முரளி1
Facebook User
இந்த திரியில் எனக்கு பிடித்த பாடல்களை பதிவிட விருப்பம். ராகம் தழுவிய பாடல்களாக சொல்ல ஆவல்.
காவடி சிந்து:
இந்த அருமையான காவடி சிந்துவை கேளுங்கள். செஞ்சுருட்டி ராகம் . சுதா ரகுநாதன் பாடியது.
காவடி சிந்து என்பது திருநெல்வேலி மாவட்ட சென்னிமலை அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் இசை வடிவம்.
தமிழ் கடவுள் முருகன் பால் எழுதப்பட்ட பாடல்கள். எளிமை, இனிமை . காவடி ஆட்டத்திற்கு பொருத்தமானது.
பல்லவி, அனுபல்லவி , சரணம் போன்ற வரை முறை இல்லாத கிராமிய பாடல்கள்.
Surprisingly, It has no musical divisions like Pallavi, Anu pallavi and Charanam.
கணேஷ் குமரேஷ் வயலின் இசையில் காவடி சிந்து. மனதை மயக்கும் கிறங்கடிக்கும் இசை. அலை போன்ற ஓசை.
மூன்றாவது , யார் சொன்னார்கள் காவடி சிந்து முருகனை பற்றி மட்டும்தான் என. தளையை உடைத்து,
இதோ கண்ணன் , விஷமக்கார கண்ணன் பற்றி அருணா சாய் ராம் பாடல். !
கணேஷ் குமரேஷ் வயலின் இசையில் இன்னொரு காவடி சிந்து. கொஞ்சம் மேற்கத்திய இசை ...