தமிழில் பங்கு வர்த்தகம்

leomohan

New member
வணக்கம் நண்பர்களே. தமிழில் பங்கு வர்த்தகம் பயில பல பேருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் மிகவும் குறைந்த இணைய தளங்களே உள்ளன. முன்பே இந்த மன்றத்தில் பல மூத்த உறுப்பினர்கள் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்கள். இருப்பினும் மீண்டும் ஒரு முயற்சி.

புத்தகங்களும் இந்த தலைப்பில் அதிகம் வெளி வரவில்லை.

பிரபல தமிழ் நாளிதழ்களும், பத்திரிக்கைகளும் தமிழ் வணிகத்திற்கு அதிக பக்கங்கள் ஒதுக்குவதில்லை.

இதனால் நாம் பெரும்பாலும் பங்கு தரகர்களையே நம்பியிருந்தோம். இப்போது இணையம் மூலம் நாமே நேரிடியாக பங்கு சந்தையில் இறங்கும் வசதிகள் வந்துள்ளன. அதனால் இந்த துறையில் நாமே இறங்கி கூடுதல் வருமானம் செய்யும் ஆர்வமும் வரக்கூடும்.

இந்த வலைப்பூவில் நான் அறிந்த கற்றுவரும் சில தகவல்களை தமிழ் வாசிக்கும் நல்லுகத்திற்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். சுட்டிக் காட்டவும்.

முதலில் அனைத்து பங்கு வர்த்தக தளங்களைப் போல சில Disclaimer இங்கு தருகிறேன்.

இங்கு இடப்படும் கருத்துகள் தகவல்கள் உங்களை பங்கு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே.
இது முற்றிலும் இலவசமான திரி
இதை நடத்த எனக்கு எந்த நிறவனமும் எந்த விதமான ஊக்கத் தொகையும் தரவில்லை
இதில் குறிபிடப்பட்ட பங்குகளை நீங்கள் வாங்கினாலோ விற்றாலோ அது உங்களுடைய தனிப்பட்ட முடிவு. அதனால் ஏற்படும் லாப நட்டங்களுக்கு என்னை பொறுப்பாக்க இயலாது.
இந்த அடிப்படை தகவல்களை வைத்து நீங்கள் பங்கு வர்த்தகத்தில் பெரிய வல்லுனராக ஆக இயலாது. அவ்வாறு யாராவது வல்லுனர் என்று கூறிக் கொண்டால் அதை நீங்கள் ஏற்க வேண்டாம்.
மேற்படி தகவல்களை படித்துவிட்டு பங்கா வேண்டவே வேண்டாம் என்று ஓடிவிடாதீர்கள்.

மேலும் பேசலாம்……
 
பங்கு வர்த்தகம் - முன்னுரை

நண்பர்களே Whatsapp, Twitter, Facebook போன்ற பல சமூக பிணைய முறைகள் பிரபலமாகி இருக்கும் இந்த காலத்தில் அனைவரும் பல நல்ல அறிவுரைகளை தினமும் பகிர்ந்துக் கொள்கிறோம்.

பலரும் வாழ்கை வாழ்வதற்கே, தினமும் நன்கொடை வழங்குங்கள், ஏழைகளை காப்பாற்றுங்கள், அநாதைகளக்கு உதவுங்கள் என்று அறிவுரைகளை பிறருக்கு forward செய்கிறார்கள். இது நல்ல விடயம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் என்றோ தனக்கு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கிறது என்றோ யாரும் சொல்லிக் கொள்வதில்லை. அவ்வாறு யாராவது சொன்னால் சமூகத்தில் அவர்களை தவறாக எண்ணி விடுவார்களோ என்று நினைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது.

