பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை

drjperumal

New member
பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை.


251046_3688693622271_881312873_n.jpg


542037_3671395429827_1126437325_n.jpg



பேஸ்புக்கில் கார்டூனிஸ்ட் பாலாவின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் போட்ட கார்டூன். பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை. எல்லா ஜாதிகளுக்கான வெறியையும் தான் எதிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்றும், முற்போக்கு, மற்றும் இடைநிலை என்கிற பெயரில் உலாவரும் ஜாதி வெறியர்களை பற்றித்தான் அந்தக் கார்டூனில் கிண்டலடித்திருந்தார்.
 
ஏற்றத்தாழ்வைக் களையச் சொல்வோர் யாவரும் பெரியார்தான். இதை அறியார் குருடர்..
 
சாதியை உபயோகிக்காமல் எப்படியய்யா அரசியல் செய்வது. சாதி நம் அரசியல் வாதிகளுக்கு அமிர்தம் சாப்பிடுவது மாதிரி, தினமும் அது வேண்டும். இல்லையென்றால் அவர்களால் அரசியல் செய்ய முடியாதே.
 
போலிப்பகுத்தறிவு வாதிகள் என்று ஒரு தனி இனம் தழைத்து வருகிறது, அவர்களின் வேலைகளில் இவையும் உண்டு. பெரியார் பேசியதை எழுதியதை முழுமையாக அறியாதவர்கள் அவர்கள். பெரியாரை கற்று அறிந்து போராடும் பல நண்பர்கள் பாலாவின் கருத்தை ஒப்புக் கொள்கிறார்கள்.
 
Back
Top