நெஞ்சில் நிற்பவையும் ...சில எண்ணங்களும்...

பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறன் பற்றி....



முகத்தில் முகம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால்

மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்

முகத்தில் முகம் பார்க்கலாம்

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்

அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்

இளமை பொங்கும் அங்கம் சிந்தும் - அழகில்
தங்கம் மங்கும் நிலையில் - நின்று

தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலென்னச் சோலைதனில்
பொழுதெலாம் மகிழலாம்
கலையெலாம் பழகலாம் சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்

முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்



படம்: தங்கப் பதுமை 1959
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ், விஸ்வநாதன், டி.கே. இராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா



அருமை நண்பர்களே,
பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறனைப் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை...

இருந்தாலும் விரிவாக இன்னொரு தடவை ...தற்போதைக்கு மனதில் தோன்றும் ,படித்ததில் இரு நினைவுகள் மட்டும்...

இள வயதிலேயே இறந்து போனவர் என்பது தெரியும் ...அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கு பயணத்துக்கு
ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது ...காலன் முந்தி விட்டான்..
விசுவனாதன் அஞ்சலி செலுத்த சென்றபோது அவரின் உடல் மீது பொதுவுடமைக்கட்சியின் சின்னம் கொண்ட
துணி போர்த்தப்பட்டிருப்பது கண்டுதான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றே அவருக்குத் தெரிந்ததாம். ஆச்சரியம்தான்...இல்லையா..!?

அடுத்து , அவர் மரணத்தில் அடியோடு மனம் உடைந்து போனவர் ஏ.எம்.ராஜா...
'கல்யாணப் பரிசு' படத்திற்கு அனைத்து பாடல்களும் பட்டுக்கோட்டையார்தானே...இன்றளவும் நினைவில் நிற்கும்
இலக்கியத் தரத்திலான அப்பாடல்களுக்கு இசை அமைத்ததையும், அவரும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக
அங்கீகரிக்கப்பட்டதையும் அவர் மறக்கவில்லை...அவர் மிகவும் உணர்ச்சிமயமானவர்...ஈமச்சடங்குகளுக்குக் கடைசி
வரை நின்றது மட்டுமல்லாமல் அதில் பெரும்பகுதி செலவும் அவரதுதான்...

அது அவரது நன்றிக்கடனாக மட்டும் இருக்க இயலாது , நண்பர்களே ...ஒரு உன்னதக் கவிஞனுக்கு ஒரு பெரும்
இசைக்கலைஞனின் ஆத்மார்த்தமான அஞ்சலியாகத்தான் இருக்க முடியும்...சரிதானே...!

இதை , இன்றைக்கு , வாலிக்கு யார்யாரெல்லாம் துக்கம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதோடு ஒப்பிட்டால்தான்
ஏ.எம்.ராஜாவின் உயர்வை நிதானிக்கலாம்...

அன்புடன்,
சுந்தரம்
 
வாணி ஜெயராமின் துல்லிய உச்சரிப்பும் , நிறைவான குரல் வளமும் ....



யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே..
(யாரது..)

மார்கழி பூக்கள் என்னை தீண்டும் ஆ ஆ..
மார்கழி பூக்கள் என்னை தீண்டும்
நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும்
தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்
(யாரது..)

தாமரை ஓடை இன்ப வாடை ஆ ஆ..
தாமரை ஓடை இன்ப வாடை
வீசுதே வா
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்
இன்ப சாறும் ஊருதே
ஆளானதால் வந்த தொல்லை
காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை
(யாரது..)


படம்: நெஞ்சமெல்லாம் நீயே
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்



இப்பாடலைப்பாடிய வாணி ஜெயராம் துல்லிய உச்சரிப்பும் ,
நிறைவான குரல் வளமும் ,
தேர்ந்த இசை ஞானமும் உள்ளவர்...!
அவருக்காகவே இப்பாட்டு...!!


தமிழ் மொழி உச்சரிக்கப்படுதல் குறித்து எனக்கு எப்போதும் வருத்தம் - சினம் கூட - உண்டு !
இப்பொழுது சொளந்தரராஜன் மறைவு வேறு அதனை மிகைப்படுத்தியிருக்கிறது. நான் பலரிடம்
நெடுங்காலம் சொல்லிவருவது - தமிழ் உச்சரிப்பைத் திருத்திக் கொள்ள டி.எம்.எஸ் , சீர்காழி போன்றோர்
பாட்டைக் கேளுங்கள் என்று..! யார் கேட்கிறார்கள் அல்லது அக்கறைப்படுகிறார்கள்..!?

