உகந்த அலைபேசி?

2015 இன் முதல் காலாண்டிலும் சாம்சுங் விற்பனையில் முன்னணி..
 
ஆதவா, ஆண்றோயிட் ஃபோனில் எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறீர்கள்?
 
நீங்கள் சொன்ன இரண்டு போன்களையே உதாரணம் எடுத்துக் கொண்டால்

சாம்ஸங் 32 ஜிபி ரூ. 49500 - ஆப்பிள் 16 ஜிபி ரூ. 53500 .

ஆதவா நீங்கள் எந்த அடிப்படையில் விலைகளை கூறுகின்றீர்களோ தெரியவில்லை, ஆனால் நானிருக்கும் நாட்டிலான கைபேசி விலைகளுக்கு கீழுள்ள லிங்கை அழுத்தவும்....!!

http://www.omantel.om/OmanWebLib/In...tPhones_promotion.aspx?linkId=930&MenuId=1148

நான் முதலில் கூறியதுதான், விலைகளில் பெரிய மாற்றம் இல்லை, முக்கியமாக மாதாந்த கட்டணம் மூலமாக வாங்கும் போதும்....!
 
ஆதவா, ஆண்றோயிட் ஃபோனில் எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறீர்கள்?

அதற்கு தனி செயலி இருக்கிறது... நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். ஐபோன் போலவே.. விண்டோஸுக்குத்தான் கிடையாது.

ஆதவா நீங்கள் எந்த அடிப்படையில் விலைகளை கூறுகின்றீர்களோ தெரியவில்லை, ஆனால் நானிருக்கும் நாட்டிலான கைபேசி விலைகளுக்கு கீழுள்ள லிங்கை அழுத்தவும்....!!

http://www.omantel.om/OmanWebLib/In...tPhones_promotion.aspx?linkId=930&MenuId=1148

நான் முதலில் கூறியதுதான், விலைகளில் பெரிய மாற்றம் இல்லை, முக்கியமாக மாதாந்த கட்டணம் மூலமாக வாங்கும் போதும்....!

நான் univercell.in தளத்தில் பார்த்து எழுதினேன். பெரிய அளவில் மாற்றம் இல்லைதான், ஆனால் ஆப்பிளைக் காட்டிலும் எஸ்6 சில விஷ்யங்களில் மேம்பட்டதாகத் தோணிற்று.
 
அதற்கு தனி செயலி இருக்கிறது... நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். ஐபோன் போலவே.. .

ஐ ஃபோனுக்கு எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை, அந்த வகையில் அவர்கள் தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.
 
ஆதவா,

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நானும் அண்ட்ரோயிட் விசுவாசிதான், சாம்ஸூங், சொனி என மாறி, மாறி பல மொபைல்களை யூஸ் பண்ணி முடியாமல் ஐ-போனுக்கு மாறினேன். கலேக்ஸி எஸ் 2, 3, 4 மூன்றும் யூஸ் பண்ணிதில் நான் அறிந்தது எனது பாவனைக்கு சாம்ஸூங் அலைபேசி ஒரு வருடத்துக்கு மேல் தாக்கு பிடிக்காது என்பதே. பின்னரே ஐ-போனுக்கு (5 S) மாறினேன் மனது நிறைவாக உல்ளது சாம்ஸூங் கலேக்ஸி 5 வாங்கியிருந்தால், இப்போது 6 உம் வாங்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பேன். அப்படிப் பார்த்தால் விலை அதிகமென்றாலும் ஐ-ஃபோன் நீடித்து உழைப்பதால் எனக்கு இலாபம் தான்....

இயங்கு தள அப்டேட்டுகள் ஆண்ட்ரோயிட் பழைய மொடல்களுக்கு கிடைப்பதில்லை, ஆனால் ஆப்பிள் பொதுவாக எல்லா மொடல்களுக்கும் அப்டேட்ஸ் கொடுப்பதுண்டு....
 