முதல் மந்திரம்

அதிக பணம் சம்பாதிக்க விரும்பவதோ நல்ல வாழ்கை வாழ வேண்டும் என்று நினைப்பதோ பாவம் இல்லை. நேர்மையான எந்த வழியில் நீங்கள் பணம் சம்பாதித்தாலும் அதைக் கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு நல்ல வாழ்கை அமைத்துக் கொடுக்க நினைப்பதும் எந்த தவறும் இல்லை. அதனால் இந்த ஆசை உள்ளவர்கள் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டாம்.

அவ்வாறாக அறிவுரை அனுப்பும் பல நல்ல உள்ளங்கள் பயன்படுத்தும் WhatsApp திறன் கொண்ட கைப்பேசிகள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல். ஒரு ஏழை குடும்பத்தின் வருடாந்திர வருமானம். ஏன் இவர்கள் இந்த கைப்பேசியின் செலவை அவர்களுக்கு அளித்திருக்கக் கூடாது? ஆகையால் இந்த போலியானவர்களை நம்ப வேண்டும்.

நிறைய சம்பாதிக்கவும். அதைக் கொண்டு உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும். எஞ்சியவை தான தர்மம் செய்யவும். இன்று தான தர்மங்கள் செய்துவிட்டு நாளை உங்கள் சந்ததி நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் நீங்கள் தான் அதற்கு பொறுப்பாவீர்கள்.

எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம்:

நிலம்
வீடு
தங்கம்
வெள்ளி
வங்கி சேமிப்பு
மேலும் பேசுவோம்….
 
நல்லத் தலைப்பு, அதுவும் பிடித்தத் தலைப்பு...

தொடரட்டும்
 
முதலீட்டு வகைகள்

மேலும் அதைப் பற்றி பேசுவதற்கு முன் சில விடயங்கள் பேசுவது அவசியமாகிறது.

முதலீடு என்றாலே நம்மிடம் தேவைக்கு அதிகமாக சற்றே பணம் இருப்பதாக தானே பொருள் என்று நினைக்கலாம். அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின் வரும் பதிவகளில் அறிவீர்கள்.

பணம் இருப்பவன் தானே அதிகம் பணம் பண்ண முடியும் என்றும் நினைக்க வேண்டாம்.

இரண்டாவது மந்திரம்
உங்கள் வருமானத்திற்கும் உங்கள் செலவகுகளிற்கும் சரியாக குறிப்பேட்டில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். எந்த செலவு தண்டமாக போகிறது என்பதை அடிக்கடி பார்த்து அதை தவிர்த்து வாருங்கள். ஒரு நாளைக்கு 20 ரூபாய் எங்காவது நீங்கள் சேமிக்க முடிந்தால் அதை வைத்து நீங்கள் ஒரு கோடி ரூபாய் செய்யலாம். இதனை மறக்க வேண்டாம்.


எப்போது முதலீட்டை துவங்க வேண்டும்?

உங்கள் முதல் சம்பளத்திலிருந்தே முதலீட்டு சேமிப்பு இவற்றை துவங்க வேண்டும். அட நான் தான் திருமணமாகாதவனாயிற்றே சற்றே வாழ்கையை அனுபவித்து போகிறேன் என்று ஊதாரியாக செலவு செய்யும் எண்ணத்தை விட வேண்டும்.

இன்னிக்க செத்தா நாளைக்குப் பால். என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போவோம் இவ்வாறாக பேசுபவர்களை தவிர்க்கவும். கடைசியில் இடுகாட்டில் கூட செலவு இருக்கிறது என்பதை அறியாத வீணர்கள் இவர்கள்.

ஆக சேமிப்பையே நினைத்து இன்றைய வாழ்கை அனுபவிக்காமல் விட வேண்டுமா என்று கேட்டால் நான் இல்லை என்பேன். அதற்கு நீங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவது எது என்று பட்டியலிடுங்கள். நிரந்த மகிழ்ச்சி எது தற்காலிக மகிழ்ச்சி எது என்று வரையறை செய்யுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள்.

