உயர்ந்த நட்புக்கு உதாரணம்...

தாமரை

Facebook User
உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?

அடிக்கடி இது என் மனதில் எழும் கேள்விகளில் ஒன்று. தமிழ் சமுதாயமே இன்று உறவுகளை இரண்டாம் பட்சமாக்கி நட்பை முதன்மையாக உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிறது,

கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? நட்பே உயர்ந்தது என்றார் ஒருவர்..

மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா என்றேன்.. பதில் வரவில்லை.

துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..

அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டு சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.

கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர்.. அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்திய போது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான்.. அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்க்களைக் கொடுத்தான்..

கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.

அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான்.
அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான்.

அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...

கண்ணன் - அர்ஜூனன் உறவு நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.

கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன..

இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது.. ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும். நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை.

உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.

உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..

என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.

இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.

இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..

நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.

நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.

கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே...

இதற்கு மாற்று கருத்து உண்டா?
 
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு..

குறள் கூறும் நட்பின் இலக்கணம் இந்த கர்ணன் சிறுமைபட்டு நிற்கையில் துரியோதனன் கர்ணனுக்கு கொடுத்த ஆதரவு இவ்விடத்தில் துரியோதனன் சுய நலம் கருதி ஆதரவளித்தாலும் குறுகி நின்ற கர்ணன் நிமிர்ந்து நிற்கும் வகையில் அவன் கொடுத்த ஆதரவு இவனுள் தோன்றியது மானம் காத்தவனின் மானத்தை நான் காப்பேன் எனும் வகையில் கர்ணன் எடுத்த உறுதி.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்..

இக்குறளினை நோக்கும் போது அவர்களை பழி வாங்கும் வகையிலான இவர்களின் ஒத்த உணர்ச்சி இவர்களின் நட்ட்பிற்க்கான மையப்புள்ளி .அப்படியிருக்க அவர்கள் இருவரில் எவர் செய்யும் தவறாகினும் மற்றவர் எப்படி விட்டு கொடுப்பார் .எப்படி தவறினை இடித்துரைப்பார்..

நானும் உடன்படுகிறேன் கண்ணன் -அர்ஜுனன் நட்பில் ..

இப்படி நிற்கையில் தாங்கள் கூறுவது போல் 95 சதவிகிதம் இது தான் நட்பு என்று கூறினாலும் அதில் இருக்கும் மகிழ்ச்சி தருணங்களுக்காக இதனை தொடர்கிறார்கள் என்பது நிதர்சனம்.அதே வேளையில் இக்கட்டான சூழலில் ஒரு விபத்து நேரும் போது இவர்கள் செய்யும் உதவியினை நாம் உறவினர்கள் செய்வர் என்று எதிர்பார்க்க வியலாது என்பது என் எண்ணம் .இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும் தான் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி தருண்ங்களுக்காகவும் இக்கட்டான சூழ்நிலையில் உதவும் மனபாங்கிற்க்காவும் அவ்வாறு உறவினை விட நட்பு பெரிதென கூறியிருக்கலாம்.
 
தம்பி ஜெய்.... கொஞ்சம் நிதானம் தேவை..

நண்பர்கள் மாத்திரமே உதவுகிறார்கள் என்ற மாயையை உண்டாக்கி வைத்திருக்கிறோமே அதுதான் தவறு.

உங்கள் நண்பனும் நீங்களும் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மச்சானுக்கு ஆக்சிடெண்ட். நீங்கள் கண்டும் காணாமல் இருந்தால் அதைக் கண்டிக்காதவன், அங்கு உதவாதவன் நண்பனா?

உன் நண்பன் நல்லவன் என்றால் நீ நல்லவனாகவே இருக்க முடியும். அப்பாவைக் கவனிக்காதவனை, தங்கைக்கு கல்யாணம் செய்யாத அண்ணனை, அம்மாவைத் திட்டும் மகனை தட்டிக் கேட்காத நண்பன் நண்பனா?

உலகத்தில் கணவனை இறுதிவரை காப்பாற்றிய மனைவிகள் நிறைய உண்டு, காலம் முழுக்க பேரனை வளர்த்த பாட்டிகள் உண்டு, அன்னைகள் உண்டு, மணம் செய்யாமல் குழந்தை வளர்த்த அப்பாக்கள் உண்டு...

நண்பர்கள் மாத்திரமே முழுதும் தாங்கிய மனிதன் உண்டா?

