உகந்த அலைபேசி?

அமரன்

Moderator
Staff member
தற்போது வைத்திருக்கும் ஆப்பிள் எங்க முதலாளி கிரிஷாண் கையில் எந்நேரமும் அகப்பட்டு பென்சன் கேட்குது. புதிய அலைபேசி வாங்கலாம்னால் ஆப்பிளை விட்டு சாம்சுங் , htc என்கிற இருவரும் முன்னுக்கு வந்து சபலப்படுத்துகிறார்கள்.

நீங்க சொல்லுங்க..

எதை வாங்கலாம்..

APPLE? SAMSUNG? HTC

வேறு தெரிவுகள் இல்லை
 
எனக்கென்னவோ ஆப்பிளில் பெரிதாக எதுவுமில்லை என்றுதான் தோணுகிறது. அதாவது அதன் விலைக்கு ஈடாக சிறப்பானவைகள் என்று பெரிதாக எதுவுமில்லை. நீங்கள் சாம்சங் அல்லது எச்.டி.சியே தெரிவு செய்யலாம். இரண்டுமே நல்ல கம்பனிகள் தான், ஆப்பிளைக் காட்டிலும் விலை குறைவில் நிறைய இருக்கின்றன. இந்தியாவில் சாம்சங் அதிகம் விற்பனைக்கு போகிறது. நீங்கள் எதாவது ஷார்ட் லிஸ்ட் வைத்திருக்கிறீர்களா?
விண்டோஸ் 10 வந்தபிறகு அதையும் பார்த்துவிட்டு முடிவு செய்யலாமே??
 
ஆப்பிளின் ப்ளஸ் அதன் ஆஃப் ஸ்டோர் தான், கூகிள் ப்ளேயை அதனுடன் ஒப்பீடு செய்ய முடியாது, தரத்திலும் பாதுகாப்பிலும்...
 
ஆப்பிளின் ப்ளஸ் அதன் ஆஃப் ஸ்டோர் தான், கூகிள் ப்ளேயை அதனுடன் ஒப்பீடு செய்ய முடியாது, தரத்திலும் பாதுகாப்பிலும்...

அப்படி என்னதாங்க ஸ்டோர்ல இருக்கு? உண்மையிலயே தெரியாமத்தான் கேட்கிறேன்.
 
ஆதவா..! சமீப காலமாக ஆப்பிள் மேல் நாட்டம் குறைந்து சாம்சங், htc மீது விருப்பம் கூடிட்டுது. htc 9, samsung s6 என்பனவற்றில் ஒரு கண் .. விண்டோஸ் 10 ரிலீஸ் எப்போ?
 
iPhone6 or iPhone6+ இதற்கு இணையானது எதுவும் இல்லை என்னைப் பொறுத்தவரையில்.
 
ஆதவா..! சமீப காலமாக ஆப்பிள் மேல் நாட்டம் குறைந்து சாம்சங், htc மீது விருப்பம் கூடிட்டுது. htc 9, samsung s6 என்பனவற்றில் ஒரு கண் .. விண்டோஸ் 10 ரிலீஸ் எப்போ?

வெல்கம் டூ நான் ஐபோன் யூஸர்ஸ் கம்யூனிடி.... :)

விண்டோஸ் 10 இப்போதைக்கு டெக்னிகல் ப்ரிவ்யூதான் கிடைக்கிறது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை... விண்டோஸைப் பொறுத்தவரை அது இன்னும் ஒண்ணாம் வகுப்புதான், ஆண்ட்ராய் ஐகிளாஸில் போய்க்கொண்டிருக்கிறது. விண்டோஸ் டென் ப்ரிவ்யூவில் பல மாற்றங்கள் உண்டு. என்றாலும் முழுதாக வந்த பின் தான் அதனை விமர்சிக்க முடியும்.
 
iPhone6 or iPhone6+ இதற்கு இணையானது எதுவும் இல்லை என்னைப் பொறுத்தவரையில்.

அண்ணா... என்னைப் பொறுத்தவரையில் ஐபோன் அதன் சிறப்பம்சங்களுக்கு இணையான விலையில் விற்பதில்லை, அதைவிட கூடுதல் விலைக்குத்தான் விற்கிறார்கள். அதை ஒரு உயர்தர வர்க்கத்தினருக்கானதாக மாற்றுகிறார்க்ள் (மாற்றிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்) ஐபோனில் உள்ள அத்தனை அம்சங்களும் ஆண்ட்ராய்டுகளில் கிடைக்கின்றன. எப்போதும் ஆப்பிளுக்கு மதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.... ( அது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது பழமாக இருந்தாலும் சரி ) நான் இதுவரை ஆப்பிளை உபயோகித்ததில்லை. அதனால் யாராவது தெரிந்தவர்கள், ஆண்ட்ராய்டைக் காட்டிலும் ஐபோன் எவ்விதத்தில் உயர்ந்தது என்று விளக்க முடியுமா?
 
ஆதவா..

