நெஞ்சில் நிற்பவையும் ...சில எண்ணங்களும்...

இந்தப் பாடல்களின் படப் பதிவு அல்லது ஒலிப்பேழை கிடைக்குமா?
 
இந்தப் பாடல்களின் படப் பதிவு அல்லது ஒலிப்பேழை கிடைக்குமா?

ஜான் ,
கனியோ பாகோ...பாடலின் சுட்டி
இங்கு!
பாடலை தரவிறக்கம் செய்யும் முன்னர் பதியச் சொல்லும் ...பதிவும் எளிதே ...
இத்தளத்தில் எண்ணிறந்த பாடல்கள் தரமுடன் , கொஞ்சம் விவரத்துடன் பதியப்பட்டுள்ளன...
கேட்டு விட்டு சொல்லவும்
அன்புடன் ,
சுந்தரம்
 
எளியோர்க்கு செய்யும் தொழிலன்றி வேறேது தெய்வம்...



செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி - கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி ( செய்யும் )


பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம் ( செய்யும் )


சாமிக்குத் தெரியும், பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை - அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை - இதைப்
பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம் ( செய்யும் )


காயும் ஒரு நாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் நினைவும் நிலையாகும் - உடல்
வாடினாலும் பசி மீறினாலும் - வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம் ( செய்யும் )


படம் : ஆளுக்கொரு வீடு 1960
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடியவர்கள் : ஜமுனாராணி , L R ஈஸ்வரி..?


அன்பு நண்பர்களே ,
இந்தப் பாடல் அவ்வப்போது என் மனதில் தோன்றி மறையும் ...பல எண்ணங்களையும் , சில போழ்து குமுறல்களையும்
வெடிக்கச் செய்யும் ! பொருளாதார ரீதியிலான கீழ்த்தட்டு , நடுத்தட்டு மற்றும் வறிய மக்களைப் பலரும் பாடி
இருக்கின்றனர் - இவர்களில் சிலர் செலவத்தில் திளைத்தோர் !! ஆயினும் என்ன , கல்யாண சுந்தரம் பாடியது போல்
தெளிவும் வலிவும் கூட்டி பாடியோர் வெகு சிலரே ; இன்னும் சொல்லப்போனால் அவருக்கு நிகரானவர் இல்லை என்று கூட துணிந்து கூறலாம்... ' தெய்வம் ' யாது எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள்...
நம் யுகக்கவிஞன் பாரதி ஒரு நேரத்தில் இப்படிச் சொல்வான் :


" ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள் - பல்

லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்

டாமெனல் கேளீரோ ?


மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கும் மதியிலிகாள் ! - எத

னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்

றோதி யறியீரோ ? "



இவ்வரையறையை திண்ணமாய் எல்லோரும் ஏற்கார்...

இன்னும் பிறர்க்கு ,

" வானாகி மண்ணாகி வளியாகி , ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய ..."


இசைவதெல்லாம் தெய்வமாய் அமையக்கூடும் ...

ஆனால் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு - அவன் அவ்வளவு படித்தவன் இல்லையே , அவனுக்கு ஆன்மா ,
ஆத்மா , சத் எனும் ஞானப் பிதற்றல்கள் ஏது ... - ஈதெல்லாம் தெய்வமில்லை..
ஒரே வரியில் அழுத்தமாய் , திருத்தமாய் , தெள்ளியதாய் கூறிவிடுகிறான் ...
' செய்யும் தொழிலே தெய்வம் ' என !!!

எளிதாய்த் தோன்றும் இப்பாட்டில் உள்ள அரிதானக் கருத்துகளை நினைக்கின் மலைப்பாய்த்தான் உள்ளது . ஆழ்ந்த
உண்மைகளை லாவகமாயும் நிதர்சனமாயும் கண்முன் நிறுத்துகிறான் !
வெயிலின் துணையில் வேர்வைகள் விதையாகிறதாமே ...கவிஞன் இவன் வருங்காலம் தெரிந்துதான் இப்படி
எழுதியுள்ளான் ...இனி , விதையையெல்லாம் MANSANTO பன்னாட்டு நிறுவனத்திடம் டோப்பாக்காரர்களும்
வேட்டியில் திரிவோரும் அடகுவைக்கப் போவது அவனுக்கு தெரிந்துதான் இருக்கிறது...
விழித்துக் கொள்வோர் பிழைத்துக் கொள்வார்...