ஆனால் , இவர்களே ஆங்கிலத்தில் ஒரு தவறான உச்சரிப்பைத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள்..என்ன பேதமை !!


நெடுநாட்களாக என்னை வருத்துவது இது :
தொ.கா நிகழ்ச்சிகளிலும் மற்றைய நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு கொண்டுதான் வருகிறார் ;

இவர் தமிழ் பேசும் விதம் ...இவர் நிகழ்ச்சி முடிவில் அடிக்கடி கூறுவது :
" இந்தாருங்கல் , பிடியுங்கல் , உங்கல் பரிசை " - இப்படி எல்லோர் மீதும் 'கல்'லைத் தூக்கிப்
போடுவதே இவரின் ' தமிழ்த் தொண்டு ' ; இந்த லட்சணத்தில் இவர் 'கவிதாயினி' வேறாம்...!

ஒரு ரிக்க்ஷாக்கரரோ அல்லது வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ளோர் யாரேனும் இப்படிப்
பேசினால்கூடப் பொறுக்கலாம் ; இவர்களை எப்படிப் பொறுப்பது...!

போய்த் தொலைக்கட்டும் ...இன்று , ல, ள, ழ எல்லாம் ஒன்றாகிக் கொண்டிருக்கும்போது இதெல்லாம் எம்மாத்திரம்...!


Today there is an article on T M S in a famous daily , sharing some nostalgic
notes ; here are some excerpts from it !

His contemporaries – Sirkazhi, PBS and ALR – were great and famous but TMS was unbeatable.
The voice lent itself to anything from devotional to romance.
The majesty was incomparable.

It was the diction that clinched it. The words flow fluently, syntax intact, in the tough lyric, ‘Vadivelum Mayilum Thunai.’
His voice acted, literally, whether it was anguish as in ‘Annan Kaattiya Vazhiyamma’ and much later, ‘Deivamae…’
and ‘Aattuvithal Yaaroruvar…’ or devotional (‘Marudamalaiyanae…’) or romance (‘Kaatru Vaanga Ponaen’).
‘Oli Mayamana Edirkalam,’ ‘Malargalaippol Thangai Urangugiral…’ brim with a brother’s pride and affection.

None breathed life into Kannadasan’s lyrics as picturesquely as TMS did.

Among the songs a few stand alone for the way they reflect the mood with minimal orchestral support.

For instance, ‘Unnai Arindal…,’ ‘Oraayiram Paarvaiyilae,’ ‘Yaarai Nambi Naan Porandaen…,’ ‘Sumaithangi Saaindal…’
‘Thalaatupaadi Thaayaga Vendum…’’ ‘Nethuparicha Roja…’ and the haunting ‘Yaaranda Nilavu…’

Everything came to a standstill, whenever these songs were played. So poignant are the lyrics and the music.
The song fades even as Sivaji Ganesan cycles away into the sunset in ‘Manidan Maarivittan…,’ voice and visual in perfect sync!
The majestic voice also had a soothing side.

The songs are still available, thanks to youtube, ipod, etc.
But can they recreate the atmosphere the humble transistor provided back in those golden days?
The window has shut, for ever
.


அன்பன்,
சுந்தரம்
 

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்


(நலம் வாழ..)



மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்



ஐயா,
இவைகள் தான் சரியான வரிகள்! :)
 
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்



ஐயா,
இவைகள் தான் சரியான வரிகள்! :)

ரொம்ப நன்றி !
எனக்கு உள்ள பல இன்னல் ( வேலை அல்ல ) களுக்கு இடையேதான் நான் இந்த இடுகைகளைச் செய்வதும்...
நானே ஒரு ' perfectionist ' ஆக இருக்க ஆசைப்படுவன்தான்...முடிவதில்லை என்பது கண்கூடு...
பிழைக்கு பொறுக்க ...
உண்மையில் அடுத்த இடுகைக்காக வரும்போதுதான் இதனைப் பார்க்க நேரிட்டது...
அன்புடன்,
சுந்தரம்
 


