உங்களுக்கு தெரியுமா ??

Rifan.N

New member
==> ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி அல்ல

அந்த காலத்தில் தகவல் அனுப்பும் கருவியை கண்டு பிடிக்க பலர் முயன்றனர் அடிப்படை உண்மைகளை எந்த தனி மனிதனும் கண்டு பிடிக்கவில்லை. பலரின் கூட்டு முயற்சியே இது.

ஆனாலும் ரேடியோவை முறைப்படி கண்டுபிடித்தவர் யார் என விசாரித்து பார்த்தால், அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நிக்கோல டெஸ்லா என்பவர் தான்.

ஆனால் அந்த காலத்தில் காப்புரிமை சட்டங்கள் தெளிவாக இல்லாததால், இவர் காப்புரிமை பெறவில்லை. இதை சற்று மாற்றி பெயரை தட்டி சென்றார் மார்க்கோனி. ஆனால் அறிவியல் உலகில் மார்க்கோனியை விட டெஸ்லாவையே பெருமையாக பேசுகிறார்கள்.

==> 700 வருடங்கள் பழமையான மம்மி பற்றிய மர்ம தகவல்கள்

egypt_mummy_001.jpg

அமெரிக்காவில் உள்ள நூதன சாலையில் வைக்கப்பட்டுள்ள இற்றைக்கு 700 வருடங்கள் பழமையான மம்மி பற்றிய அரிய தகவல்கலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இம் மம்மி 50 வருடங்களுக்கு முன்னர் பெரு நாட்டிலிருந்து அமெரிக்க நூதனசாலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மம்மி 40 வயதுடையது. இது 700 வருடங்களுக்கு முன்னர் இறந்த பெண்மணியின் சற்று சிதைவடைந்த எலும்புக் கூடாகும். இப்பெண்மணி இறக்கும் போது கற்பமுற்றிருந்ததாக புதை பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இவரது உடலைப் பாதுகாப்பதற்கு எகிப்திய மம்மிகளைப் போன்று வாசனைத் திரவியங்களை உபயோகிக்காது இயற்கையான வளி, வெப்பம் என்பனவற்றை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த மம்மி பாதுகாப்பக்கப்பட்டிருப்பது பற்றிய ஆய்வினை நவீன தொழிற்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்டதென தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது மம்மியின் எந்தவொரு உள் உடல் உருப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது
 
==> உலகிலேயே விலை உயர்ந்த துப்பாக்கி

costly_gun_002.jpg

உலகிலேயே அதிக விலையை கொண்ட துப்பாக்கியாக நவீன ரக துப்பாக்கிகள் இருக்கும் என உங்களில் சிலர் நினைத்திருப்பீர்கள்.

எனினும் உலகில் அதிக விலையை கொண்ட துப்பாக்கி மரத்தால் ஆன துப்பாக்கியே ஆகும். இந்தத் துப்பாக்கி சுவிஸ் நாட்டில் உள்ள கம்பெனி ஒன்றினால் தயாரிக்கப்பட்டது

costly_gun_003.jpg

costly_gun_004.jpg

costly_gun_005.jpg

costly_gun_006.jpg

costly_gun_007.jpg
 
==> சீனாவில் விசித்திரமான உயிரினம் கண்டுபிடிப்பு

இந்த விசித்திரமான உயிரினம் சீனாவிலுள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு வீட்டில் உணவினைத் திருடும் போது அவ்வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டது.

இதன் தலைப் பகுதியல் முடிகள் இல்லாமலும், கண்கள் பெரிதாகவும், சிறிய உடலைக் கொண்டதாகவும் காணப்பட்டது.

அவர்கள் இதனை ஒரு வேற்று கிரகத்தை சேர்ந்த உயிரினம் என கருதுகின்ற அதேவேளை குரங்கினத்தை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

different_animal_002.jpg

different_animal_003.jpg
 
==> மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்

maruties_money_002.jpg

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.

கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம்

maruties_money_003.jpg

maruties_money_004.jpg

maruties_money_005.jpg

maruties_money_006.jpg

maruties_money_007.jpg
 
Rifan இது தேவாங்கு இனத்தை சேர்ந்தது..கொல்லி மலை காடுகளில் உள்ளது
 
Rifan mr.Tesla மிங்காந்த அலை பற்றியும் அதன் இணைப்பு பற்றியும் கண்டறிந்தார். இது நடந்தது 1890-ல்....1894-ல் கல்கத்தாவில் நமது நாட்டின் இயற்பியல் அறிஞர் J.C.Bose அவர்கள் கம்பி இல்லா தந்தி ரேடியோ அலைவரிசை மூலம் வெடி மருந்தையும்., தகவல் தொடர்பையும் இயக்கி காட்டினார்.....
 
==> ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி அல்ல

அந்த காலத்தில் தகவல் அனுப்பும் கருவியை கண்டு பிடிக்க பலர் முயன்றனர் அடிப்படை உண்மைகளை எந்த தனி மனிதனும் கண்டு பிடிக்கவில்லை. பலரின் கூட்டு முயற்சியே இது.

ஆனாலும் ரேடியோவை முறைப்படி கண்டுபிடித்தவர் யார் என விசாரித்து பார்த்தால், அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நிக்கோல டெஸ்லா என்பவர் தான்.

ஆனால் அந்த காலத்தில் காப்புரிமை சட்டங்கள் தெளிவாக இல்லாததால், இவர் காப்புரிமை பெறவில்லை. இதை சற்று மாற்றி பெயரை தட்டி சென்றார் மார்க்கோனி. ஆனால் அறிவியல் உலகில் மார்க்கோனியை விட டெஸ்லாவையே பெருமையாக பேசுகிறார்கள்.

சரிதான், எல்ல காலத்திலும் எங்குமே நடப்பதுதானே இது !
 
==> 700 வருடங்கள் பழமையான மம்மி பற்றிய மர்ம தகவல்கள்

egypt_mummy_001.jpg

அமெரிக்காவில் உள்ள நூதன சாலையில் வைக்கப்பட்டுள்ள இற்றைக்கு 700 வருடங்கள் பழமையான மம்மி பற்றிய அரிய தகவல்கலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இம் மம்மி 50 வருடங்களுக்கு முன்னர் பெரு நாட்டிலிருந்து அமெரிக்க நூதனசாலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மம்மி 40 வயதுடையது. இது 700 வருடங்களுக்கு முன்னர் இறந்த பெண்மணியின் சற்று சிதைவடைந்த எலும்புக் கூடாகும். இப்பெண்மணி இறக்கும் போது கற்பமுற்றிருந்ததாக புதை பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இவரது உடலைப் பாதுகாப்பதற்கு எகிப்திய மம்மிகளைப் போன்று வாசனைத் திரவியங்களை உபயோகிக்காது இயற்கையான வளி, வெப்பம் என்பனவற்றை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த மம்மி பாதுகாப்பக்கப்பட்டிருப்பது பற்றிய ஆய்வினை நவீன தொழிற்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்டதென தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது மம்மியின் எந்தவொரு உள் உடல் உருப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது

700 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் செய்ததை அவர்கள் எப்படி செய்தார்கள் என்று நவீன உபகரணங்களக்கொண்டாவது ஆராய்ந்து நம்மால் முழுமையாக கண்டு பிடிக்க முடிகிறதா ?
 
==> சீனாவில் விசித்திரமான உயிரினம் கண்டுபிடிப்பு

இந்த விசித்திரமான உயிரினம் சீனாவிலுள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு வீட்டில் உணவினைத் திருடும் போது அவ்வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டது.

இதன் தலைப் பகுதியல் முடிகள் இல்லாமலும், கண்கள் பெரிதாகவும், சிறிய உடலைக் கொண்டதாகவும் காணப்பட்டது.

அவர்கள் இதனை ஒரு வேற்று கிரகத்தை சேர்ந்த உயிரினம் என கருதுகின்ற அதேவேளை குரங்கினத்தை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

different_animal_002.jpg

different_animal_003.jpg

பாவம் அது மனிதர்கள் கையில் அகப்பட்டு என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறதோ !
 