நல்ல நண்பன் தன்னை என்றுமே முன்னிறுத்துவதில்லை. நட்பை பற்றி மட்டுமே உயர்வாக பேசுவதில்லை. அவனுக்கு நண்பனின் வாழ்க்கை முக்கியம். நண்பர்கள் தங்கள் நண்பனின் மனைவியைத் தங்கையாகக் கருதுவார்கள்..

கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.

நான் 12 வது படிக்கும்பொழுது என் நண்பர்களின் வீட்டிற்கு எப்பொழுது சென்று யாரை அழைத்தாலும் அவர்கள் வீட்டில் தடை சொல்ல மாட்டார்கள். காரணம், அவர்களின் படிப்பு என்னால் என்றும் கெடாது, மாறாக அது ஆழமாகும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு.

நண்பனை மகிழ்விப்பது என்பது வேறு, நண்பனுக்கு நன்மை செய்வது என்பது வேறு.

பல சமயங்களில் இன்று இக்கட்டான சூழ்னிலைகள் நண்பர்களாலேயே வருகின்றன என்பதே உண்மை.

உன் நல்ல நண்பன் உன்னை நல்லவனாக இருக்க வைப்பான், உனக்கு அம்மாவின் பெருமை தெரியும், அப்பாவின் அருமை புரியும். மனைவியின் தியாகம் புரியும். அண்ணனின் ஆதரவு தெரியும். தங்க்கையின் பாசம் புரியும். உறவின் மேன்மை புரியும். உனது கடமை புரியும்.. உன் நண்பன் நல்லவனாக இருந்தால்....
 
எங்கள் ஐயா சொன்னதுதான் எனக்குத் தெரிந்த மகாபாரதம். கர்ணன், துரியோதனன் நட்பு என்று அவர் எனக்குச் சொன்னதில்லை.. அவர் அதை செஞ்சோற்றுக்கடன் என்றுதான் எனக்குச் சொன்னார்.
 
தாமரை ஜயா அவர்களுக்கு எனது வணக்கம்.
நட்பின் அடையாளத்தை மிகத்தெளிவாக புரிய வைத்தீர்கள்.
என் தந்தை எங்களுக்கு சொன்ன மகாபாரதகதைகளில் (கோடை விடுமுறைகளில் கீற்று முடைந்து கொண்டே கேட்டது) தெரிவித்தது கண்ணன் - அர்ஜூனன் உறவு தெய்வத்திற்க்கும் மனிதனுக்கும் உள்ள உறவாகவே! அவதார நோக்கம் கருதியே அர்ஜூனனுக்கு சாரதியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார் என்பதே தந்தை கூறியது.
மேலும் அவர் கூறுவார், மனிதன் கடவுளுக்கு கூறியது திருவாசகம், கடவுள் மனிதனுக்கு கூறியது பகவத்கீதை, மனிதன் மனிதனுக்கு கூறியது திருக்குறள் என்று.
இதுகாறும்
கண்ணன் - அர்ஜூனன் உறவு மனித தெய்வ உறவாகவே கருதிய எனக்கு தங்கள் பார்வை புதிது மிக்க நன்றி.

கண்ணனை ஒரு தெய்வமாகக் காண்பது என்பது ஒரு பார்வை, கண்ணனைப் பலரும் பல கோணங்களில் பார்த்திருக்கிறார்கள்.

கண்ணன் அர்ஜூனனிடம் பழகிய விதம் ஒரு நண்பனிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகவே எனக்குத் தெரிகிறது. மகாபாரதத்தின் பல கிளைக்கதைகளில் இது இன்னும் அழகாகத் தெரியும்.
 
நவில்தொறும் நூல்நயம் போலும் நட்பென்பார்

இங்கு இரண்டும் கண்டுகொண்டோம்

மகாபாரதம் - நயம்
நட்பு - நந்நயம்

தாமரை ஜயா, மகாபாரதத்தில் பல்வேறு நன்பர்களைப்பற்றிய ஆசிரியப்பார்வை என்னவோ?
 
Last edited:
தம்பி ஜெய்.... கொஞ்சம் நிதானம் தேவை..

நண்பர்கள் மாத்திரமே உதவுகிறார்கள் என்ற மாயையை உண்டாக்கி வைத்திருக்கிறோமே அதுதான் தவறு.

நான் கூற வருவது உறவினர்களை விட நண்பர்கள் ஒரு படி அதிகம் உதவுகிறார்கள் என்பது தான் .இன்றைய உலகில் இவ்விருவரும் கூட நிதர்சனமாக

உதவுவார்களா என்பது தெரியாவிட்டாலும் நாம் முதலில் ஒரு உதவியினை கேட்பது ந்ண்பர்களிடம் தான் .இந்த மாயை எனும் வார்த்தை இவ்விருவருக்கும்

பொருந்தும் என்பதே உண்மை.