மாதாந்திர செலவுப் பட்டியல்:
  • வீட்டு வாடகை
  • மின்சாரம்
  • தண்ணீர்
  • மளிகை
  • பால் மற்றும் பழங்களை
  • காய் கறிகள்
  • எரிபொருள் (Petrol, Gas Cylinder, Kerosene)
  • வீட்டுத் தொலைப்பேசி
  • கைப்பேசி
  • பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம்
  • குடும்பத்துடன் சினிமா மற்றும் வெளியே சென்ற உணவு உண்டு ஆகும் செலவு
  • பணியாட்டகளின் சம்பளம்
  • தொலைகாட்சி மாதாந்திர கட்டணம்
  • இஸ்திரி செலவு
  • முடிவெட்டும் செலவு
  • உடற்பயிற்சி கூட கட்டணம்
  • இதர செலவுகள்


இது ஒரு மாதிரிப் பட்டியல் தான். இன்னும் ஏதாவது விடுப்பட்டிருந்தால் அதையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

மொத்த வருமானம் – 20,000 (எடுத்துக்காட்டாக)
மொத்த செவு – 18,000
மீதம் – 2,000

மேலும் பேசுவோம்…..
 
பங்கு வர்த்தகத்தில் செல்வந்தராகலாமா


என்னடா இது பங்கு வர்த்தகம் பயில வந்த இடத்தில் என் வீட்டுக் கணக்கை கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.


பெரும்பாலும் நான் பேசியவர்களிடம் அறிந்தது என்னவென்றால் என்ன ஐயா வீட்டு செலவிற்கே வருமானம் போதவில்லை நீங்கள் பங்கு வர்த்தகம் பண்ணு சேமிப்பு பண்ணு முதலீடு பண்ணு அப்படியெல்லாம் பேசறீங்க என்று சொன்னவர்களே அதிகம்.


அதனால் தான் இந்த முன்னேற்பாடு.


நீங்கள் தினமும் செய்யும் செலவுகளை குறிப்பெடுத்து வந்தால் மாத முடிவில் எது அவசிய செலவு எது அநாவசிய செலவு என்பதை விரைவில் அறிந்து விடுவீர்கள். அதை தவிர்த்தாலே அந்த மீதம் உள்ள பணத்தை என்ன செய்யலாம் என்பதை அறிவீர்கள்.


நாம் முதலீட்டை பற்றி பேசினோம் அல்லவா.


நமக்கு கூடுதல் வருமானம் வரத்தானே நாம் முதலீட்டை பற்றி பேசினோம். அவ்வாறான கூடுதல் வருமானம் எப்போது வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

- நான் ஓய்வு பெற்ற பிறகு அமைதியாக வாழ ஒரு வீடு வேண்டும்
- நான் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர வருமானம் வேண்டும்
- என் மகளுக்கு இன்னும் 20 வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
- என் மகனை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
- வாகனம் வாங்க வேண்டும். எத்தனை நாள் தான் பேருந்தில் செல்வது.

எத்தனை வேண்டும். எப்போது வேண்டும் என்பதை வைத்தே நமது சேமிப்பு முறைகளும் நிர்ணயமாகிறது.

நிலம்

- குறுகிய கால முதலீட்டிற்கு உகந்தது அல்ல.
- எத்தனை மடங்கு அந்த முதலீடு பெருகிறது என்பது நீங்கள் வாங்கிய இடத்தை பொறுத்தது.
- நினைத்தவுடன் விற்க இயலாது
- மாதாந்திர வருமானம் கிடைக்காது
- நிலம் இருக்கும் இடத்தை பொறுத்து ஆக்கரமிப்பு பிரச்சனை, அரசியல் குறுக்கீடு, நிலம் அபகரிக்கும் முதலைகளிடம் சிக்குதல், வழக்கு என்று பிரச்சனைகள் இல்லாது இருக்க வேண்டும்
- நிலம் வாங்க முதலீடு தேவை. பெருந்தொகை அல்லது வங்கிக் கடன். அதற்கு கட்ட வேண்டிய தவணைகள். அதற்கான வட்டி விகிதம். (EMIs and Interest Rates).