ஒருவருடம் மட்டுமே அதன் ஆயுள் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே என் தம்பி ப்லாக்பெர்ரிக்கு மாறிவிட்டான், ஆப்பிள் நீடித்துழைத்தால் நிச்சயம் லாபம் தான்,

பின்குறிப்பு: இயங்குதள அப்டேட்டுகள் பழைய மாடல்களுக்கும் விண்டோஸ் வெளியிடுகிறது (8க்குப் பிறகு) ஆப்பிளை பின் தொடருகிறது.
 
htc பற்றி ஒருத்தரும் சொல்லக் காணோம்

நான் முதல் ஸ்மார்ட் போனை எச்டிசியில்தான் வாங்கினேன், அது விண்டோஸினுடையது, பிறகு தம்பி ஆண்ட்ராய்ட் எச்டிசி வாங்கினான், எச்டிசி பொறுத்தவரை அது ஆண்ட்ராய்டை நம்பி இருப்பதால் என்னைப் பொறுத்தவரை சாம்சங்கும் எச்டிசியும் ஒன்றுதான், ஒரு சில functions தான் எச்டிசியில் மாறியிருக்கும். இலகு என்று பார்த்தால் எச்டிசி நன்றாக இருக்கும். பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, எச்டிசி ஒன் வரை இயக்கிப் பார்த்திருக்கிறேன். (கோவையில் ப்ரூக்ஃபீல்ட் சென்றால் புதிதாக வெளிவந்திருக்கும் மொபைலை இயக்கிப் பார்ப்பதுதான் பொழுதுபோக்கு.) கேமரா குவாலிட்டியில் சாம்சங் அல்லது விண்டோஸின் 700க்கு மேற்பட்ட மாடல் எண்கள் ஆகியவைதான் பெஸ்ட். எச்டிசி கொஞ்சம் டம்மிதான், எம்9 எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை,

அப்பறம், சொல்ல வேண்டிய ஒரு விஷயம், எந்த மொபைலிலும் ப்ரவுஸர் உறுப்படியானது கிடையாது. கோபத்தை வரவழைக்கும் வடிவமைப்பு...உதாரணத்திற்கு இரண்டு தளங்களை அடுத்தடுத்த டேப் tabகளில் திறக்கிறீர்கள் என்றால் ஒன்றை மாற்றி இன்னொன்று செல்லும்போது ஒவ்வொரு முறையும் loading ல் இருக்கும். ப்லாக்பெர்ரி இந்த விஷயத்தில் பரவாயில்லை ஆப்பிளை மட்டும் test செய்யவில்லை.
 
மனைவி சொல்லே மந்திரம் என்பது சரிதான் போல..

"உங்களுக்கு அப்பிள்தான் ஒத்து வரும்
மற்ற ஒன்றும் ஒத்துவராது" என்று ஆரம்ப்பத்திலேயே சொல்லிட்டாங்க..

கடைசீல அந்த முடிவுக்குத்தான் நானும் வந்திடுவேன் போல..
 
ஏன்பா... நெக்சஸ் 6 அப்படி நு நடுவில ஒருத்தன் கத்தினானே... யாரும் கண்டுக்கவே இல்லியே...?
 
சாம்சுங் 'கேலக்ஸி எட்ஜ் 6' வந்துள்ளதே, யாரும் உபயோகித்துப் பார்த்ததுண்டா? வடிவமைப்பும், டிஸ்ப்ளேயும் கவர்ச்சிகரமாக உள்ளது.
 
விண்டோஸ் இப்பொழுது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது மிகவும் முக்கியமானதும் கூட,

வரவிருக்கும் விண்டோஸ் 10ல் ஐபோன், ஆண்ட்ராய்ட் செயலிகள் வேலை செய்யுமாம்... ஆக உலகின் அதிக செயலிகள் கொண்ட இயங்குதளமாக விண்டோஸ் 10 இருந்திடும்... என்னவொரு பாய்ச்சல்... தற்போது சில ஆயிரங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

@அமரன்...
அவர் அதுதான் உபயோகிக்கிறார்.... ஹி ஹி
 
Back
Top