உங்கள் நண்பனும் நீங்களும் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மச்சானுக்கு ஆக்சிடெண்ட். நீங்கள் கண்டும் காணாமல் இருந்தால் அதைக் கண்டிக்காதவன், அங்கு உதவாதவன் நண்பனா?

நண்பனில்லை என்பது தான் என் நிலைபாடும் .அதே வேளையில் அவ்வாறு அடிபட்டு கிடக்கும் உறவினர் தங்களுக்கு கெடுதல் விளைவித்தவர் எனில் இப்போதுள்ள

மக்களுக்கு காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் தோன்றுமா? அதேவேளையில் நண்பனுடன் செல்கையில் இந்நிகழ்வு நிகழுமெனில் நான் என் நண்பனிடம்

சொல்வேன் அவன் முடியாதென்றால் என்னுள் உள்ள மனிதம் அதனை செய்யும் ...

உன் நண்பன் நல்லவன் என்றால் நீ நல்லவனாகவே இருக்க முடியும். அப்பாவைக் கவனிக்காதவனை, தங்கைக்கு கல்யாணம் செய்யாத அண்ணனை, அம்மாவைத் திட்டும் மகனை தட்டிக் கேட்காத நண்பன் நண்பனா?

உலகத்தில் கணவனை இறுதிவரை காப்பாற்றிய மனைவிகள் நிறைய உண்டு, காலம் முழுக்க பேரனை வளர்த்த பாட்டிகள் உண்டு, அன்னைகள் உண்டு, மணம் செய்யாமல் குழந்தை வளர்த்த அப்பாக்கள் உண்டு...

நண்பர்கள் மாத்திரமே முழுதும் தாங்கிய மனிதன் உண்டா?

நல்ல நண்பன் தன்னை என்றுமே முன்னிறுத்துவதில்லை. நட்பை பற்றி மட்டுமே உயர்வாக பேசுவதில்லை. அவனுக்கு நண்பனின் வாழ்க்கை முக்கியம். நண்பர்கள் தங்கள் நண்பனின் மனைவியைத் தங்கையாகக் கருதுவார்கள்..

இதில் எனக்கு மறுப்பேதும் இல்லை இது போன்ற உவமைக்கு சான்றாகத்தான் இருந்த்து கர்ணன்-துரியோதனன் நட்பு. அதேவேளையில் கண்ணன்-அர்ஜூன்ன் போன்ற

நண்பர்கள் இன்று உள்ளனரா என்று பார்த்தால் அது போன்ற நணபர்கள் இல்லை என்பதே உண்மை..காரணம் அனைத்தும் அறிந்த அட்சய பாத்திரம் இந்த அர்ஜூனன்

கண்ணனிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய மற்றும் பெற்றுகொள்ள வேண்டிய அமிர்த்த்தினை பெற்றுகொண்டான் .இதனை நட்பென்று கூறினால் இது போன்ற

நட்பினை இங்கே நாம் என்றுமே காண முடியாது ஒருவேளை கடவுள் அர்ஜூன்னை காப்பதற்காக இந்த நிலை கொண்டாரெனில் அது போன்ற நிலையினை

அடைய நாம் முயல வெண்டும் ஆனால் இங்கே நட்பெனும் வரி இடம்பெறாது.

கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.

நண்பர்கள் என்பவர் என்றும் சக தோழனின் மகிழ்வினை விரும்புவர்.இவ்விருவரும் அதனையே செய்தனர் இதில் அதே வேளையில் துரியோதனன் தான் பாண்டவர் மீது

கொண்ட பகையினை மனதில் கொண்டு அர்ஜூன்னுக்கு எதிராக கர்ணனை பயன்படுத்தி கொண்டான் இதில் இருந்த்து சுயநலம். ஆனால் கர்ணன் ஆதிக்க(சாதி)

வெறியினை கொண்ட ஒரு கூட்ட்திற்கெதிறான இடத்திலிருந்து தனக்கென ஒரு அடையாள்த்தினை கொடுத்த துரியோதனுக்கு உண்மையான நட்புடன் இருந்தான்

என்பதே திண்ணம் ஆனால் இதில் இருந்த்து கர்ணனின் சுயநலம் . இவிடத்தில் இதில் கர்ணனின் நிலை மனிதன் மனிதனுக்கு ஆற்றும் உதவி இது கொடுத்தல்

வாங்குதல் எனும் நட்பின் நிலைபாடு இருக்கும் அனைத்தும் அறிந்த கடவுள்ர் போல் கொடுத்தல் மட்டுமேயான நட்பிற்க்கான நிலைபாடு இதில் கிடையாது..