மேலும் பேசுவோம்….
 
பணமும் பங்கு வர்த்தகமும் பிரச்சனையும்

அதெல்லாம் எனக்கு தெரியும். நேரா மேட்டருக்கு வா என்று சிலர் அவசரப்படுவது நியாயமே.

அது போன்றவர்களுக்கு நேரிடையாக சில விடயங்கள் சொல்கிறேன். பிறகு முன் பதிவின் இறுதியிலிருந்து தொடர்கிறேன்.

பாதுகாப்பாக பங்கு வர்த்தகம் பயிலும் வழி முறைகள்:

முதலில் http://moneybhai.moneycontrol.com எனும் தளத்தில் இலவசமாக ஒரு கணக்கை துவக்கவும்.

2epjcy9.jpg



Courtesy: http://www.moneycontrol.com

இத்தளத்தில் பங்கு வணிக விளையாட்டு என்று ஒன்று உண்டு. உங்களுக்கு முதலில் ஒரு கோடி ரூபாய் தருகிறார்கள். ஹா ஹா மெய்யான பணம் இல்லை. இது இ-பணம்.
நீங்கள் நிஜமான சந்தைகளில் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் வாங்கிய பங்குகளின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியை அறியலாம்.
இதனால் நீங்கள் சரியான பங்குகளை வாங்குகிறீர்களா என்பதையும் உங்கள் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்ளலாம்.
உங்கள் கடினமான உழைப்பில் சம்பாதித்த பணத்தை போட்டு பங்கு வர்த்தகம் பயில்வதை விட சில மாதங்கள் இந்த தளத்தில் விளையாடி பயிலவும்.

மேலும் பேசுவோம்….
 
Last edited:
NSE, BSE அறிமுகம்

Bombay Stock Exchange

http://www.bseindia.com
eg6a6b.jpg



National Stock Exchange

http://www.nseindia.com
35lvlvn.jpg


இந்தியாவில் பல வங்கு சந்தைகள் இருந்தாலும் தேசிய பங்குச் சந்தை மற்றும் பம்பாய் பங்குச் சந்தை இவை இரண்டிலும் தான் அதிக வியாபாரம் நடக்கிறது.

பம்பாய் பங்குச் சந்தை இயங்கும் நேரம் காலை 9.15 ல் இருந்து 3.30 வரை. இந்த நேரத்தில் நீங்கள் பங்குகளை வாங்கலாம் விற்கலாம். பங்குச் சந்தையின் குறியீட்டு எண் என்று சொல்லப்படும் SENSEX ஏறுவதும் இறங்குவதும் இந்த நேரத்தில் தான். இதனைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம் பிறகு.

தேசிய பங்குச் சந்தையும் இதே நேரத்தில் தான் இயங்குகிறது. 15-நிமிடங்கள் pre-open என்று கூறுகிறார்கள். இதைப்பற்றியும் பிறகு பார்க்கலாம்.

மேலும் பேசுவோம்….
 
Last edited:
ICICI Direct, Sharekhan, India Infoline, HDFC Securities அறிமுகம்

நீங்கள் மெய்யான பணத்தில் முதலீடு செய்ய இன்னும் நேரம் வரவில்லை. அவ்வாறு வரும்போது நீங்கள் பங்கு வியாபாரம் செய்ய ஒரு கணக்கு துவக்க வேண்டும். இதனை Demat account என்கிறார்கள். சில கலைச்சொற்களை தமிழ்படுத்தாமல் விடுகிறேன். இவ்வாறு இருப்பதே நல்லது. ஏனென்றால் நீங்கள் இணையத்தில் மேலதிக விபரங்களை தேடும் போது தமிழ் கலைச் சொற்கள் உதவிக்கு வராது. அதனால் நீங்கள் concept ஐ மட்டும் தமிழில் நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள். ஆங்கில சொற்களுக்கு தமிழ் பொருள் புரிந்துக் கொள்ளுங்கள்.

