டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்த குஷ்பூ!

பிரபல நடிகர்கள் செய்யும் தவறான விசயங்களை பெருவாரியான ரசிகர்கள் பின்பற்றுவதால், அந்த மாதிரி காட்சிகள் நடிகர்கள் நடிக்கக்கூடாது என்று ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்தார். அதையடுத்துதான் ரயில் வண்டி போன்று காட்சிக்கு காட்சி புகை மண்டலத்தை ஊதி தள்ளுவதை சில நடிகர்கள் தவிர்த்தனர்.

ஆனால், தற்போது வேலையில்லா பட்டதாரி படம் மூலம் அதை தொடங்கி வைத்திருக்கிறார் தனுஷ். அதனால் மீண்டும் தனது எதிர்ப்பினை தெரிவித்தார் ராமதாஸ். மேலும் சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்பாக உயர்நீதிமனறத்தில் வழக்கும் தொடுத்தனர். ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.


இதையடுத்து நடிகை குஷ்பு விடுத்துள்ள செய்தியில, தனுஷ் புகை பிடிப்பது போன்று நடித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததை வரவேற்றுள்ளார். அதோடு, நடிகர்கள் செய்யும் நல்ல விசயங்களை யாருமே பாராட்டுவதில்லை. பின்பற்றுவதில்லை. அதை விடுத்து சிகரெட் பிடிப்பதையெல்லாம் பிரச்சினையாக்குவது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்று கூறியுள்ளார்.


இதற்கு முன்பு, பிகே படத்தில் அமிர்கான் நிர்வாணமாக நடித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கும் குஷ்பு வரவேற்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Back
Top