அன்பே வா
அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே

உன் காதல் சரம் என் மீதினில்
என் காதல் மனம் உன் மீதினில்
விண்மீதே இருள் தான்
நாடுதே (விண்மீதே)
ஆ என் செய்வேன்
நினைவே தேடுதே
(அன்பே வா)

ஓ வழிக்காணேன் பூமி மீதில்
வந்து காண்பாய் நீயே கனவில்
(அன்பே வா)

இன்று என் தாபம் தன்னை
பார்க்கவா
உன்னை நீ நாடி
என்னைப்பார்க்கவா
முன்னம் நீயே பார்க்காத
வேடிக்கை
மூச்சு போகின்ற விந்தை
பார்க்கவா


திரைப்படம் : அவன் 1953
பாடியவர்: ஏ.எம்.ராஜா, ஜிக்கி
வரிகள் : கம்பதாசன்
இசை: ஷங்கர் ஜெய்கிஷன்



' அவன் ' திரைப்படத்தில் அத்துனை பாட்டுகளும் முத்துகளே !
மும்பாயில் பாடல்கள் முதலில் இந்தியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின்னர்..தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன ...
அதனால் , ஜிக்கியினால் , இந்தியின் இசை அசைவுகளை விடவும் கூடிய இனிமைகளையும்
அர்த்த பாவங்களையும் மெருகூட்டி கொண்டுவர முடிந்திருக்கிறது !
இது அங்குள்ள இசையரசியை மிக்க கலவரப்படுத்தியிருக்கிறது !
எங்கே தன் வாய்ப்புகள் குறைந்து விடுமோ என்றும் அஞ்சி அதற்கான முனைப்புகளையும் செய்துள்ளார்!

ஜிக்கி அதனால் எல்லாம் பாதிக்கப்படாமல் மிக அற்புதமாக , அனைத்துப்பாடல்களிலும் உணர்ச்சி கொப்பளிக்கப்
பாடிக் கொடுத்து வந்துள்ளார்...


அது நிற்க ...

இந்த ' கம்பதாசன் ' பற்றியும் கொஞ்சம் கூற வேண்டும் ; இவர் புனைப் பெயரிலிருந்தே அவரின் மேன்மையினை
ஒருவாறு யூகித்துக்கொள்ளலாம்தானே...!
ஏற்கனனே கூட்டிய இசைக்கு பாட்டை எழுதி இருப்பினும் அதன் கதையோடும் இசையோடும் ஒன்றிய
சொற்சுவைப் பாடல்களை எவ்வளவு செறிவோடு படைத்திருக்கிறார்...என்றும் நினக்கலாம் இவரின் மேன்மைகளை!
இவர் யதார்த்த வாழ்விலும் காதல் தோல்வி கண்டவர் ; தன்னை நிராகரித்த காதலியை
நினைந்து நினைந்து நெக்குருகி , குடிக்கு அடிமைப்பட்டு , இளம் வயதிலேயே மாண்டு போனவர் !
ஆம் , மெய்வாழ்வில் இவர் ' தேவதாஸ் ' ....

தமிழுக்குத்தான் பெரு நட்டம் ஆனது...எதை , யாரை நொந்து கொள்ள...!!!???


கம்பதாசன் பற்றி இன்னும்...


அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள உலகாபுரத்தில்
1916-ல் தோன்றியவர் கம்பதாசன் எனும் இப்பிறவிக் கவிஞர்!

அவரது சிந்தனை,கண்ணோட்டம், பேச்சு அனைத்துமே கவிதைதான்!

"சின்னஞ் சிறு கவிதை, மலர் மேல் சிந்தும் பனித்துளி போல்;
சின்னஞ் சிறுகவிதை, உழவன் சிந்தும் விதைநெல் போல்;
சின்னஞ்சிறு கவிதை ,குழந்தை செவ்விதழ் முத்தம் போல்"

என்று கவிதைக்கு இலக்கணம் பகர்ந்த கவிஞர் கம்பதாசன் பற்றி
இன்று எத்தனை பேருக்குத் தெரியும்!

பல நூற்றாண்டு - உண்மையில் காலம் கடந்தும் - நினைவில் நிலைக்கும்
கவிதைகளையும் திரைப்பப் பாடல்களையும் புனைந்த கவிஞர் பெருந்தகை
அவர்!