தகவலுக்கு நன்றி :)

Rifan mr.Tesla மிங்காந்த அலை பற்றியும் அதன் இணைப்பு பற்றியும் கண்டறிந்தார். இது நடந்தது 1890-ல்....1894-ல் கல்கத்தாவில் நமது நாட்டின் இயற்பியல் அறிஞர் J.C.Bose அவர்கள் கம்பி இல்லா தந்தி ரேடியோ அலைவரிசை மூலம் வெடி மருந்தையும்., தகவல் தொடர்பையும் இயக்கி காட்டினார்.....

அட அப்படியா..... நான் பார்த்தது இல்லை :sprachlos020:
Rifan இது தேவாங்கு இனத்தை சேர்ந்தது..கொல்லி மலை காடுகளில் உள்ளது
 
சரியாய் சொன்னீங்க :)
சரிதான், எல்ல காலத்திலும் எங்குமே நடப்பதுதானே இது !

வாஸ்தவம் தான்.... பரிபூர்ணமா இல்லனாலும் ஆராய்ச்சி முடிவுகள்ள அறிவு வளர்ச்சிக்கு ஏதுவாக அமைகின்றது தானே :rolleyes:
700 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் செய்ததை அவர்கள் எப்படி செய்தார்கள் என்று நவீன உபகரணங்களக்கொண்டாவது ஆராய்ந்து நம்மால் முழுமையாக கண்டு பிடிக்க முடிகிறதா ?

ஹா....ஹா....அதுக்காக தான் கண் முன்னே வராம திருடி சாப்பிடுகிறது போல ;)
பாவம் அது மனிதர்கள் கையில் அகப்பட்டு என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறதோ !
 
==>இரவில் பூக்கும் ஓக்கிட் மலர் கண்டுபிடிப்பு

இரவில் மலரும் ஒரே ஒரு வகை ஓக்கிட் மலராக Bulbophyllum என்ற வகை பூ உள்ளதாக தாவரவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலுள்ள 25,000 வகை ஓக்கிட் மலர்களில் இந்த இனம் மட்டுமே இரவில் பூக்கின்றது.

இந்த மலர் ஏன் இரவில் பூக்கின்றதென்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.

இந்தப் பூ பப்புவா நியூகினி அருகிலுள்ள நியூ பிரிட்டன் என்ற தீவில் டச்சு ஆய்வாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

bulbophyllum_night_flower_002.jpg

பூக்கள் இரவில் மலர்வது*இல்லையெனினும் ஒரு ஓக்கிட் வகைப் பூ இவ்வாறு மலர்வது அதிசயம் என்றே கூறப்படுகிறது

இரவில் மலரும் பூக்களில் புகழ்பெற்றதாக இரவில் மலரும் நாகதாளிப் பூ உள்ளது

bulbophyllum_night_flower_003.jpg

வருடத்தில் ஒருமுறை பூக்கும் இதன் அளவு ஓர் உணவுத்தட்டின் அளவில் காணப்படும். இது வெளவால்களையும் ஈர்க்கும் தன்மைகொண்டது.

ஆனால் இந்த ஓக்கிட்டினால் எது ஈர்க்கப்படும் என்பது தெரியவில்லை என்றும் இதனால் இரவில் திரியும் பூச்சிகள் ஈர்க்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

bulbophyllum_night_flower_004.jpg
 
==>ஆண் இனத்தில் குழந்தைப் பெறும் உயிரினம்

கடல்வாழ் உயிரினங்களில் ஆண் இனத்தில், இனப்பெருக்கம் செய்தல் என்ற சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது கடற்குதிரைகள். இவை மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் ஆகும்.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை(200) ஆண் கடற்குதிரைகளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் முட்டையிடுகின்றன.

இந்த முட்டையினை ஆண் கடற்குதிரைகள் ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. இந்த குஞ்சுகள் சிறிது காலம் இந்தப் பையில் தான் வளர்கின்றன.

