருப்பார். கிருஷ்ணனும் சிவனை வணங்குவார், ஆனால் நமக்காக நவீன கிருஷ்ணன் நாமமே போடுகிறான்.

புராணங்களில் இருந்து மசாலாக்கள் ஆங்காங்கே சரியாக இணைத்து மகாபாரதம் என்னும் 8000 செய்யுள் கொண்ட கதை ஒரு இலட்சம் செய்யுள்களாக விரிக்கப்பட்டிருக்கிறது. கிளைக்கதைகள், புராணங்களில் வரும் வம்ச வரலாறுகள், புவியியல் வர்ணனைகள் இப்படி பலவும் சேர்த்து கதையை முழுதும் வர்ணம் மாற்றி இருக்கின்றனர். அல்லிராணியின் கதை சித்ராங்கதை கதையாக மாறியது, அரவான் கதை மாற்றப்பட்டது, இப்படி பல கதைகள் நமது நாடோடிக் கதைகளாக நின்றுவிட்டன. த்ரௌபதி பலரின் குல தெய்வமாக சிறுதெய்வமாக வணங்கப்படவும் அடிப்படைக் காரணம் இருக்க வேண்டுமல்லவா?
 
தாமரை, மிக அருமையான அலசல். சொல்ல வார்த்தை இல்லை.

1. சிவன் முழு முதற் கடவுளா அல்லது விஷ்ணு ஆதி பகவனா என்பது ஒரு தேநீர் குடுவையின் உள்ளே புயல் போல. அது இருந்து கொண்டு தான் இருக்கும். சிவனை வைணவர் பழிப்பதும் , வைணவரை சைவர் பழிப்பதும்இந்து மதத்திற்குள் சகஜம்.

இருப்பினும் , சிவா விஷ்ணு பிரச்னை நமக்கெதற்கு ? இது எல்லாம் அந்த காலத்து ஆன்மிக அரசியல். அந்த கால அரசர்களை கவர, ஆன்மிக பெரியார் போட்ட சண்டை.

திருமழிசை காலத்தில் சமய பிரச்னை நிறைய. சண்டை போட்டார் இப்படி. விஷ்ணு தான் முழு முதல் என்று போட்டார் ஒரு போடு.

நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்,
- யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து. என்றார்

பார்த்தார் ஒரு நாயன்மார் : ( யார் முதலில் பார்த்தார்களோ ? )

கிடையவே கிடையாது. சிவன் தான் ஆதி என்றார் திருநாவுக்கரசர் .

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே.

பிற்பாடு, இந்த சமயச்சண்டைகள் மிக குறைந்து விட்டன. சமாதானம் .

பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவர் அங்கத்தான் திரிவரேனும் ஒருவன்
ஒருவரங்கத்து என்றும் உளன்'.

- என்றார் ஒரு ஆழ்வார் (பொன்போன்ற மேனியும் பின்னிவிட்ட சடையும் கொண்ட சிவபெருமானும், நின்று கொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், இரண்டு உடல்களில் திரிவார்கள் என்றாலும் ஒருவரில் ஒருவர் என்றும் உளர். என்பது பொருள் )

''தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் அப்பேர் - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்'' .

- என்றார் இன்னொரு ஆழ்வார் .

அத்வைதம் நிறுவிய ஆதி சங்கரர் இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும்பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்தார்.

மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், போன்ற வைணவ புகழ் பாடும் நூல்களையும் இயற்றியுள்ளார்.

இன்றும் சிவராம கிருஷ்ணன், சங்கர நாராயணன் என்ற பெயர்கள் இரு சமயமும் ஒன்றே என்பதை சொல்கிறதே. அது ஒரு புறம் இருக்கட்டும்.

2. இன்னொரு விஷயமும் கவனித்தேன். இடை செருகல் பற்றி. இடைச்செருகல் இல்லாத சிறந்த இலக்கியம் உண்டா என்ன ? ஷேரிங் இல்லாத நல்ல காவியம் உண்டா என்ன? நல்ல வேளை, அந்த காலத்தில் முக நூல் இல்லை, இருந்திருந்தால், அவனவன் ஒரு மகா பாரதம் போட்டிருப்பான். தன் சித்தாந்தத்தை இடை செருகல் செய்திருப்பார்கள்.

வியாசர், சூதர் , வய்சம்பாயனர், பரித்சித்து, ஜனமேஜயன் என வழி வழி வாய் வழி, செவி வழி வந்த காவியங்களில் ஒன்றே , மஹா பாரதம். அதில் இடைச்செருகல் கட்டாயம் இருக்கும்.

