காய்கறிகள் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை

tnkesaven

New member
வாழைத்தண்டு வாங்கும்போது, மேல்பகுதியில அதிகமா நார் இருக்கக் கூடாது. தண்டுப் பகுதி சிறுத்து இருக்கணும்.

பெரிய வெங்காயத்தை (பல்லாரி) நசுக்கினாலே சாறு வரணும். சாறு கொஞ்சமா வந்தா... பழைய வெங்காயம்னு அர்த்தம். அதுல, சுவையும், சத்தும் சொல்லிக்கற மாதிரி இருக்காது.

அதேசமயம், சின்ன வெங்காயத்துல பழைய வெங்காயம் வாங்குறதுதான் நல்லது.
இரண்டு பல் மட்டும் இருக்குற மாதிரி முத்து முத்தா இருக்கற வெங்காயம்தான் தரமானது.

பூண்டு வாங்கும்போதும், இப்படி பல் பல்லா வெளியில தெரியற மாதிரியா வாங்கணும். இதுதான் தரமான பூண்டு! முருங்கைக்காயை, லேசா முறுக்கிப் பாருங்க. ரப்பர் மாதிரி வளைஞ்சா... நல்ல காய். முறைப்பா வளையாம இருந்தா... முத்திப் போச்சுதுனு அர்த்தம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்குசர்க்கரை வள்ளிக்கிழங்கு --/ கொஞ்சம் கிழங்க உடைச்சு, வாயில போட்டுப் பார்த்தா, இனிக்கணும். இனிப்பு குறைவாகவோ... கிழங்கு கருப்பு நிறத்துலயோ... இருந்தா, அது தரம் இல்லாத கிழங்கு.

கோவைக்காய் பச்சையா இருந்தா மட்டும்தான் வாங்கணும். லேசா சிவப்பு நிறம் இருந்தா, வாங்கக் கூடாது. அதுல சுவை இருக்காது.

தேங்காயை காது பக்கத்துல வெச்சு தட்டிப் பார்த்து முத்தலா... இளசானு கண்டுபிடிப்பாங்க.
அதேபோல மாங்காயையும் தட்டிப் பாக்கணும். சத்தம் வந்தா... கொட்டை சிறிசாவும், சதை அதிகமாவும் இருக்கும்னு புரிஞ்சுக்கலாம்.
அடிப்பகுதி மட்டும் குண்டா இல்லாம, காய் முழுதும் ஒரே சைஸ்ல இருந்தாதான் தரமான பீர்க்கங்காய். முளை விடாம, பச்சை நரம்பு ஓடாம இருக்குற உருளைக் கிழங்குதான் நல்ல கிழங்கு. அதுலயும், கீறினா... தோல் உறியற கிழங்கா பார்த்து வாங்கணும். அப்படி உறியலனா... வாங்கக் கூடாது.

கருணைக்கிழங்குல (சேனை) பெருசா இருக்கற கிழங்கா பார்த்து வாங்கணும். அதுதான் நல்லா விளைஞ்சி இருக்கும். வெட்டினா... உள்பக்கம் இளஞ்சிவப்பு நிறத்தில இருக்குதாங்கறதையும் உறுதிப்படுத்திக்கோங்க. முளைவிட்டது போல, ஒரு முனை நீண்டுட்டிருக்கற கிழங்குல சுவை இருக்காது.
சுரைக்காயை நகத்தால் அழுத்தும் போது, நகம் உள்ளே இறங்கினா... இளசு. இல்லாட்டி, முத்தல். அவரைக்காய் விதை, பெரிசா இருந்தா முத்தல். விதை சிறுசா இருந்தாதான் நார் இல்லாம, சுவையா இருக்கும். குண்டு, குண்டா இருக்கற பாகற்காயை வாங்கக் கூடாது. அதுல அவ்வளவா சதைப் பிடிப்பு இருக்காது. தட்டையானக் காய்தான் சதைப் பிடிப்பாவும் இருக்கும். ருசியாவும் இருக்கும்.
மொச்சைக் கொட்டை பெரிசு, பெரிசா இருந்தாதான் தரமானது. வாய்ப் பகுதி விரிசல் பெரிசா இல்லாத சௌசௌ காயைத்தான் வாங்கணும். விரிசல் இருந்தா... முத்திப்போச்சுது
மிளகாய்ல விதம்விதமா இருக்கு. அதுல, அளவுக்குத் தக்கப்படி காரமும் இருக்கும். நீளமான மிளகாய்ல காரம் குறைவா இருக்கும். குண்டு மிளகாய்லதான் காரம் தூக்கலா, வாசனையும் பிரமாதமா இருக்கும்.

ஹைதராபாத்தில் குண்டூர் மிளகாய் என்று நீளமானதாகவும், சிறு குறு சைசிலும் இருவைகையில் இருக்கும்,இந்த இரண்டும் படு காரமாக இருக்கும்,
 
Last edited by a moderator:
ஜயா! நம்மசாதி!

கொஞ்சமிருங்க! நானும் சந்தைக்கு போய்ட்டுவாரன்!
காய்கறி வாங்கிவைக்கலனாக்கா...
வாயிக்கு வந்தபடி வசவுதாங்கோ!
 
நல்ல பயனுள்ள தகவல்! பாராட்டுக்கள்.

பெரிய வெங்காயம் நசுக்கிப் பார்ப்பதற்கும்
...பேருருளைக் கிழங்கதனைக் கீறிப் பார்ப்பதற்கும்
முருங்கைக் காயதனை முறுக்கிப் பார்ப்பதற்கும்
...முற்றிய தேங்காயைத் தட்டிக் காண்பதற்கும்
சருக்கரைக் கிழங்கதனை வெட்டி சுவைப்பதற்கும்
...சத்தான வெண்டையை ஒடித்துக் காண்பதற்கும்
ஒருப்படும் கடைக்காரன் இருந்தால் சொல்வீரே!
...ஒருநாள் அவனிடம் காய்கறி வாங்கிடுவேன்.
 
Back
Top