"வருங்கால இளைய இயக்குநர்களுக்கு முன் உதாரணமாக "தலைமுறைகள்' படத்தைப் படைத்துள்ளேன். இனி, இதை விடச் சிறந்த படைப்புகளை இளம் தலைமுறையினர்தான் சர்வதேச உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகளாக உங்களின் அடையாளமாக இருந்து வரும் தொப்பியைக் கழற்றி விட்டு நடித்தீர்களே என்று கேட்கிறார்கள். எனது அடையாளம் தொப்பியல்ல. எனது படைப்புகளே.
ஃபிலிம் ரோல் சினிமாவிலிருந்து இப்படத்தின் மூலம் டிஜிட்டல் சினிமாவுக்கு மாறியிருக்கிறேன். இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்து கொண்டு படம் எடுப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. ஆனால் பிறகு பல விஷயங்களைக் கற்று கொண்டு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். என் நண்பன் இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இது போன்ற பின்னணி இசையைக் கொடுத்து விட முடியாது. இப்படத்தில் பாடல்கள் கிடையாது.
நான் வாழும் காலங்கள் வரை எனது படங்களுக்கு என் நண்பன் இளையராஜாதான் இசையமைப்பார். என் மௌனத்தின் மொழி அன்று முதல் இன்று வரை அவருக்கு மட்டுமே தெரியும். என் தேவைகள் எதுவென உணர்ந்து என் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனால் மற்ற இசையமைப்பாளர்களை நான் தேடிப் போவதில்லை. நான்கே தமிழ் வார்த்தைகள் தெரிந்த பேரனுக்கும், இரண்டு, மூன்று ஆங்கில வார்த்தைகள் மட்டுமே தெரிந்த தாத்தாவுக்கும் இடையேயான உறவுதான் இந்த "தலைமுறைகள்'.''
- பாலுமகேந்திரா