இக்கருத்தில் நிலையானவனாக இருந்த்தால் தான் கர்ணன் துரியோதனுக்கு அவன் செய்வது தவறென தெரிந்தும் பிதாமகன் பீக்ஷ்மர் போல் அவனுக்கு

உதவினான். இதிலிருந்தது ஆபத்திற்க்குதவிய மனிதனை நண்பனாக எற்று கொண்டவன் தன் நட்பிற்க்கென செய்த தியாகம். அனைத்தும் அறிந்த பரமாத்மா மீது

அர்ஜூன்ன் கொண்டது இது போன்ற நட்பல்ல பக்தி.

நான் 12 வது படிக்கும்பொழுது என் நண்பர்களின் வீட்டிற்கு எப்பொழுது சென்று யாரை அழைத்தாலும் அவர்கள் வீட்டில் தடை சொல்ல மாட்டார்கள். காரணம், அவர்களின் படிப்பு என்னால் என்றும் கெடாது, மாறாக அது ஆழமாகும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு.

நண்பனை மகிழ்விப்பது என்பது வேறு, நண்பனுக்கு நன்மை செய்வது என்பது வேறு.

உண்மைதான் நண்பனை மகிழ்விப்பது வேறு நண்பனுக்கு நன்மை செய்வது வேறு. இங்கே கர்ணன் துரியோதனனின் எண்ணமான தனக்கு உரிதான அரசு எனும்

அவனுடையது எனும் கருத்தை கொண்டு கர்ணன் துரியோதனன் நனமை ஒன்றினை குறிக்கோளாக கொண்டு தான் செயல்பட்டான்..இதில் நட்பிற்க்கான அடையாளம்

தெriகிறதல்லவா?

பல சமயங்களில் இன்று இக்கட்டான சூழ்னிலைகள் நண்பர்களாலேயே வருகின்றன என்பதே உண்மை.

உன் நல்ல நண்பன் உன்னை நல்லவனாக இருக்க வைப்பான், உனக்கு அம்மாவின் பெருமை தெரியும், அப்பாவின் அருமை புரியும். மனைவியின் தியாகம் புரியும். அண்ணனின் ஆதரவு தெரியும். தங்க்கையின் பாசம் புரியும். உறவின் மேன்மை புரியும். உனது கடமை புரியும்.. உன் நண்பன் நல்லவனாக இருந்தால்....

இதில் மறுப்பேதும் இல்லை..

இறுதியாக நட்பெனும் சொல் மனிதருக்கானது எனும் எண்ணத்தில் இது போன்ற உதாரணம் கூறியிருக்கலாம்.மனிதர் எவரும் எவரையேனும் என்றும்

ஒருத்தையொருத்தர் சார்ந்திருப்பர் .ஆனால் அர்ஜூனன் மட்டுமே பரமாத்மாவான கண்ணனை சார்ந்திருந்தான் பரமாத்மாவான கண்ணன் சார்ந்திருக்க அவசியமில்லை

அப்படியிருக்க நட்பிற்க்கடையாளமாக இன்று கர்ணன்-துரியோதனன் இருப்பது மிகையல்ல என்பதே திண்ணம்..
 
Last edited:
எல்லோருமே சில சமயம் கண்ணனாக வாழ வேண்டியதிருக்கிறது, சில சமயம் அர்ச்சுனனாக வாழ வேண்டியதிருக்கிறது, முழுமையான கண்ணனாகவோ அர்ச்சுனனாகவோ இருக்க முடியாது.

இப்பொழுது நீங்கள் அர்ச்சுனன் போல் விளக்கம் கேட்க நான் கண்ணனைப் போல சொல்லிக் கொண்டிருக்கிறேன்,

நம் இருவரின் நோக்கமும் ஒன்றுதான். உண்மைப் பொருளை அறிவது. என்னுடைய பதிலால் உங்களுடைய கேள்வியால் நானோ வலியுணர மாட்டோம். இதே நிலை நாளை மாறும். நாளை உங்களிடம் இருந்து புதிய ஒன்றை நான் அறிவேன்.

இங்கு நண்பர்கள் உணர்ச்சி வசத்தால் தவறும் பொழுது நாம் உணர்ச்சி வசப்படுவதில்லை. அமைதியாக உண்மையை அலசுகிறோம் எது சரி என் அறிந்து சரியான வழியைச் சொல்லித்தருகிறோம். தவறு செய்பவருக்கும் இது சரியானதல்ல அதுதான் சரி எனச் சொல்லித் தருகிறோம்.