நான் இன்றும் கேட்டு மயங்கும் , ஜிக்கியின் தேன் குரல் இசைத்த,
மெட்டுக்கு எழுதப்பட்ட பாட்டென சிறிதும் கருத முடியாத இதே 'அவன்'
திரைப்படத்திலான ' ஏகாந்தமாய் இம்மாலையில் என்னை வாட்டுது '-
கேட்டவுடன் என் கண்ணில் நீர் முட்டச் செய்யும் இப்பாடலை -
படைத்தவரும் இவரே!


...கம்பதாசன் பற்றி இணையத்தில் கிடைத்ததில் இன்னும் கொஞ்சம் மட்டும்...

கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை.

இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார்.
"காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர்-காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்), பாரதிதாசன் (சுப்புரத்தினம்),

சுரதா (சுப்புரத்தின தாசன்), கம்பதாசன் இவர்கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள்.

இவர்கள் பிறவிக் கவிஞர்கள்'' என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர்
வ.ரா., புகழ் மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஒன்றே போதும்.

"கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப்பட்டவை.
அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று!'' என்று கம்பதாசனின்
" முதல் முத்தம் " நூலுக்கு அளித்த முன்னுரையில் பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்.
இயற்கையிலேயே கவியுள்ளத்துடன் பிறந்த கம்பதாசன், புதிய கோணத்தில் சிந்தித்து தமிழன்னைக்கு

வாடாமலராக கவி மலர்களைச் சூட்டியவர். சென்ற நூற்றாண்டில் புகழ் பூத்த கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்தவர்கள்,
வழிகாட்டியாக மனத்தில் வரித்தவர்கள் மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர்.

கம்பதாசன், பாரதி, பாரதிதாசன் பாதையில் பாட்டெழுதத் தொடங்கி, பிறகு தமக்கெனப் புதுப்பாதை அமைத்துக் கொண்டார்.

திண்டிவனம் அருகில் உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், சுப்பராயலு-கோகிலாம்பாள் தம்பதிக்கு

1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர்

ஐவரும் பெண்கள். பெற்றோர் "ராஜப்பா' என்று செல்லமாக அழைத்தார்கள்.


அன்பன்,
சுந்தரம்
 
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?

நான் மிகவும் ரசித்து கேட்கும் ஒரு பாடல்!

மிகவும் அருமையான திரி. தொடருங்கள் நண்பரே.
 
வராது வந்த நாயகன்...



வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான் அஞ்சாமல் என்ன தாமதம்

உன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம்
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன் வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர்வரன்

தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அன்னாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண் மனம்

இன்னேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்

கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்

என் ஆசையும் உன் ஆசையும் அன்னாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்

தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்


அமுதம் செய்தோர் :1990's, இளையராஜா, அருண்மொழி, எஸ்.ஜானகி, அமரர் வாலி

நண்பர்களே,
வாலியும் இன்று இல்லை...
' தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பது போலும் பிறப்பு ' என்று சொல்லிச்சென்றான் இணையேதுமில்லா ஒருவன்...!
ஆனால் , வாலி தூங்கி எழுகையில் ' வாலி ' யாகவே விழித்தால்தானே...!?
பேராசைதான்...இல்லை...

வாலி திரைப் பாடல்களிலும் - தனிப்பாடல்களிலும் கோலோச்சியவர்தான் ;
பிரபாகரனின் மகன் கொலையானதற்கு வாரஇதழ் ஒன்றில் மறக்க இயலா வண்ணம் ஒரு கவிதையாத்திருந்தார் -
எனக்குப் பல மிகப் பிடித்தவை எனினும் , சந்த ஒசையிலும் காதல் சுவையிலும்
இப்பாடல் என்னை மிகவும் ஈர்த்த ஒன்று...பாட்டு இதோ...

இந்தப் பாடல் ' தாலாட்டுப் பாடவா ' என்ற் படத்தில் இடம் பெற்றது, நண்பர்களே !

இதில் ஆண்குரல் ' அருண்மொழி ' என்பாருடையது...இவர் இந்தப் பாட்டை மிகச்
சிறப்பாகவே பாடியுள்ளார் என்றே நினைக்கிறேன்... கேட்டுப்பாருங்கள் ...
ஆனாலும் இவருக்கு ஏன் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை என்பதில் எனக்கு இப்போதும் வியப்புதான் ;
இவர், இளையராஜாவின் இசைக்குழுவிலும் இருப்பவர்/இருந்தவர் தான் ;
அதுதான் தடையாயிற்றோ , என்னவோ...!!??