71nwg9.jpg


எந்த தளங்களில் நீங்கள் Demat Account துவக்கலாம்:

http://www.icicidirect.com
http://www.hdfcsec.com/
http://www.sharekhan.com/
http://www.indiainfoline.com/
image

ICICI Direct Website

இன்னும் பலர் உள்ளனர். ஆனால் மேற் சொன்ன தளங்கள் பிரபலமானவை. எந்த ஒரு இணையத்தளத்திலும் கணக்கை துவக்குவதற்கு முன் அவை SEBI (Securities and Exchange Board of India – http://www.sebi.gov.in) ஆல் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை அறிய வேண்டும்.

இப்போதைக்கு பங்க வர்த்தகம் பற்றி பயிலும் போது http://www.moneycontrol.com தளத்தில் விளையாடி பயின்றால் போதும். அதன் பிறகு நீங்கள் தயார் என்றால் இந்த கணக்கை துவக்க மேற்படி நிறுவனங்களை அணுகி உங்கள் விபரங்கள், புகைப்படம், வங்கி விபரம், PAN அட்டை இவற்றை தந்தால் இந்த கணக்கை துவக்கி உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லையும் தருவார்கள்.

குறிப்ப – வருடாந்திர கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 1000 வரையில் இருக்கும். மேலும் நீங்கள் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் Brokerage எனும் தரகு கட்டணமும் வசூலிக்கப்படும். இது சுமார் 0.25% லிருந்து 0.75% வரையிலும் இருக்கலாம். நல்ல இணையத்தரகர்களில் குறைந்த தரகு வாங்கும் நிறுவனமாக பார்த்து கணக்கு துவக்குதல் நல்லது.

மேலும் நீங்கள் வாங்கும் போதோ விற்கும் போது பத்திரப்பதிவு, மற்றும் வருமானவரி போன்றவை உங்கள் வருமானத்திலிருந்து கழிக்கப்படும். அதனால் எந்த விலையில் வாங்கி எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை அறிவது அவசியம்.



மேலும் பேசுவோம்…..
 
பங்குச் சந்தை அறிமுகம்


Stock Exchange என்பது பங்குச் சந்தை. பங்குகளை வாங்க விற்க ஒரு இடம். அதாவது எந்த நிறவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படிருக்கிறதோ அந்த சந்தைகளில்.

யாருக்கு வேண்டும் பங்குச் சந்தை?

நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளி. நீங்கள் தான் அதன் நிறுவனர் உரிமையாளர். ஆனால் உங்கள் சொந்த முதலீட்டில் அந்த நிறவனத்தை இன்னும் வளர்ச்சியடைய செய்ய முடியவில்லை. உங்களுக்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. அப்போது ஒருவர் உங்கள் நிறவனத்தில் பணம் போட முன்வருகிறார். அவரை Partner என்கிறோம்.

மேலும் பணம் தேவைப்படும்போது உங்கள் இருவரின் சொத்துகளும் சேர்ந்தும் உங்கள் தேவைக்கு குறைவாக இருக்கும் போது, வங்கிக் சென்று கடன் வாங்குவீர்கள்.

அல்லது பொது மக்களிடம் சென்று பணம் வாங்குவீர்கள். என்னது பொது மக்களா, அவர்கள் ஏன் எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கலாம்.

இந்த முறையை Intial Public Offering (IPO) என்கிறோம். நீங்கள் முறையான அனுமதிகளை பெற்ற பின்பே IPO செய்யலாம். அதாவது பாருங்கள் மக்களே, நான் ஒரு நிறுவனம் துவங்கியுள்ளேன். சில ஆண்டகளாக நன்றாக நடத்தி வருகிறேன். ஆனாலும் ஒரு கோடி நிறுவனமாகவே என் நிறுவனம் உள்ளது. இதை நூறு கோடியாக ஆக்கும் திறன் எங்களிடம் உண்டு. ஆனால் அதற்கு பெருத்த முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் எல்லாம் சேர்ந்த இதல் முதலீடு செய்தால் நீங்கள் இந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆகலாம். வரும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று சொல்வதே IPO.