உங்கள் கருத்து மிகச்சரியே. மிக நுண்ணியமாக அலசி உள்ளீர்கள். நன்றி தாமரை.

இருப்பினும் உங்கள் ஆய்வுக்கு வாருங்கள், பாரதப் போர் எப்போது நடை பெற்றது? அல்லது உட்பொருளாக நீங்கள் நடந்த காலத்தை சொல்லி விட்டீர்களா? துவாபர யுகம், கலி யுகம் இதெல்லாம் எப்போது ஏதேனும் கி மு அல்லது கி பி என உண்டா? :)
 
Last edited:
வானியல் முறையிலேயே நடந்த காலத்தை அறியும் முயற்சியில் இருக்கிறேன் முரளி... சற்று நிறைய படித்து சில பல சூத்திரங்ககள் அறிய வேண்டியதுள்ளது, சில வாரங்கள் ஆகலாம்.
 
வானோக்கி வெண் தாமரை மலரும் –இத்திரியில்
வானோக்கி பின் தாமரை மலரும் :)

நன்றி தாமரை :icon_b:
 
மன்றத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும் பொக்கிஷ திரிகள் சில இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக சொல்லலாம்.
 
மகாபாரதத்தை பற்றி தாமரை எழுத, அதை பற்றி முரளி பல கேள்விகள் எழுப்ப ஆரியம் திராவிடம் பக்கம் விவாதம் போய் சைவம் வைனவம் திசையிலும் பயனித்து இந்த திரியை கலகலப்பாக்கி இருக்கிறது. என் நினைவிலிருந்த சிலவற்றை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மகாபாரதப்போர் எப்ப நடந்தது எங்கே நடந்தது என்று இன்றைய விஞ்ஞானம் மூலம் கண்டறிய முடியும் என்று ஒரு விஞ்ஞானி என்றோ ஏதோ ஒரு பத்திரிக்கையில் எழுதி இருந்ததை நான் படித்த நினைவு. அந்த தியரி இதுதான்.

மகாபாரதப்போரில் ஒரு இடத்தில் சூரிய கிரனகத்தை கிருஷ்னர் வர வைப்பார். அது தான் உலகின் முதல் சூரிய கிரகனம் அன்றிலிருந்து தான் சூரிய கிரகனம் ரெகுலராக வந்து கொண்டிருப்பதாக மகாபாரதத்தில் குறிப்பிட்டிருக்காம். சூரிய கிரகனம் எப்ப வரும் அது எங்கே முழுமையாக தெரியும் என்பதை கண்டுபிடிக்க இன்றைய விஞ்ஞானம் உதவுகிறது. சிறந்த சாப்ட்வேர் எழுதி இதே ரிசர்சை பின்னோக்கி நகர்த்தினால் முதல் சூரிய கிரகனம் இந்த ஜோனில் எப்ப ஏற்பட்டிருக்கும் அது எங்கே தெரிந்திருக்கும் என்று அரிய முடியுமாம். அதை வைத்து மகாபாரதப்போர் நடந்த காலம் + நடந்த இடத்தை கண்டறிய முடியும் என்று ஒரு விஞ்ஞானி என்றோ எழுதியதை படிச்ச நினைவு.

பல காலம் கழிச்சு வந்து தமிழ் மன்றத்தில் இந்த திரியில் கருத்து பதித்தது எனக்கு சந்தோஷம்.
 
பல காலம் கழிச்சு வந்து (5 வருட இடைவெளி) தமிழ் மன்றத்தில் இந்த திரியில் கருத்து பதித்தது எனக்கு சந்தோஷம்.
 
வாத்தியாரே நான் அதே விஷயத்தை வச்சுதான் கணக்கு போட்டுகிட்டு இருக்கேன்.

மகாபாரதத்தில் அங்கங்க்கே வியாசர் கிரக நிலைகளஈ சொல்றார்.

அவர் சொன்னபடி பார்த்தால் வைகாசி மாதம் கடைசி நாள் களப்பலி கொடுக்கப்படுகிறது. அன்று அமாவாசை. அப்பொழுது ஒரு சூரிய கிரஹணம் உண்டாகிறது. அப்பொழுது சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கிறது. அதற்கு முன்பு வைகாசி மாதம் பௌர்ணமி அன்று அதாவது சந்திரன் விசாக நட்சத்திரத்தில் இருக்கும்பொழுது சந்திர கிரஹணம் உண்டாகி இருக்கிறது. அந்த பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடைப்பட்ட காலம் 13 நாட்களாக இருந்திருக்கிறது. அதன்பின் துரியோதனுடன் பீஷ்மர் வியூகம் பற்றி விசாரித்தபோது சந்திரன் மக நட்சத்திரத்தில் இருந்திருக்கிருது. ஆனி மாதம் பௌர்ணமி அன்று அதாவது களப்பலி கொடுத்து 15 ஆம் நாள் பௌர்ணமி அன்று முதல் நாள் போர். அன்றுதான் ஜேஸ்ட நட்சத்திரம் எனப்படும் கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் இருந்த பொழுது கீதா உபதேசம் நடக்கிறது. இதை வட நாட்டவர்கள் தவறாக மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.