என் வீட்டில் நான் அப்பிள் பாவனையாளர். மனைவி சாம்சுங் பாவனையாளர். ஃபிசிக்கலி அண்ட் டெக்னிக்கலி அப்பிள் பாவனைக்கு soft. சாம்சுங் கொஞ்சம். கரடு முரடு. ஆனால், ஃபோட்டோ, வீடியோ, எட்டிட்டிங், ஸ்மைலிஸ் போன்ற இன்னபிற அம்சங்கள் சாம்சுங்கை விரும்ப வைக்கும். அதிலும் செல்ஃபி எடுப்போர் சங்கம் சாம்சுங், htc ஐ விரும்பக் காரணம் முன் கமெரா 5 மெஹா பிக்சல் கொடுப்பது இவைதான். அப்பிள் 1.2 தாண்டியதில்லை என்று எண்ணுகிறேன். அதிலும் htc 9 ஆனது 2K தரத்தில் வீடியோ கப்சரிங் தருது..
 
நான் ஆப்பிளும் வைத்திருக்கிறேன், சோனியும் வைத்திருக்கிறேன். அமரன் சொல்லுவதைப்போல ஆப்பிள் உபயோகிக்க சுலபம், மேலும் நிறைவான பாதுகாப்பு. ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று ஆப்பிள் போன் இருந்தால், ஃபேஸ்டைம் இல் முகம் பார்த்து உரையாடுவது நல்ல வசதி. ஆனால்...புகைப்படம் என வரும்போது எனது சோனி எக்ஸ்பீரியாவை மிஞ்ச முடியாது. மகள் லினோவா வைத்திருக்கிறாள்...அவளைப் பொருத்தவரை அதுவே நல்ல போன்.
 
அப்படி என்னதாங்க ஸ்டோர்ல இருக்கு? உண்மையிலயே தெரியாமத்தான் கேட்கிறேன்.

குவாலிட்டி ஆதவா, குவாலிட்டி..!!

கூகிள் ப்ளேயில் கிடைப்பது போன்ற மட்ட ரக ஆப்ஸ் ஒரு போதும் ஆப்ஸ் ஸ்டோரில் கிடைக்காது.
 
குவாலிட்டி ஆதவா, குவாலிட்டி..!!

கூகிள் ப்ளேயில் கிடைப்பது போன்ற மட்ட ரக ஆப்ஸ் ஒரு போதும் ஆப்ஸ் ஸ்டோரில் கிடைக்காது.

விண்டோஸுக்கு வாருங்கள், ஆப்ஸே கிடைக்காது.... :LOL:
 
நான் ஆப்ஸ் வேண்டாமென்று சொல்லவில்லயே, ஆண்ரோயிட் ஒரு திறந்த சந்தையாக இருப்பதால் யாரும் தங்கள் ஆப்ஸை நிறுவலாம், அதில் நன்மை இருந்தாலும் எந்த வித தரக்கட்டுப்பாடும் இல்லாதது பெரும் பிரச்சினை. ஆனால் ஆப்ஸ் ஸ்டோர் அப்படியானதில்லை, தரக்கட்டுப்பாடு நிர்ணயித்து ஆப்ஸை நிறுவுவதால் ஆப்ஸ் ஸ்டோரில் தரமான ஆப்ஸே என்றும் கிடைக்கும். அத்துடன் மூன்றாம் தரப்பின் ஆப்ஸை தன் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவிய பின் அது தொடர்பான பிரச்சினைகளை தம் பிரச்சினைகளாகவே கருதும் இதனால் பாதுகாப்பு அதிகம், ஆண்ரோயிட் போல மூன்றாம் தரப்பு ஆப்ஸின் பிரச்சினைகளுக்கு நாம் பொறுப்பாளிகளல்ல எனக் கூறி விலக மாட்டார்கள்.
 
ஆப்பிள் ஃபோன் விலை அதிகம், சாம்ஸூங் விலை குறைவு எனக் கூறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமே, ஏனென்றால் ஆப்பிள் உயர் முடிவு பொருட்களை மட்டும் உற்பத்தி செய்கையில் சாம்ஸூங் எல்லா வித விலைகளிலும் வெவ்வேறு வித தரத்துடன் அலைபேசிகளை வெளியிடுகிறது. சாம்ஸூங்கின் வேகம் குறைவான ஃபோன்களை ஆப்பிளிடன் ஒப்பிட்டு விலை குறைவென கூற முடியாது ஏனென்றால் சாம்ஸுங்கின் ஆப்பிளுக்கு இணையான அலை பேசிகளின் விலைகள் எப்போதும் ஆப்பிளின் அலைபேசிகளின் விலைகளுக்கு அருகேயே தன் விலைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கும். உதாரணம் கலேக்ஸி எஸ் 3, 4, 5 & 5 எட்ஜ்!.
 
