என் விருப்பம்

ravisekar

New member
என் விருப்பம் - 1


அறியாவயதில் மணம்..

அங்கேயே தேங்கிவிட்ட அவள் மனம்..







நடந்தது திருமணமா? சிறுகனவா?

விளங்கவியலாச் சிறுமி அப்போது..







அறியும் வயதில் சொன்னார்கள்

''அவன்'' இனி இல்லையாம்..

மறைந்துவிட்டானாம்..




பூ மலருமுன்னே காய்ந்தால்?

விவாகம் உணருமுன்னே விதவையானால்?










பால்யவிதவையான பாக்யலட்சுமியின் கேள்விகள் இவை:




கனவில் வந்தவன் யாரெனெக் கேட்டேன்.

கணவர் என்றார்..




கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்

சென்றது ஏன்?




-----------------------------------------------




வாழ்க்கை என்றால் இன்பம் பாதி துன்பம் பாதிதானே?




எனக்கு மட்டும்----




இன்பம் கனவில்..




துன்பம் எதிரில்..




ஏன்?




---------------------------------------------------




பின் அவளின் self -appraisal of her life




இளமையெல்லாம் வெறும் கனவு மயம்

இதில் மறைந்தது சிலகாலம்




தெளிவும் அறியாது முடிவும்தெரியாது

மயங்குது எதிர்காலம்..




----------------------------

(அ)பாக்கியலட்சுமியின் சுயபரிசோதனை இங்கே.




https://www.youtube.com/watch?v=Rw8rpXctl78
 
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்

நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்

அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்


உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்




https://www.youtube.com/watch?v=2HXqUYrXaJE
 
சில திருமணங்கள் இருமனங்களுக்குள் மட்டும் நடக்கும் ... வசந்த வைபவம்..




அதைக் ' காந்தர்வ மணம்' என்கிறது இலக்கியம்..










கவியரசன் தீட்டிய காந்தர்வ மணப் பாடல்... இதோ..







பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்

பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்

அட நிச்சயம் செய்தபின் நடக்கும் கல்யாணம் ?

கதையில் வரும் காட்சிக்கு ஏற்ற கற்பனை.

ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட

ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட

வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக

வந்து விட்டேன் கண்ணா மணமகளாக

என்று சரணத்தில் சூரியன், மேகங்கள் பூந்தென்றல் சாட்சியாக மணமகளாகிறாள்.

ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க,

ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க







https://www.youtube.com/watch?v=PgBAx_bl1YE
 
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது

கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் - பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும் - கொண்ட
பள்ளியறைப் பெண் மனதில் போர்க்களமாகும்

காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவைக்கூட விடுவதில்லையே




https://www.youtube.com/watch?v=vOm1VbH843A
 
மன்மதன் மாளிகையில்

மந்திர மாலைவேளை..




மாணிக்கக் கட்டில்

அனிச்ச மலர் மெத்தை

வா வா என அழைக்க

வாசலில் தோரணம்..







உதயம் வரை உன்னத லீலை..

விடிந்த பின்?

முடிந்தால் நீராட மட்டும் இடைவேளை!!!

https://www.youtube.com/watch?v=i6UeorX-aVo
 
https://www.youtube.com/watch?v=FpHgR7izIvI







என்ன ஆனால்...




மேற்கே சூரியன் உதிக்கும்?




-----------------------------------------------------------




மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே




சுடும் வெயில் கோடை காலம் கடும் பனி வாடை காலம்

இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?




இலை உதிர் காலம் தீர்ந்து எழுந்திடும் மண்ணின் வாசம்

முதல் மழை காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே




ஓ... மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ

பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ





ஓ... கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்

காணாமலே போகும் ஒரே நிலா




ஓ... கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்

பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா




இனி எதிரிகள் என்றே எவருமில்லை

பூக்களை விரும்பா வேர்களில்லை

நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே




இது நீரின் தோளில் கை போடும்

ஒரு சின்ன தீயின் கதையாகும்

திரைகள் இனிமேல் தேவை இல்லையே




வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்

நீதானென்று பார்த்தேனடி சகி...

பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே

இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி...




இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ

காற்றே சிறகாய் விரிந்திடுமோ

நிலவின் முதுகை தீண்டும் வேகமோ...

அட தேவைகள் இல்லை என்றாலும்

வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்

மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ...
 
https://www.youtube.com/watch?v=tQ55acTpSWs







தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..?


ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..



நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே
நேசமப் பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா ...

இதய வானிலே இன்பக் கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா ...


ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
 
https://www.youtube.com/watch?v=NnAb61J7SMo&spfreload=10










நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் .. பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் பூமுகம் மறக்கவில்லை …



விண்ணை தொடுகின்ற முகிலை ..
வெள்ளி நிலவை .. மஞ்சள் நட்சத்திரத்தை ..
என்னை தேடி மண்ணில் வரவழைத்து உன்னை காதலிப்பதை உரைத்தேன் ..
இன்று பிறக்கின்ற பூவுக்கும் .. சிறு புல்லுக்கும் ..
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் ,
இன்னும் சொல்லவில்லையே இல்லையே …
லட்சம் பல லட்சம் இங்கு தாய் மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே ..
பந்தி வச்ச வீட்டுகாரி பாத்திரத்த கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே
அது போலே ..


சின்ன சின்ன செல்ல குறும்பும் ,
சீனி சிரிப்பும் , என்னை சீரழிக்குதே ..
விறு விறுவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே ..
உன்னை கரம் பற்றி இழுத்து ,
வளை உடைத்து , காதல் சொல்லிட சொல்லுதே …
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து
என்னை குத்தி குத்தியே கொல்லுதே …
காதல் எந்தன் வீதி வழி ,
கைய வீசி வந்த பின்னும்
கால் தடுக்க காத்திருப்பது எதனாலே ?
பிப்ரவரி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திருக்கும் , அது போலே
 
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட

செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே
தங்கரதம் வந்தது வீதியிலே


மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் போதைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட
தங்கரதம் வந்தது வீதியிலே...

திரைப் படம்: கலைக்கோவில்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா
 
இவை அனைத்தும் மாயையே...
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்......?
 
Back
Top