இது நம் அனைவருக்குமே பொதுவானது. நம்மில் கண்ணனும் அர்ச்சுனனும் மனதிற்குள்ளேயே இருக்கிறார்கள். புத்தி - மனம் என்ற பெயர் உண்டு அவர்களுக்கு, புத்தி கண்ணனாக இருக்கிறது. மனம் அர்ச்சுனனாக இருக்கிறது. புத்தியும் மனமும் பேசிக்கொள்வதால் மட்டுமே மனம் சோர்வடையாமல் நல்வழியில் சென்று சாதனைகள் புரிய முடியும். மனம் புத்தியின் பெருமையையும், புத்தி மனத்தின் பெருமையையும் பேசும் கர்ண துரியோதனன்களாய் இருந்தால்???

நட்பு எவருக்கும் இடையில் பூக்கலாம். கணவன்-மனைவி, அக்கா-தங்ககை, மாமன்-மச்சான், தாத்தா-பேரன் எந்த இருவருக்கு மத்தியிலும் பூக்கலாம். உறவினர்களாகப் பிறந்த விட்ட ஒரே காரணத்தினால் இவர்களுடன் நம்மால் நட்பு கொள்ள இயலவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் நட்பைப் பற்றி நாம் கொண்டிருக்கும் தவறான அபிப்ரயமாக மட்டுமே இருக்கும்.

சொல்லப் போனால் நம் இறைவன் கூட நமக்கு நட்புதான். அதைத்தான் கண்ணன் காட்டுகிறான். அர்ச்சுனனுக்கு முன்னரே துரியோதனனுக்கு விஷ்வரூப காட்சியினைத் தூதாகச் சென்றபொழுது காட்டுகிறார். கண்ணன் மீதான துரியோதனின் பார்வைதான் அதன் பலனை அவனுக்குத் தரவில்லை எனச் சொல்லலாம்

கண்ணன் இல்லை என்ற வார்த்தையைக் கண்ட உடன் தோன்றிய எண்ணம் இது,

நட்பு என்பதை நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் பொறுமை தேவை.
 
நட்பை பற்றி தாமரை சொல்லிய கருத்துக்களை எல்லாம் நானும் ஒப்புக்கொள்கிறேன். அவர் சொல்வது சரிதான். எது நன்மையோ அதை செய்வதே நட்பு.

இங்கு மஹாபாரத நட்புகள் உதாரணமாக சொல்லப்பட்டு உள்ளன. அதில் உள்ளது துரியோதனனும் கர்ணனும் கொண்ட நட்பு சூழ்ச்சிக்கார்களிடையே ஏற்பட்ட நட்பு போலதான். இன்று நான் வேறொரு திரியில் சொன்னது போல் "சான்றோர் பழிக்கும் வினையில்" இருவரும் ஒன்று கூடினார்கள்.

நட்பிற்கு சிறந்ததொரு உதாரணம் நமது தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு மன்னனுக்கும் புலர் ஒருவருக்கும் நிலவியது. மன்னன் சோழ நாட்டையும் புலவர் பாண்டிய நாட்டையும் சேர்ந்தவர்கள். விதிவசத்தால் பெற்ற மக்களே பகையான போது சான்றோர் அறிவுரை ஏற்று போரை விடுத்தான். ஆயினும் உயிர் வாழ விரும்பாது வடக்கிருந்து உயிர்விட்டான். நண்பனான மன்னன் உயிர்விட்டான் என்ற செய்திகேட்டு புலவர் வசதியான வாழ்வை துறந்து அதே இடத்திற்கு வந்து உயிர் துறந்தார். இவர்களின் நட்பு நண்பர் ஜெய் மேற்கோள் காட்டியுள்ள திருக்குறள் வரிகளுக்கு நல்லதோர் உதாரணம். காரணம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நடப்பு கொண்டவர்கள்.

மன்னன் கோப்பெருஞ்சொழன். புலவர் பிசிராந்தையார்.இந்த செய்தி புறநாற்றில் உள்ளது. தமிழர்கள் தமிழ் மன்றத்தில் கொஞ்சம் தமிழர் பெருமையையும் பேசுவது நலம் என்று இங்கு இதை எடுத்துரைத்தேன். இதுபற்றி மேலும் விவரம் தேவை என்றால் பின்னர் சொல்கிறேன்.தமிழ் மன்ற தமிழ் சான்றோரு புறநானூறு செய்தி பற்றி அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தவிர நண்பர் தாமரை அவர்களின் பதிவுகள் சில ரெட்டை பதிவுகளாக உள்ளன. நிர்வாகம் கண்டுகொள்ளாதது ஏன்?
 
Back
Top