" .............................உடல்
வாடினாலும் பசி மீறினாலும் - வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம் "


இவ்வரிகளைக் கண்ணுறும்போதே கண்கள் பனிக்கின்றன...
கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை நெறியினை எவ்வளவு மேல்தட்டில் வைக்கிறான்...விண்ணிலும் மேலாகத்தானோ...!!!

பசி எவ்வளவு கொடுமையானது ...பட்டுக்கோட்டையின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பற்ற ஒரு கதாசிரியன் தன்
நாவலில் ..." எனக்கு யார்க்கிட்டவும் கோபம் கிடையாது பசி ஒன்னைத்தவிர . அது எவ்வளவு நீசமான ஜந்துன்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். பெரிய பீடை . இருக்கிற இடமே விடியாது .மனுஷனை அலபத்தனம் , முட்டாள்தனம் , சின்னத்தனம், விவஸ்தைகெட்ட துணிச்சல் எல்லாத்திலும் கொண்டு இறக்கி விடும் ..." எனக் கதை நாயகி சொல்வதாக எழுதியிருப்பான் !

இப்படியான பசி மீறினாலும் வழி மாறிடாமல் வாழ்வார்களாம் ...என்ன மேன்மை ...

" ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை "


என்பதைத்தானே அம்மக்கள் தங்கள் மொழியில் சொல்கின்றனர் ...

இப்போது சொல்லுங்கள் , நண்பர்களே , இது சாதாரண திரைப்பாடல்தானா...!!??


விஸ்வனாதான் ராமமூர்த்தியின் இசையும் பாடலைப்போலவே உயர்வாய் இருக்கும் ...

................... - இதைப்
பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்


என்பதைக் கேட்கும்போது செவிச்சுவை என்றால் என்னவென்று புரியும்...

அன்பன்,
சுந்தரம்
 
ஜிக்கியை நினைத்தாலே என் கண்கள் கலங்கி விடும் ....



ம் ம் ம் ம் ம் ம்

பண்ணோடு பிறந்தது தாளம்...
பண்ணோடு பிறந்தது தாளம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்....
பண்ணோடு பிறந்தது தாளம்...

கண்ணோடு கலந்தது காட்சி...
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி..

கண்ணோடு கலந்தது காட்சி...
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி..

மண்ணோடு மலர்ந்தது மானம்...
குல மகள் கொண்ட சீதனம் யாவும்...

பண்ணோடு பிறந்தது தாளம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்....
பண்ணோடு பிறந்தது தாளம்...

செல்வோம் என்றே ஆசை எண்ணும்...
அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்...

செல்வோம் என்றே ஆசை எண்ணும்...
அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்...

சொல்வோமென்றே உள்ளம் ஓடும்...
வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்...

ம் ம் ம் ம் ம் ம் ம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்....
பண்ணோடு பிறந்தது தாளம்...

ஒரு நாளும் பாடாத உள்ளம்...
இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

ஒரு நாளும் பாடாத உள்ளம்...
இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

படிக்காத பாடங்கள் சொல்லி...
முன்பு பழகாத கல்விக்கு தான் இந்த பள்ளி...

காணாத கதை இன்று காண்போம்...
அதை கண்டாலே பேரின்பம் தோன்றும்...

காணாத கதை இன்று காண்போம்...

ஆ ஆ ஆ ஆ ஆ ... ம் ம் ம் ம் ம் ம்......



