vasikaran.g
New member
கடவுள் நமக்கு துணை இருக்கும்போது பிரதி கூலமான,மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்ய வல்லது ?
கடவுள் துணை நமக்கில்லாது போய்விட்டால் அனுகூலமான மற்றவைகள் நமக்கு என்னதான் நன்மை செய்துவிடும் ?
வாழ்க்கை சம்மந்தமான இரண்டு பெரிய கேள்வி இது .பாரதப்போராட்டமே இக்கேள்விக்கு விடை தருகிறது .மானிட சரீரமே குருஷேத்ரம் ஏனென்றால் ,அது ஒவ்வொரு ஜீவனுக்கும் தர்ம ஷேத்தரமகிறது .அவரவர் வினையை நல்வினை ஆக்குவதற்கு உற்ற இடம் உடலே . ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தனுக்கு சாரதியாக அமைந்ததனின் கோட்பாடு இதுவே .எல்லா ஜீவன்களுக்கும் சாரதியாக சர்வேஸ்வரன் மனத்தகத்து வீற்றிருக்கிறார் .அவர் மனசாட்சியாய் இருந்து வாழ்வை ஒழுங்குபடுத்துவது நல்லார்க்கு விளங்கும் .மற்றவர்க்கு விளங்குவது இல்லை .
பல கதாப்பாத்திரகளைக் கொண்டு அமைந்த பாரதம் ஒரு கடல் போன்றது .இதில் கப்பலோட்டி போல் தோன்றுபவன் தேரோட்டியான கிருஷ்ணன் . ஒரே குலம், ஒரே குடும்பம் சூதாட்டத்தால் அழிந்து போயிற்று . உலோபி தனத்தாலும் சூதாட்டத்தாலும் குலநாசம் ஏற்படும் என்பது காட்டப்பட்டது . மகாவீரர்களான மஹா ராஜாக்கள் நடத்திய மகாயுத்தம் பாரதப்போர் .
நன்றி பாரதம் .