இரண்டு வாழைப்பழங்களோடு சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிறகு, சிறிது ஏலக்காய்ப் பொடி, ஏதேனும் எசென்ஸ் சேர்க்கவும். சுவையான, புதிதான, சத்தான பாயசம் தயார்! நறுக்கிய ஆப்பிள் மீந்துவிட்டதா? சிறிதளவு உப்பு கலந்த நீரில் போட்டு வையுங்கள். நிறம் மாறாமலும் கெடாமலும் இருக்கும்.
வாழைப்பழங்களை சீப்பு சீப்பாகத்தான் வாங்க வேண்டும். அதை எதன் மீதும் வைக்கக்கூடாது. ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிட்டு உபயோகித்தால் விரைவில் பழுக்காமல் இருக்கும்.
=============================================
தர்பூசணியின் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். அதில் மிளகுத்தூள் அல்லது மிளகாய் தூள் தூவி, எண்ணெயில் வதக்கிப் பொரியல் செய்யவும். வித்தியாசமான சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்!
===============================================================
பாயசம் செய்யும்போது, சிலர் திராட்சைப்பழம் சேர்ப்பார்கள். அதற்கு பதில் பேரீச்சம் பழம் நறுக்கிச் சேர்த்தால் வித்தியாசமான சுவை தரும், சத்தானதும் கூட!
=======================================================
ஆரஞ்சுப் பழத்தில் நான்கைந்து கிராம்பு களைக் குத்தி, அதை கிச்சன் அலமாரியில் கட்டித் தொங்கவிட்டு விட்டால், சமையலறை மணம் வீசும். பூச்சிகள் எட்டிப் பார்க்காது!
========================================
ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக்கி, ரசத்துடன் சேர்த்தால் மணமும் சுவையும் கூடும்.

அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு திராட்சை அற்புத மருந்து. திராட்சையை சாறாக்கி, 50 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை பருகவும். சீக்கிரம் குணமாகும்
================================.
முலாம்பழம் குளிர்ச்சி தருவது.
அதை அப்படியே அல்லது ஜூஸாக செய்து சாப்பிடலாம். அது மலச்சிக்கலைத் தடுக்கும்.
.. சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கடுகடுப்பு, எரிச்சலையும் போக்கும்

. உள்ளங்கை அளவு உலர்ந்த திராட்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் அந்த திராட்சையைக் கைகளால் பிசைந்து, சாறு எடுத்து வடிகட்டவும். வடிகட்டியதில் சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாது.
=====================================
கர்ப்பிணிகள் தினமும் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் பால் நன்கு சுரக்கும்
=====================================
. தக்காளிப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம். கர்ப்பிணிகள் தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும். பற்களும் உறுதியாக இருக்கும்.
==========================================
வில்வப் பழத்தோடு தேனும் சர்க்கரையும் சேர்த்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் நெருங்காது.

தர்பூசணிப் பழத்தின் வெள்ளைப் பகுதியைத் தூக்கி எறிய வேண்டாம். அதை சீவி, அரிசியுடன் சேர்த்து அரைத்து தோசை வார்க்கலாம். உளுந்து தேவையில்லை. தோசை பிரமாதமாக இருக்கும்.
courtesy;''dinakaran