திரைப் படம்: விடி வெள்ளி (1960)
இயக்கம்: ஸ்ரீதர்
இசை: A M ராஜா
பாடியவர்கள்: ஜிக்கி, P B ஸ்ரீனிவாஸ்
வரிகள் : கவியரசு



ஜிக்கியை நினைத்தாலே என் கண்கள் கலங்கி விடும் ...இப்போதும்தான் ...
என்ன ஒரு அற்புதமான பாடல் ...
மேலே உள்ள அய்வருமே அந்த அந்த துறைக்கெனவே இப்புவியில் பிறந்தவர்கள் எனச் சொலவது
ஒன்றும் மிகையாய் இராது என்றே நினைக்கிறேன் ...
ஜிக்கி அம்மையார் ஒர் பேட்டியில் கூறியிருப்பார் ...

" பாட்டு என்றால் எனக்கு உயிர் ...என் மனதும் வாயும் ஏதேனும் ஒரு மெட்டை எப்போதும் யாசித்துக் கொண்டேயிருக்கும்...
இந்த வயதிலும் என் சிந்தை யாவிலும் பாட்டு... பாட்டு என பாட்டு ஒன்றே நிறைந்திருக்கிறது...
என் பிள்ளைகளோடு கூட நான் இந்த அளவு ஈடுபாடு கொள்ளவில்லை..."

எப்படி ... எப்படி ...நெஞ்சு தாங்கவில்லயே ...!!!!

ஜி ராமநாதன் எனும் மகாப் பெரிய சங்கீத மேதை தேடிப் போய் பாடல் வாய்ப்புகளை கொடுத்தார் என்றால் ....

அதெல்லாம் சரி ...என்னிலும் ...என்ன என்னிலும் ...எனக்கு தெரிந்த இசை பூஜ்யமே ....
சரவணன் என்பாரது இப்பாடலுக்கான விளக்கத்தை தந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ...


Sridhar was the toast of the season just then as his first
directorial venture 'kalyaaNa parisu' was a mammoth success. It was
around the same time that Sivaji's close friend Vettaikkaaranpudhoor
Muthumanickam Gounder desired to produce a movie with Sivaji in the
lead. Sivaji acquiesced readily, and they called Sridhar over to explore
the possibilities of making a film with him. Sridhar came, and this was
the story he narrated...


And the undeniable highlight of the movie is of course Sivaji's captivating
performance. Delightfully underplayed and histrionics reigned in, Sivaji
explores fully the infinite possibilities that the role, with all its
complexities offers. Released on 31 December 1960, the movie celebrated
a 100 day run and elicited favorable reviews.

Raja was inexplicably not inclined to be generous to his
talented wife- in fact, it is said that Sridhar had to coax Raja to give
Jikki at least one song in 'kalyaaNa parisu', and that is how the
immortal 'thuLLaadha manamum thuLLum' came Jikki's way. However, in the
case of vidiveLLi, Raja seems to have been unusually kind to Jikki.
True, he reserved all Sarojadevi's songs for Suseela. Yet, he sent for
Jikki to render all the other songs. Besides 'koduththu paar paar paar',
Jikki got to sing a rollicking duet ' caaru savaari jOru' with Trichy
Loganathan and 2 solos of diverse allure, the fast-paced 'ninaithaal
inikkum subadhinam' and the poignant 'naan vaazhndhadhum unnaalE'.


Moonlight. The lovers in a moment of blissful
intimacy. Little do they perceive the storm of suspicion that is soon to
wreck their happiness. This then is the lull before the gale. Sridhar
ushers in the mood of ecstasy . the moon throwing slivers of silver on
the couple as they caress and carouse in the garden abloom with flowers,
the curtains in the verandah swaying gently in the breeze.. Vincent
plays with camera; with delicate shades and shadows, he lets the night
spell magic.


Raja crafts a treatise in tranquility to capture this fleeting moment.
Jikki heralds in the enchantment with her humming. the Sitar responds in
serenity.. PBS is in his euphonious elements, his timbre the perfect
foil to Jikki's dreamy lilt. the singers glide through the tune, as
music, being the food of love, plays on. a mellow magic such this is a
reminder of music as it ought to be, music that might assure one a
moment's happiness, or spare one a moment's sorrow.



அன்புடன் ,
சுந்தரம்
 
Back
Top