இந்த குஞ்சுகளின் எண்ணிக்கை 50 முதல் 100 வரை இருக்கும். இதன் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீற்றராக காணப்படுகிறது. உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன.

இந்த குதிரைகள் தன்னுடைய*வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு தான் நிற்கும்.

pregnant_seahorse_002.jpg

pregnant_seahorse_003.jpg

pregnant_seahorse_004.jpg

pregnant_seahorse_005.jpg

pregnant_seahorse_006.jpg

pregnant_seahorse_007.jpg

pregnant_seahorse_008.jpg

pregnant_seahorse_009.jpg

pregnant_seahorse_010.jpg

pregnant_seahorse_011.jpg
 
==>ரஷ்ய ஆர்க்டிக் கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்

நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன.

ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை:

kadal1.jpg

kadal2.jpg

kadal5.jpg

kadal4.jpg

kadal3.jpg
 
==>பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின்(நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது.

வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது

அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கமெராக்கள் உறுதி செய்துள்ளன

new_planet_001.jpg

new_planet_002.jpg

சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உட்பட பல அம்சங்களை பார்க்கும் போது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது.

கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது

new_planet_003.jpg

new_planet_004.jpg
 
==>சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை வெண்மை நிறமான ஆமை

உலகில் ஏராளமான விலங்கினங்கள் அழித்துவிட்டாலும் இன்னும் அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

இவ்வகையில் சீனாவில் அரிய வகை ஆமை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹேனான் மாகாணத்தின் மஞ்சள் நதியின் அருகில் இந்த வெண்மை நிறமான ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை ஆமைகள் அல்பினோ வெண் ஆமை என அழைக்கப்படுகிறது. இவை 40 செ. மீற்றர் நீளம் வரை வளரக்கூடியவையாகும்.

மேலும்*6.5 கிலோ எடையுடன் காணப்படும்*இந்த ஆமையின் உடலில் மெல்லிய சிவப்பு நிறத்திலான புள்ளிகளும் காணப்படுகிறது

albino_turtise_002.jpg

albino_turtise_003.jpg
 
==>டால்பினைப் போல மனிதர்களும் நீந்துவதற்கு புதிய கண்டுபிடிப்பு

jetpack_002.jpg

ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி செய்து வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று.

நீச்சல்களில் பல வகைகள் காணப்படுகிறது. தற்போது டால்பினைப் போல நீந்தும் மனிதர்கள் காணப்படுகின்றனர். டால்பின்கள் போலவே மனிதர்களும் நீந்துவதற்கு dolphin jetpack என்ற கண்டுபிடிப்பு உதவுகிறது.

இணையத்தில் பிரபலமாகியுள்ள இந்த jetpackவீடியோவைப் காணலாம்.

jetpack_003.jpg

jetpack_004.jpg

jetpack_005.jpg
 
==>யூரோப்பா கிரகத்தில் தண்ணீர்

வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் 10 கிலோ மீற்றர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது

அதில் வியாழன் கிரகத்தில் பனிக்கட்டி படிவங்கள் இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பதில் விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் வியாழன் கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

யூரோப்பாவில் 10 கிலோ மீற்றர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 கிலோ மீற்றர் ஆழத்துக்கு படிந்து உள்ளன.

இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும், ஏரிகளும் இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
 
==>அமெரிக்கா - மெக்ஸிக்கோ இடையிலான பாரிய சுரங்கப்பாதை

பாரிய போதைப்பொருள் கடத்தல் சுரங்கப்பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கு marijuana என்ற 17 டன் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவையும் மெக்ஸிக்கோவையும் இணைக்கும் இந்த ரகசிய சுரங்கப் பாதை 2500 அடி நீளமானது.

அமெரிக்காவின் சாண்டியோகா தொழிற்பூங்கா ஒன்றில் இருந்து மெக்ஸிக்கோவின் எல்லை நகரமான Tijuana ஐயும் இணைக்கின்றது

Back
Top