தாமரை சிந்தும் தேன் துளிகள்!!!

தாமரை

Facebook User
பிடித்த விஷயங்களின் நல்லவையும் பிடிக்காத விஷயங்களின் கெட்டவையும் மட்டுமே புலப்படும் கண்ணாடியை:icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades:

அனைவரும் அணிந்திருக்கிறார்கள்...!!!!
 
ஒரு படிக்கு மேல் சிந்திக்கும் திறமையை உபயோகிக்க மனமில்லாமைதான் பல சண்டைகள், குழப்பங்கள் குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம்.
 
உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..
 
உணர்ச்சி வசப்படுவது அனைத்து உயிர்களுக்கும் இயல்பானது. அந்த உணர்ச்சியின் தாக்கத்தை சமாளித்து, அறிவு யோசிக்கத் தொடங்க எத்தனை காலம் ஆகிறதோ அவ்வளவு முட்டாள்களாக நாம் இருக்கிறோம்.
 
சுத்தம் செய்பவனை எப்பொழுதுமே அழுக்காகவே வைத்திருக்கிறோம்...
 
விமர்சனம் என்பது படைப்பை அளவிடுவதாக இல்லாமல் சுய மேதாவிலாசத்தை காட்டிக் கொள்ளும் வாய்ப்பாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.
 
கோபம் வர பலப்பல நல்ல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால்...

கோபத்தின் முடிவு எப்பொழுதும் தீமையாகவே இருக்கும்.
 
மமகாரத்திற்கு அஹங்காரம் அடங்கினால் பிறப்பது அன்பு, பாசம், காதல்.

அஹங்காரத்திற்கு மமகாரம் அடங்கினால் பிறப்பது ஆசை, மோகம், காமம்.

அஹங்காரமும் மமகாரமும் அடங்கினால் பிறப்பது சாந்தம், கருணை, ஆனந்தம்
 
Last edited:
கோபாஸ்திரஸ்திற்கு எதிராக எய்யப்படும் அலட்சிய அஸ்திரம் கோபாஸ்திரத்தின் உக்கிரத்தை அதிகரித்து எய்தவனையே பதம்பார்க்க வைக்கும்.
 
அவரவருக்கு அவரவர் சாயலில் கடவுள் தேவைப்படுகிறார்!!!
 
வரம் வாங்காத அசுரனும் இல்லை.
சாபம் வாங்காத தேவனும் இல்லை.
 
எந்தச் சாதனையாளனும் அடுத்தவர் எழுப்பும் வரைத் தூங்கியதில்லை.... தூக்கத்தில் சாதனைப படைத்தவர்களைத் தவிர...
 
தேவையில்லாத பழைய கசப்புகளை மற்ந்திடுங்க என்று அறிவுரை சொல்லும் யாரும் தங்கள் கசப்புகளை மறப்பதில்லை!
 
சில வரிகளில் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். தொடருங்க தாமரை.
 
சந்தேகத்துடன் நட்பைத் தொடங்குவது சாத்தியமற்றது. முடிப்பதும் சாத்தியமற்றது.
 
எனக்கு ஒன்றும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ள நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
 
எனக்கு ஒன்றும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ள நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இதைத்தான் வள்ளுவர், " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்று அழகாகச் சொல்லுவார்.

தேன்துளிகள் தொடரட்டும்.
 
நம்பிக்கை இல்லாதவர்களை நம்ப வைப்பதை விட கடினமான காரியம் உலகத்தில் வேறெதுவும் கிடையாது.
 
ஒரு குற்றவாளி தப்பிப்பதால் எண்ணற்ற நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
 
Back
Top