வார்த்தை மனிதனை கொள்ளும் விஷமா ?

nandagopal.d

New member
images%20%2815%29.jpg


பேசும் முன்னே சொற்கள் அழகானவை பேசி விட்ட சொற்களுக்கோ நாம் அடிமைதான்
எங்கோ படித்த பழமொழிதான் நியாபகம் தான் வருது அது போல
வார்த்தைக்கு எப்பொழுதும் ஒரு தடுப்பணை இருந்து கொண்டே இருக்க வேண்டும்

எதனை அடக்க விட்டாலும் நாக்கை அடக்க வேண்டும் என்று திருக்குறளில்

யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குட் பட்டு. (97)
வள்ளுவர் கூறியுள்ளார்.
பொருள்: யா காவார் ஆயினும் நா காக்க - (மாந்தர்) எவற்றை அடக்கா ராயினும் நாவினை அடக்குக ; காவாக்கால் சொல் இழுக்குள் பட்டு சோகாப்பர் - (நாவினை) அடக்காத பொழுது (அவர்) சொற் குற்றத்துட் பட்டுத் துக்கப்படுவர்.
கருத்து: ஒருவன் நாவினை அடக்கிப் பேசுக.

கல கலப்பான பேச்சினால் ஒரு நண்பர் பலரை கவர்ந்தாலும் அதே( அளவு கடந்த) பேச்சினால்
பல நல்ல நண்பர்களை இழந்ததும் உண்டு. பேச்சு என்பது எவ்வளவு பெரிய கலை ஆனால் அது
அதிகமானால் எவ்வளவு பெரிய இழப்பு அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னங்க
நெல்லை போட்ட அள்ளிரலாம் சொல்ல போட்ட அள்ள முடியுமா?

“ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும். (98)
பொருள்: ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின் - (ஒருவன் சொல்லும் சொற்களில்) ஒன்றாலும் தீய சொல்லின் பொருளினது (தீய) பயன் உண்டாயின், நன்று ஆகா(த)து ஆகி விடும்‡(அவன் சொல் ஒவ்வொன்றும்) நன்மையைத் தாராத சொல் ஆகி விடும்.

கருத்து: ஒருவனை இகழ்ந்து பேசின், அஃது அவன் மனத்தைவிட்டு ஒரு நாளும் நீங்காது.



யோசிக்கமால் சொல்லும் வார்த்தையால் தன் குடும்பத்தையே இழந்தான் ஒருவன் அவன் கதை கொஞ்சம் பார்போம் .
திருமணத்தை முடிந்து இரண்டு மாதம் விடுமுறை முடிந்து வெளிநாட்டு வேலைக்கு சென்றான் அவன் .
ஒவ்வொரு வருடமும் பதினைந்து நாள் லீவு கிடைக்கும். வந்து பார்த்து விட்டு செல்வான்.
ஒரு ஒப்பந்தத்தில் மூன்று ஆண்டுகள் விடுமுறை இல்லமால் வேலை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று,
மனனவியிடம் கூட கேட்கமால் கை எழுத்தை இட்டு விட்டான்.

மூன்று ஆண்டுகள் தொலை தொடர்பு மட்டுமே. சிறு குழந்தையாக இருந்த அவன் குழந்தை,
இப்பொழுது எப்படி வளந்து இருப்பான் என்று குழந்தையின் நினைவு வேறு எதற்கு??கையெழுத்து இட்டோம்
இந்த ஒப்பந்தத்தில், என்று தனக்கு தானே திட்டி கொண்டு இருந்தான். ஊருக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது.
எல்லாம் புதியதாக இருந்தது.வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் பேசி விட்டு மகனை கூப்பிட்டான்.
பயந்து கொண்டே வந்து அருகில் நின்றான். குழந்தை, செல்லம் நான் யாரு சொல்லு பார்போம் என்றான்.
குழந்தை மழலை குரலில் சொன்னது. ”நீங்கள் துபாய் அங்கிள் என்று” நான் தாண்டா உன் அப்பன் என்றான் இவன்.

