பெண் குழந்தைக்கு பெயர். உதவ முடியுமா?

தமிழ்மன்ற உறவுகளே...
எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது,
அதாவது, எனது (பெண்) குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும். அதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு;

குழந்தையின் பால் - பெண்
தந்தையின் பெயர் ஆரம்பிக்கும் ஆங்கில எழுத்து - S
குழந்தையின் பெயர் இருக்க வேண்டிய ஆரம்ப எழுத்துக்கள் - வ (va), வா (Vaa), வி (Vi)
அமைய வேண்டிய இலக்கம் - 6

அத்துடன் முக்கியமாக, கருத்துள்ள தமிழ் பெயராகவும் மூன்று எழுத்துக்களை மிஞ்சாததாகவும் இருக்க வேண்டும்.

உதவ முடியுமா?

பி.கு: தந்தையின் முதல் எழுத்தையும் கணக்கில் கொண்டு வைக்கப்படவேண்டும் என்று சில எண்சோதிடம் சொல்கின்றன. சில அதைப்பற்றி பொருட்படுத்தவில்லை. இது பற்றி உங்கள் கருத்துக்களையும் பகிரலாம்
-----------------------------
எனது தேடலில் கிடைத்தவை சில...
S Vikaasini [Durga]
S Vanshi [Flute]
S Varuni [Goddess Durga, wife of Varun (God of water)]
S Vidula [Moon]
S Vishaali [Beautiful, Naymph, Creative, one who lobes who gossip, Talanted, One who has a big heart, name of an indian goddess]
 
முயற்சிப்பவர்கள் தனிமடலில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தந்தால், இலக்கங்களின் கூட்டுத்தொகையை அறியும் வகையில் MS EXCEL இல்செய்யப்பட்டதினை அனுப்பிவைப்பேன்.
 
ஒருவாறாக பெயர் தெரிந்துவிட்டேன்.

எனக்காக பலர் உங்களின் வேலைப்பழுவின் மத்தியிலும் முயற்சித்துக்கொண்டிருப்பீர்கள். மேற்கொண்டு முயற்சிக்க வேண்டாம் என்பதை தெரிவிக்கவே ஓடோடி வந்தேன்.

உதவ முனைந்த அனைவரிற்கும் நன்றிகள்
 
Back
Top