ஒவ்வொரு பங்கின் விலை சுமார் 1, 10, அல்லது 100 என்று துவங்கலாம். சுமார் ஒரு லட்சம் பேர் உங்கள் பங்கை 10 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் அடுத்த ஆண்டில் உங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தால் 20 சதவீதம் லாபம் அடைந்திருந்தால் ஒவ்வொருவரின் பங்கும் 12 ரூபாயாக உயர்ந்து அவர்கள் இரண்டு ரூபாய் சம்பாதிக்க வழி வகுக்கிறீர்கள். ஒரு வேளை உங்கள் நிறுவனம் நட்டமடைந்தாலும் அந்த நட்டமும் பங்குதாரர்களுடன் பங்கு பிரிக்கப்பட்டுவிடுகிறது.

இதனை Primary Market அல்லது முதன்மை சந்தை என்கிறார்கள்.

ஆனால் இவ்வாறாக முதன்மை சந்தையிலிருந்து பங்குகளை வாங்கியவர்களுக்கு ஏதாவது காரணத்தினால் பங்கை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது இரண்டாம் சந்தைக்கு வருகிறது. இதனை Secondary Market என்கிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.

மேலும் பேசுவோம்…..
 
Online Stock Trading–இணைய பங்கு வர்த்தகம்


15 வருடங்களுக்கு முன்பு பங்குச் சந்தை என்றால் வெறும் பணக்காரர்கள் மட்டும் புழங்கும் இடமாக இருந்தது. திரைப்படங்கள் Shares என்று சொல்வார்கள் செல்வந்தர்கள். பல வங்கிகளிலும் பொது இடங்களிலும் விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கும். அதில் தரகர்களின் பெயர் முகவரி எல்லாம் முத்திரை குத்தியிருக்கும். 20 பக்களுக்கு மேல் சிறிய எழுத்துக் களில் இருப்பதால் பலரும் படிக்க மாட்டார்கள்.

பிறகு கணினிமயமாக்கலின் மூலமாக இப்போது குறைந்த பணம் உள்ளவர்களும் பங்கு சந்தைகள் வியாபாரம் செய்ய ஏதுவானது.

தரகர்கள் தேவையில்லை. தொலைபேசியில் பேசத்தேவையில்லை. அவர்களுக்கு Cheque, DD என்றுத் தரத்தேவையில்லை. பிறகு வந்து சேரும் பங்குப் பத்திரங்களை பாதுகாக்க தேவையில்லை. அனைத்தும் இணைய வழி மூலம் இப்போது நடைபெறுகிறது.

முறையில் வரைமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பழைய முறையின் தாமதம், தவறுகள் களையப்பட்டிருகிறது தற்போது.

T+2 Settlement – நீங்கள் திங்கட்கிழமை வாங்கும் பங்குகள் உங்கள் கணக்கில் புதன் கிழமை அதாவது இரண்டு நாட்களில் சேர்க்கப்படும். நடுவில் சனி ஞாயிறு வந்தாலோ அல்லது சந்தை விடுமுறை இருந்தாலோ அவை கணக்கில் இல்லை.

இந்த Demat Account மூலம் நீங்கள் என்னென் வாங்கலாம்:

  • IPO
  • Mutual Fund
  • Equity
  • Exchange Traded Funds (ETF)

இன்னும் சில நிறுவனங்கள் மேற்படி சொன்னவைக்கும் மேலாக சில முதலீட்டு திட்டங்களில் பணம் போடு வாய்ப்பு செய்து தருகின்றன. அவற்றை பற்றி பின்பு பேசலாம்.

