கௌதமன்
New member
அரவிந்தின் முன்னிருக்கும் சவால் பா.ஜ.க.வோ, காங்கிரஸோ அல்லது அன்னாவோ அல்ல. அவர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள்: இலவச மின்சாரம், குடும்பத்துக்கு 700 லிட்டர் குடிநீர், பெண்கள் பாதுகாப்புக்கு கமாண்டோ படை, திறமையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி முறை என்கிற சவால்கள் தான் அவை.
மிக நல்ல தொடக்கத்தை AAP க்கு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதை கவனமாக , இலாவகமாக முன்னெடுத்துச் செல்வது தான் பெருத்த சவால். அந்த சவாலை திறமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.அரவிந்த் 18 அம்ச கோரிக்கைகள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு வைப்பதை விட்டு விட்டு (அவர்கள் செய்யத் தவறினார்கள் என்று தானே மக்கள் AAP க்கு வாக்களித்தார்கள்) ஆட்சியை ஏற்று அவர் உறுதியளித்த நிர்வாகத் திறமையைக் காட்டுவது தான் வாக்களித்த மக்களுக்கு செய்யும் கைமாறு.
ஒருவேளை அவர் சொன்னபடி நல்ல நிர்வாகத்தைத் தந்தும், ஆதரிப்பவர்கள் ஆட்சியை கவிழ்த்தால் அது அரவிந்துக்கு இன்னும் பெருத்த ஆதரவாகவே அடுத்த தேர்தலில் வெடிக்கும்.