உடனே நீங்கள் இல்லை என் அப்பா அவரு எப்பவும் என் அம்மா கூடவே இருப்பார் என்றது குழந்தை
என்னது உன் அம்மா கூடவே இருப்பானா ?? யார் அவன் என்று சந்தேக தீ அவன் மனதில் எழ ஆரம்பித்து விட்டது.
சிறிது நேரத்தி லேயே கடை தெருவுக்கு கறி வாங்க சென்ற அவன் மனைவி என்னங்க சமைக்கலாம் என்ன வேண்டும் என்று சொல்லுங்களேன். இதையெல்லாம் நேற்று வரை உன் கூடவே இருந்தனே அவனிடம் போயி கேள் என்னிடம் நடிக்காதே.
திருட்டு சிறுக்கி என்று கண்ணா பின்னா வென்று வாய்க்கு வந்த வார்த்தைகளால் அர்ச்சனை செய்தான்.
அவளும் எதோ பேச உன் குலமே இப்படித்தாண்டி என்று கொஞ்சம் யோசனை செய்யமாலே திட்டி விட்டு,
வெறுப்புடன் கால் போன போக்கில் நடந்தான். குறுக்கு சந்தின் நீண்ட வில்லை வீட்டில் இருந்து இவனை அழைத்தான்
இவன் பால்ய சிநேகித்தான் சுப்புரு. என்னடா பாத்தும் பாக்காத மாதிரி போற எப்ப ஊருலிருந்து வந்த குசலம் எல்லாம் விசாரித்து விட்டு " என்னடா சோகமா இருக்குற என்னடா ஆச்சி ? என்று கேட்டான் சுப்புரு. வாடா வெளிய போலாம் என்று சட்டையை போட்டு கொண்டே வந்தான் சுப்புரு. நடந்ததையெல்லாம் சொன்னான் அவன். சுப்புரு. சமாதனம் செய்தான் "அப்படியெல்லாம் இல்லைடா உன் மனைவி ரொம்ப நல்லவங்கடா பேசி முடிக்கும் முன்னே ஒரு பதட்டமான ஒரு குரல் அவர்களை நிறுத்தியது.

அது பக்கத்துக்கு வீடு பையனின் குரல் அண்ணே" அக்கா சீம்மண்ணே உத்திக்கிச்சி பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயி இருங்கங்க"
இதைக் கேட்டும் கூட அவன் மனதில் மனிதாபிமானமே வரவில்லை வெறுப்பும் மறையவில்லை செத்து தொலையட்டும் என்றே நினைத்தான்.

மனனவி என்பதற்கு தகுதி இல்லாதவள் முகத்தில் எப்படி முழிப்பது
யோசித்தான் .ஊருக்க்காகவது போயிதான் ஆக வேண்டும். மருத்துவமனையில் அரை பிணமாய் அவள் கருகிய முகத்துடன்
பார்த்தவுடன் அவனுக்கு சந்தோசம் சரியான தண்டனைதான் உனக்கு என்று திட்டினான் மனிதமே இல்லமால்,
முக்கலுடன் முனகலுடன் பேச ஆரம்பித்தாள், ஏங்க தப்ப நினைசிட்டிங்கே, அப்பா எங்கமா "என்று கேட்ட பயனுக்கு சமதானம் செய்யமுடியமால் என் நிழலை காட்டிதான் நீங்கள் என்று சொல்லி அவனை சமாதனம் செய்து வைத்துருந்தேன் .அதற்க்கு மேல் அவளால் பேச முடிய வில்லை மூச்சு தடுமாறியது . டாக்டரை அழைத்து வர ஓடினான். அவர்கள் வந்து பார்க்கும் முன்னே அவள் உயிர் போயி இருந்தது. இப்போ அவன் புலம்பி கொண்டே தன் வார்த்தையாலே மனனவியை கொன்று விட்டேனே சொன்னதையே சொல்லி கொண்டு பைத்தியம் ஆகி விட்டான்.

“நாக்கின் நீளம் மூன்று அங்குலம்தான்,
ஆனால் அது ஆறடி மனிதனையும்
கொன்று விடும”
இது ஜப்பான் பழமொழி.இதுதான் உண்மையும் கூட
வெறுப்பிலும் கோபத்திலும் சந்தோஷத்தில் கூட வார்த்தைகளை அளந்து பேசுங்கள்!
அது நமக்கு திரும்பி வரும் பொழுது எல்லாமே மாறி விடும்.

நன்றிகள் அன்புடன்
த .நந்தகோபால்
 
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

ஆம் வார்த்தை மனிதனை வாழ்நாள் முழுவதும் கொள்ளும். இதை நான் அனுபவித்து கூறுகிறேன்
 
Back
Top