மது பானம் நாட்டின் அவமான சின்னமா?

drjperumal

New member
மது பானம் நாட்டின் அவமான சின்னமா?

beer-lineup-big-all.jpg



Dutch_beers.jpg


germans-restaurant-during-soccer-game.jpg


6418-lead.jpg


6419-64061.jpg


675px-Various_Bottles_of_Slivovitz.jpg


DecaturBourbons.jpg


Manhattan_Cocktail2.jpg


Gibsons%2Brun.jpg


Alcohol-tobacco-drug-use-much-higher-among-mentally-ill.jpg


N2577.jpg


lex4-7-back-bar.jpg


IMG_5042.JPG


german-ladies-in-oktoberfest.jpg


international-berliner-bierfestival.jpg


gallerye_001536582_964118.jpg


குடி குடியைக்கெடுக்கும் என்பது பழமொழி. ஆனால் குடியை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே மது பானங்களை அரசாங்கமே ஊற்றி ஊற்றி கொடுக்கும் நிகழ்வுகளை 21 ஆம் நூற்றாண்டு கண்கூடாக பார்த்து வருகிறது.

நாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கும், கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கும் குடிபோதை தான் காரணம் என்று எத்தனை அறிக்கைகள் வந்தாலும், அரசு கண்டுகொள்ளப்போவதில்லை. சமீபத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் நிர்பயா என்ற இளம்பெண்ணை கற்பழித்த கொடூரன் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இப்படி நடந்துகொண்டோம் என்று கூறியிருப்பதிலிருந்தே, குடிப்பழக்கம் எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.

இன்றைய நாகரிக உலகில் ஒரு சாதாரண குடிமகன் தனது தினக்கூலியில் வாகனத்துக்கான பெட்ரோலுக்கு 29 சதவீதத்தை செலவிடும் அதே நேரத்தில் மது போதைக்காக அதில் 50 சதவீதத்தை செலவிடுகிறான். ஆக மீதி 21 சதவீதத்தை வைத்து அவன் குடும்பம் எப்படி நிம்மதியாக வாழும்.

தமிழகம் 32 மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய மாநிலம். ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையை போன்று 3 மடங்கு மட்டுமே பெரிதாக உள்ள புதுச்சேரி மாநிலத்தின் மதுக்கடைகளின் எண்ணிக்கையோ ஏறத்தாழ 500-ஐ நெருங்கியுள்ளது. அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு மதுபானக்கடை உள்ளது. அங்கு கடந்த 2013 ஆம் ஆண்டு வரை 373 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை, புதிதாக 90 மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதால் 500-ஐ நெருங்கியது. 2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி ஏனாம், மாகேயை தவிர்த்து புதுச்சேரியில் மட்டும் 254 மதுக்கடைகளில் மது விற்பனை செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் புதுச்சேரி மதுக்கடை உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்கள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கும். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும். அந்தளவுக்கு குடிமகன்களின் படையெடுப்பு நிகழும்.

வார நாட்களை எடுத்துக்கொண்டால், திங்கள் முதல் வெள்ளி வரை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சாரி சாரியாக படையெடுப்பார்கள். வீட்டில் சாமி கும்பிடும் போது தான் நாமெல்லாம் ஊதுவத்தி ஏற்றுவோம். ஆனால் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் மாலை ஏழு மணிக்கு மேல் ஊதுவத்தி ஏற்றப்படும். அந்த அளவுக்கு குடிமகன்களால் பஸ்சில் நாற்றம் குடலை பிடுங்கும். ஒரு வேளை அதிகமாக குடித்தால் சீக்கிரம் உனது படத்துக்கு வீட்டில் வத்தி ஏற்றும் நிலை ஏற்படும் என பேருந்து ஓட்டுனர்கள் சூசமாக சொல்கிறார்களோ என்னவோ?

'பாரதி' வாழ்ந்த பூமி இன்று 'பார்'களின் பூமியாக மாறிவிட்டது. அம்மாநிலத்தில் தினம் ஒரு கொலை நடக்க குடிப்பழக்கமே முக்கிய காரணம். அங்குள்ள இளைஞர்களை கல்வியறிவு இல்லாதவர்களாகவும், குடிபோதைக்கு அடிமையானவர்களாகவும் மாற்றிய பெருமை ஆட்சியிலிருந்த, ஆட்சியில் இருக்கும் அரசுகளையே சாரும்.

மதுபான விற்பனையால் அம்மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது.


இங்கு பாரதி வருவதற்கு முன்பிலிருந்தே பார் உள்ளது , புதுவை மக்களுக்கு தெரியும், மற்ற மாநில மக்களுக்கு புதியதாக தெரியும், புதுவையில் அணைத்து வசதிகளும் இறுக்கு, இதுவும் விதி விலக்கல்ல
 
ஏதோ குளிர்பானம் போல் இப்படி அடுக்கி வைத்தால் யாருக்கு தான் சுவைக்க தோன்றாது. விதிமுறை வகுத்து ஒரு வரமுறைக்குள் கொண்டு வந்தாலொழிய இந்த சூழல் மாறுவது மிக கடினம்..
 
மது பானம் நாட்டின் அவமான சின்னமா?

இங்கு பாரதி வருவதற்கு முன்பிலிருந்தே பார் உள்ளது , புதுவை மக்களுக்கு தெரியும், மற்ற மாநில மக்களுக்கு புதியதாக தெரியும், புதுவையில் அணைத்து வசதிகளும் இறுக்கு, இதுவும் விதி விலக்கல்ல

அருமையான பதிவு..

அரசிற்கு மக்களைப்பற்றி, மக்களின் நலன் பற்றி சிந்திக்க நேரமில்லை.

மதுபான உற்பத்தியாளர்கள் யார் என்று பார்த்தாலே காரணம் புரியும்...

ஆனால் ஒன்று .... செய்யும் செயல்களுக்கான பயனை காலம் திருப்பி தரும் என்ற நம்பிக்கையில் நாம்.
 
Back
Top