மேலும் பேசுவோம்….
 
Mutual Fund–அறிமுகம்

Mutual Fund அல்லது பரஸ்பர நிதி என்பது நாம் நேரிடையாக எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் வேறு வகையில் முதலீடு செய்வது.

Asset Management Company (AMC) எனும் நிறவனங்கள் இவ்வாறான Mutual Fund Schemes அதாவது பரஸ்பத நிதி திட்டங்களை அவ்வபோது அறிவிக்கிறார்கள்.

இவ்வாறான திட்டங்கள் Fund Manager என்பவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இம்மாதிரியான திட்டங்களலில் நீங்கள் மொத்தமாகவோ அல்லது மாதாமாதம் ரூ 500 லிருந்தோ சேமிப்பை துவக்கலாம். இவ்வாறாக மாதாமாதம் செய்யும் முறையை Systematic Investment Plan (SIP) என்கிறார்கள்.

இதில் Entry Load and Exit Load எனும் இருவகை கட்டணங்கள் உள்ளது. Entry Load பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளது. அதவாது நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 1% நுழைவுக் கட்டணமாக கட்ட வேண்டும். அதுபோலவே இந்த திட்டத்தை விட்டு வெளியேறி நீங்கள் போட்ட பணத்தை எடுக்க முயலும் போதும் கட்ட வேண்டும்.

இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் உங்களைப் போல பலரும் இந்த திட்டத்தில் பணம் போடுவார்கள். அந்த மொத்த பணத்தையும் அந்த Fund Manager அவருக்கு சரியென்று படும் நிறவனத்தின் பங்குகள் மீது முதலீடு செய்வார். அவற்றால் வரும் லாபம் உங்களுக்கு கிடைக்கும்.

அவர் இஷ்டத்திற்கு எதிலும் பணம் போட முடியாது. அவர் எந்தெந்த நிறவனத்தில் பணம் போடுகிறார் என்பது அந்த திட்டத்தின் Fact Sheet மூலம் அறியலாம்.

முற்றிலும் Equityயிலோ அல்லது அரசாங்க பத்திரங்களிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறையிலோ (Sector) அவர் அந்த பணத்தை முதலீடு செய்வார்.



34sqgbs.jpg


http://www.moneycontrol.com/mutualfundindia/

மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படும் பரஸ்பர நிதி திட்டங்களை காணலாம்.

மேலும் பேசுவோம்….
 
முன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்லை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..
 
Exchange Traded Fund (ETF)–அறிமுகம்

4hs18m.png


http://www.moneycontrol.com/mf/etf/

ETF என்பது ஒரு குறியீட்டின் மீது பணம் போடுவதற்கு சமம். அதாவது பம்பாய் பங்குச் சந்தையின் குறியீடு SENSEX இன்று 25,000 எனும் நிலை அடைந்திருக்கிறது என்று கொள்வோம். நீங்கள் SENSEXஐ அடிப்படையாக கொண்ட ETF மீது பணம் முதலீடு செய்கிறீர்கள். சில மாதங்களுக்கு பிறகு இந்த புள்ளி 30,000 தொட்டது என்றால் நீங்கள் முதலீடு செய்த பணமும் அதே சதவீததில் வளர்ச்சியடையும்.

பங்குச் சந்தையின் குறியீட்டிலோ அல்லது தங்கத்திலோ அல்லது வங்கிகளின் வளர்ச்சியை காட்டும் வங்கி குறியீட்டிலோ இவ்வாறான முதலீடுகள் செய்யலாம்.

இப்போதைக்கு இதில் நீங்கள் பணம் போட வேண்டாம். இந்த துறையை நன்கு அறிந்த பிறகு இதைப் பற்றி பேசுவோம்.

இப்போதைக்கு இதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் வர்த்தகர்கள் மட்டும்.

மேலும் பேசுவோம்…..
 
Back
Top