அடுத்து 14 ஆம் நாள் அமாவாச திதி ஆகும். அன்று நடந்த போரில்தான் ஜெயத்ரத வதம் நடக்கிறது. வழக்கமாக ஒரு சூரிய கிரகணமும் ஒரு சந்திர கிரஹணமும் அடுத்தடுத்து வருவது சாத்தியம். ஆனால் இரு சூரிய கிரணங்கள் அடுத்தடுத்து வருவது சாத்தியமல்ல. ஆனால் வால் நட்சத்திரம் சந்திரனுக்கு அருகில் சென்றதால் சந்திரனிலும் பூமியிலும் எரிகற்கள் விழுந்தன. சுனாமி எழுந்தது. சந்திரனின் கறைகள் மாறின என சொல்லி இருப்பதால், சந்திரனின் சுற்றும் வேகம் தற்காலிக மாற்றம் அடைந்ததால் 14 ஆம் போர் அன்று அமாவாசை. அன்று இரண்டாம் சூரிய கிரஹணம் உண்டாகியது, அதாவது ஆனி மாதக் கடைசியில் சூரியனும் சந்திரனும் மிருகசீரிஸ நட்சத்திரத்தில் இருந்த பொழுது கிரஹணம் மாலையில் அஸ்தமனத்துக்கு ஒரு நாழிகை முன்பு மீண்டும் சூரிய கிரஹணம் உண்டாகி இருக்கிறது.

வால் நட்சத்திர நிகழ்வு உண்மையானால் முதல் சூரிய கிரகணம் கணக்குகளால் புரிபடாது, ஆனால் ஆனி மாத இறுதி நாளில் அமாவாசை அன்று உண்டான சூரிய கிரகணம் இன்றைய கணக்குகளுக்கு புலப்படும்.

அன்று அது சூரிய கிரஹணம் எனத் தெரியாததற்குக் காரணம் சந்திரனின் தற்காலிக மாற்றத்தை துரியோதனின் ஜோதிடர்கள் சரியாக கவனிக்கத் தவறியதே காரணம் ஆகும்.

களப்பலிக்கு முன்பே சந்திரனில் மாற்றம் உண்டாகி இருந்ததை வியாசர் சொல்லுகிறார். அதனால் சகாதேவன் குறித்துக் கொடுத்த அமாவாசைக்கு துரியோதனன் காத்திருக்க, வால் நட்சத்திரம் மிக அருகில் கடந்து போன மாற்றத்தினால் பதிமூன்று நாட்களில் அமாவாசை வந்துவிட, இதை கணக்கிட்ட கிருஷ்ணன், அமாவாசை என நினைக்கப்பட்ட நாளுக்கு முதல் தினமே அமாவாசை வந்துவிட்டதை அறிந்து முதல் நாள் களப்பலி கொடுக்க வைக்கிறான்.

ஆக அடுத்தடுத்து இரு சூரிய கிரஹணங்கள், ஆனி மாத அமாவாசையில், மாலை 5:30 க்கு மேல் குருஷேத்திரத்தில் கிரஹணம் என்ற கணக்குகளைக் கொண்டே ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

அனைத்து ஜோதிடர்களும் மாதக் குழப்பத்தில் மாட்டிக் கொண்டதால் சரியான பதில் எழுதவில்லை என்பது என் கணிப்பு
 
பிரமிப்பு..

மஹாபாரத கள கால ஆய்வு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.. பாராட்டுக்கள்..
 
இந்த ஆய்வின் படி பார்த்தால் சனியின் நிலை மாத்திரம் கலியுகப் பிறப்பிற்கு ஒத்து வரவில்லை, செவ்வாய் ஆராயப்பட வேண்டும்.

கலியுகம் பிறந்த போது

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியவை மேஷ ராசியிலும், கேது மட்டும் துலா ராசியிலும் இருந்ததாக பஞ்சாங்கங்கள் சொல்லும்.

உகாதி அன்று சூரியன் மேஷ ராசியில் இருந்திருக்க ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன் சந்திரமான காலண்டரில் நடந்தது அதிக சித்திரை. இது நிஜ சித்திரை பிறப்பு..

