சொல்வதெல்லாம் டூப்பு

  1. சொல்வதெல்லாம் டூப்பு
வணக்கம் உறவுகளே...

எல்லாரும் எப்படி இருக்கீங்க, மன்றத்தில் இப்போ பழைய ஆட்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். புதியவர்கள் அமக்களப்படுத்துகிறார்கள்........ அவர்களுக்கு வாழ்த்துகள்.... மன்றத்தில் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.

விரைவில் அவற்றை பகிர்ந்துக் கொள்கிறேன். ஆனால் அதுக்கு முன்னாடி இப்போ உங்களுக்கு ஒரு வீடியோவை பகிர்கிறேன்.

இந்த வீடியோவை பற்றி சொல்வதற்கு முன்பு..... தற்போது தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்து கொஞ்சம் பார்ப்போம்....

செய்திகள்.
நாடகங்கள்
திரைப்படம்
காமெடி நிகழ்ச்சி
ரியாலிட்டி ஷோ

இதில் கடைசியாக வரும் ரியாலிட்டி ஷோவுக்கு எனக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம் தான். என்னைப் பொறுத்தவரை குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபரை நுழைப்பது.... உக்காரும் இடத்தில் நாமே கத்தி வைத்துக் கொள்வது போல தான்..... அல்லது டீசன்டாக சொல்ல வேண்டும் என்றால் கத்தி மேல் நாமே தேடிப்போய் உக்காருவது போல தான்....... பல குடும்பங்களில் பிரச்சனை வர காரணமாக இருப்பதே நாடகமும், இந்த ரியாலிட்டி ஷோக்களும் தான்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

கதையல்ல நிஜம்
சொல்வதெல்லாம் உண்மை
நீதியின் மறுபக்கம்
நித்திய தர்மம்

இப்படி நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு.... அந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் செருப்படி தருவதைப் போல இருக்கும் தற்போது நீங்கள் பார்க்கும் வீடியோ..... இது ஒரு காமெடி நிகழ்ச்சி தான் ஆனால், ரியாலிட்டி ஷோக்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களையும், தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் மிக எளிமையாக, புரியும் படி கூறிருக்கிறார்கள்...... நேரம் இருப்பவர்கள் பார்க்கவும்., நேரமில்லாதவர்கள் நேரத்தை ஒதுக்கி பார்க்கவும்....... கண்டிப்பாக மனது நிரம்ப சிரிப்பீர்கள்.......

 
மீள் வருகைக்கு நன்றி தம்பி
உங்கள் படைப்புக்களை எதிர்பார்த்திருக்கும்
ரசிகன்
 
தக்ஸ் கண்ல என்ன படும்னு தான் தெரியுமே!!!

கொடுங்க படிக்கலாம். இதில எதையுமே நான் பார்த்ததில்லை
 
Back
Top