மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி

Keelai Naadaan

New member
தமிழ் மக்களால் மெல்லிசை மன்னர் என போற்றப்படும் திரு எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள் நேற்று அதிகாலை காலமானார்.

அவருடைய உடல் மறைந்தாலும் அவர் இசையமைத்த பாடல்கள் எந்த நேரமும் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது உண்மை.

திரு எம்.எஸ்.வி பற்றி இசையில் பாமரனான நான் சொல்வதை விட இசைஞனி இளையராஜா சொல்வதை இந்த வலைச்சுட்டியில் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=2iUm-CJ6lII

திரு இளையராஜா அவர்கள் சொல்வது போல் ஒரு அற்புதமான வரி கூட இசையோடு கலந்து கொடுக்கும்போதுதான் அதன் ஆழம் புரிகிறது.

திரு எம்.எஸ்.வி அவர்களுடைய இசையில் உருவான சாகா வரம் பெற்ற சில பாடல்களை இங்கே நினைவு கூர்கிறேன்.

மலர்ந்து மலராத பாதி மலர் போல....
தாழையாம் பூ முடிச்சு .....
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்....
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே....
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்.....
அச்சம் என்பது மடமையடா.....
கண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன்....
இந்திய நாடு என் வீடு....
யாதும் ஊரே யாவரும் கேளீர்.....
நெஞ்சம் மறப்பதில்லை......
பொன்னை விரும்பும் பூமியிலே.....
எல்லோரும் கொண்டாடுவோம்.......
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.........
அதோ அந்த பறவை போல.....
கடவுள் ஒரு நாள் உலகை காண......
காதொடுதான் நான் பாடுவேன்........
மயக்கமா கலக்கமா..........
கிருஷ்ண கானத்தில் வரும் அத்தனை பாடல்களும்......

எத்தனை பாடல்கள்... எதை சொல்ல..? எதை விட..?

எத்தனையோ விருதுகள் பெற்றிருக்கிறார் என்றாலும் பத்ம பூஷன் போன்ற விருதுகள் வழங்காதது அந்த விருதுகள் செய்த துரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
 
!காற்றை இனிப்பாக்கிய கலைமன்னன் .
கர்வம் இல்லாத மனம் கொண்ட இசைமன்னன்.

சொல்லத்தான் நினைக்கிறேன்..
முத்துக்களோ கண்கள்..
நிலவு ஒரு பெண்ணாகி..
அந்த நாள் ஞாபகம்..
யார் அந்த நிலவு
இயற்கை என்னும் இளைய கன்னி
அந்தமானைப் பாருங்கள்..

இவர் தொட்டால் மளிகைப்பட்டியலும் இன்னிசைப் பாட்டாகும் - வாலி சொன்னது.
இவரால் தமிழர் செவி தேன் அறிந்தது.
 
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இவருடைய இசையில் வெளியான பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள், காலத்தால் அழிக்க முடியாதவை. தமிழ் இருக்கும் வரையில் இவருடைய புகழ் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.
 
நேற்று சென்னை காமராஜர் அரங்க்த்தில் இளையராஜா தம் குழுவினருடன் எம் எஸ் விக்கு இசை நினைவு மரியாதை செலுத்தினார். அழைக்காவிட்டாலும் ரஜினி வந்து நெகிழ்த்துவிட்டார்.
 
Back
Top