ஓவி... விண்டோஸும் அப்படித்தான். அதனால்தான் ஆண்ட்ராய்ட் அளவிற்கு ஆப்ஸ்கள் மிக மிக குறைவு. ஒவ்வொரு ஆப்ஸும் விண்டோஸ் மார்க்கெட்டில் இருந்து மட்டுமே பெறமுடியும். தவிர ஆப்ஸ்களைப் பெற ப்ரத்யேக ஐடியும் வேண்டும். அது அவுட்லுக் அல்லது லைவ்.காம் போன்ற விண்டோஸ் தளங்களில் இருக்க வேண்டும். ஆப்பிள் மாதிரியே விண்டோஸும் இருக்க முயல்கிறது..

ஆப்பிள் ஃபோன் விலை அதிகம், சாம்ஸூங் விலை குறைவு எனக் கூறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமே, ஏனென்றால் ஆப்பிள் உயர் முடிவு பொருட்களை மட்டும் உற்பத்தி செய்கையில் சாம்ஸூங் எல்லா வித விலைகளிலும் வெவ்வேறு வித தரத்துடன் அலைபேசிகளை வெளியிடுகிறது. சாம்ஸூங்கின் வேகம் குறைவான ஃபோன்களை ஆப்பிளிடன் ஒப்பிட்டு விலை குறைவென கூற முடியாது ஏனென்றால் சாம்ஸுங்கின் ஆப்பிளுக்கு இணையான அலை பேசிகளின் விலைகள் எப்போதும் ஆப்பிளின் அலைபேசிகளின் விலைகளுக்கு அருகேயே தன் விலைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கும். உதாரணம் கலேக்ஸி எஸ் 3, 4, 5 & 5 எட்ஜ்!.

நீங்கள் சொன்ன இரண்டு போன்களையே உதாரணம் எடுத்துக் கொண்டால்

சாம்ஸங் 32 ஜிபி ரூ. 49500 - ஆப்பிள் 16 ஜிபி ரூ. 53500

ஆப்பிளைக் காட்டிலும் சில விஷயங்கள் மேம்பட்டுத்தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஸாமின் வேகம் 3 ஜிபி, ஆப் - 1 ஜிபி,
அளவில் பெரியது,
முதன்மை மற்றும் இரண்டாவது கேமராவும் மேம்பட்டது
சிபியூ ஆப்பிளை விட ஒருமடங்கு வேகம் அதிகம்
பேட்டரி பவரும் அதிகம்.

நீங்கள் இரண்டையும் பற்றி சொன்னதால்தான் இந்த கம்பேரிசன் எழுதினேன். மற்றபடி ஆண்ட்ராய்ட் பாதுகாப்பு குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. முன்பே சொன்னது மாதிரிதான், ஆப்பிள் உயர்தர வர்க்கத்தினருக்கு மட்டுமேயென முடிவு செய்கிறது. மற்றவர்களைப் பற்றிய கவலை ஏதுமில்லை, அதனாலேயே கொஞ்சம் அதிக விலையோ என்று தோணுகிறது.

----------
1. பொதுவாக ஆண்ட்ராய்ட் இயங்குதளம் அதிக ஆப்ஸ்களை இயக்குவதால் வேகம் குறையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். விண்டோஸில் அப்படி ஏதும் நிகழ்வதில்லை, ஆப்பிளும் அப்படியிருக்கலாம். 2. என் தம்பி ப்லாக்பெர்ரி z30 உபயோகிக்கிறார். கம்யூனிகேஷன் ஹப் (notification hub என்று நினைக்கிறேன்) என்ற facility உண்டு... அது மிகவும் அற்புதமானது. மிகுந்த வேகமும் Smoothnessஉம் உடையது.
 
ஆதவா நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் சீனா பொபைல் ஜியோமி போதுமே. அதில் அனைத்தும் இருக்கிறது. ஆனால் எப்போது வேலை செய்வதை நிறுத்தும் என்று சொல்லமுடியாது.

சாம்சங் நிறைய மாடல்களை (விலை குறைந்தது, விலை உயர்ந்தது) வெளியேற்றி மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டாலும் அது ஆண்ட்ராயிட் (அதாவது கூகுள்) டம் தன்னை ஒப்படைத்துவிட்டது. ஏதாவது முன்னேற்றம் வரவேண்டுமென்றால் அது கூகுள் மூலமே வரவேண்டும். ஆனால் ஐபோன் தன்னை நம்பியே இருக்கிறது. பல விஷயங்கள் ஐபோன் அவர்களுக்கு மட்டுமே என்ற ரீதியில் இயங்குகிறார்கள். அதுவும் ஒரு ஸ்போலிட்டிதான்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, அவர்கள் உயர்தர வர்க்கத்தினருக்காகத்தான் செயல்படுகிறார்கள். அவர்களால் குறைந்த விலையில் ஐபோனைக் கொண்டு வரமுடியாது என்றே தோன்றுகிறது. அப்படி நடந்தால் பலம் ஐபோன் உபயோகிப்பதை தவர்த்துவிடுவார்கள்.
 
Back
Top