ஒரு சந்திர மாதத்தில் சூரியன் இராசி மாற்றம் நடவாது போகும். அது எந்த ராசிக்கு அடுத்து மாறுமோ அந்த பெயரிலான அதிக மாசம் என அது கருதப்படும். உதாரணமாக சித்தி மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குச் செல்ல வேண்டும். ஆனால் அதற்குமுன் அம்மாவாசை வந்துவிட்டது. அடுத்த மாதம் நிஜ சித்திரை. இந்த நாளின் போதே கலியுகம் தோன்றியிருக்க வேண்டும்.

அமாவாசைக்கு அடுத்த நாள் என்பதால் சந்திரன் சூரியன் உடனேயே இருக்கும்.

புதனும் சுக்கிரனும் சூரியனை விட்டு அதிகம் விலகாது என்பதால் அவை மேஷ ராசியிலேயே இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஓகே.

மஹாபாரத யுத்தம் முடிந்து தர்மன் ஆட்சிக்கட்டில் ஏறி 36+ ஆண்டுகள் கழிந்த பிறகு கலியுகம் பிறந்தது என்பது தகவல்.

ராகு கேது ஆகியவை ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை ராசி மாறும் என்பதால் 18 வருடங்களில் முழுச் சுற்று வரும், எனவே 36 வருடங்கள் என்பது இரண்டு சுற்றுகள். ஆக ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளிலேயே இருக்கும்.

ஆராயப்பட வேண்டியவை - செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே. இவற்றை ஆராய்ந்து முடித்தால் மஹாபாரதத்தின் காலம் பஞ்சாங்க ரீதியாக சரி பார்க்கப்பட்டு விடும்.

மற்ற கிரகங்களின் சுற்று வேகம் மாறுபடும். காரணம் அவை வெளிச்சுற்று கிரகங்கள். அவற்றை நாம் 1 ராசி அளவில்தான் கணக்கிட இயலும். உதாரணமாக சூரியனுக்கு 90 டிகிரிக்குள் வெளிவட்ட கிரகங்கள் போது அது வேகமாகவும், அதற்கு மேலாக இருக்கும் பொழுது மெதுவாகவும் பயனிக்கும். மேலும் சூரியனில் இருந்து 90 டிகிரிக்கு மேல் தள்ளி இருக்கும் பொழுது மட்டுமே பூமியின் நிலையைப் பொருத்து வக்ரகதியும் உண்டாகும்.
 
பாரதப்போர் முடிந்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் எத்தனை காலம் அரசாண்டனர்? போர்க்காலத்தில் அபிமன்யு மனைவி கருவுற்றிருந்தாள். அந்த கருவே பரீட்சித்து மன்னன். அந்த மன்னனுக்கும் ஒரு பிள்ளை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இவர்கள் எத்தனை காலம் வாழ்ந்தார்கள்? இவர்கள் காலத்திலேயே கலியுகம் பிறந்ததாக நம்பலாம். நான் கர்ணபரம்பரையாக ஒரு கதை கேள்விப்பட்டேன்

பீமன் ஒரு நாள் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டே தர்மரிடம் வந்து "அண்ணா கலி பிறந்தாச்சு." என்றாராம் தர்மர் உடனே "அதை வேறெங்கு சென்று காணவேண்டும். என் கண் முன்னே தெரிந்துவிட்டதே . பீமா! இதற்கு முன் என்று நீ என் முன் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக்கொண்டு வந்திருக்கிறாய்?' என்று தம்பியை பார்த்து சொன்னாராம்.

அதாவது பாண்டவர்கள் வாழும் காலத்திலேயே கலி வருவதற்கான சாயல்கள் தெரிந்துவிட்டன. மேலும் கலி ஒரே நாளில் பிறக்கவில்லை . கொஞ்சம் கொஞ்சமாக பிறந்ததாக நான் கருதுகிறேன். நவகிரகங்களை வைத்து ஆய்வது சரியான முடிவை தருமா என்று தெரியவில்லை.காரணம் துவாபர உலகத்தில் மனிதர்களின் வலிமை திறமை நினைவாற்றல் எல்லாம் அதிகமாகவே இருந்திருக்கின்றன. இவை எல்லாம் க்ருதயுகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்ததாக வேதங்களின் கூற்று.

உதாரணம் க்ருத யுகத்தில் மனிதனின் உயரம் 24 அடி அடுத்த திரேதாயுகத்தில் 18 துவாபர யுகத்தில் 12 கலியுகத்தில் 06 அதுவும் இப்பொழுது குறைந்துகொண்டு வருகிறது. ஒரே வழி உண்மையை தவம் செய்து அறிந்துகொள்வதே.
 
Back
Top