அன்பன்,
சுந்தரம்
 
சந்தோஷம் வேணுமென்றால் இங்கே கொஞ்சம்............

சந்தோஷம் வேணுமென்றால் இங்கே கொஞ்சம்
என்னை பாரு கண்ணால் கொஞ்சம் பாரு கண்ணால்
வண்டாடா தேன் மருவும் பூமாங்கனி
பேசும் வனிதாமணி நேசம் பெறவே இனி
என்னை பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால் ( சந்தோஷம் )

அன்பாலே நீ தேடும் ஆனந்தமே கூடும்
பெண்போலே வந்தாடும் காட்சி
ஆணில் அனுராகமே பாட இனிதாகுமே
காவலாய் மேவலாம் காதல் போலவே இனி
கொஞ்சம் பாரு கண்ணால் ( சந்தோஷம் )

உல்லாசமாய் இந்த உயிரோவியம்
வாழ்வில் உன்னோடு என்னாளும் வாழும்
இன்ப சல்லாபமே நம்மில் சரிலாபமே
ஸ்வாமி நீ தாமதம் செய்யாலாமோ இனி
என்னை பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால் ( சந்தோஷம் )


படம் : தேவதாஸ் ( 1953 )
பாடியவர்கள் : R . பாலசரஸ்வதி
ஆக்கியோர் : உடுமலை நாராயணகவி , கே .டி . சந்தானம்
இசை : C R சுப்பராமன் / M S விசுவநாதன்


சரத்சந்திரர் எனும் வங்காளி கதாசிரியரின் நாவல்கள் எனக்கு அறிமுகமானது பள்ளி நாட்களில் - அவரது புதினம்தான்
தேவதாஸ் ( 1917 ) . இதனை நான் திரைப்படமாகத்தான் பார்த்தேன் ; நாவலாகப் படித்ததில்லை . ஆனால் பொதுவான
அபிப்ராயம் என்னவெனில் , நாவலைவிட திரைப்படம் மிக நன்றாக அமைந்திருந்தது என்பதே ! இது சற்று வியப்பானதுதான்...
ஏனேனில் , திரைப்படங்கள் - குறிப்பாக நமது திரைப்படங்கள் - அப்படி அமைவதில்லை .


'தேவதாஸ்' பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது ; ஒரே மொழியில் கூட பலமுறை படமாக்கப்பட்டுள்ளது . மிகச்
சமீபத்தில் கூட இந்தியில் புதிதாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட படம் மிக வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ,
TIME பத்திரிகை , உலகத்தின் மிகச்சிறந்த 10 படங்களில் இதுவும் ஒன்றென உறுதிப்படுத்தியுள்ளது .

' தேவதாஸ் ' , தமிழில் 1953 -ல் திரைக்கு வந்தது . நாகேஸ்வரராவ் , சாவித்திரி ஜோடிக்கு பேரும் புகழும் பெருமளவு
இப்படத்தால் கிட்டிற்று . தேவதாஸ் , பார்வதி ஆகவே இருவரும் படத்தில் உருமாறியிருந்தனர் . யாராலும் , படத்தில்
நாகேஸ்வரராவின் கடைசி அரை மணி 'நடிப்பை ' மறக்க முடியாது ; உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சம் அது !
மேலும் அதில் M N நம்பியாரும் , பத்மினியின் அக்காவான லலிதாவும் மிக இயல்பான நடிப்பால் அவரவர்களின்
பாத்திரங்களுக்கு உயிரூட்டினர் . இயக்கம் ..வேதாந்தம் ராகவையா.

28 - வயதிலேயே மறைந்த இசை மேதை C R சுப்பராமன் ( 1924 - 1952 ) ...

படத்தின் இமாலய வெற்றிக்கு அதன் பாடல்களுக்கு பெரும் பங்குண்டு . தமிழ் தேவதாஸுக்கு இசை அமைப்பு
சிந்தாமணி ராமசாமி அய்யர் சுப்பராமன் - C R சுப்பராமன் - எனும் இமயம் ; படத்தின் தயாரிப்பாளர்களில்
ஒருவரும் ஆவார் . இந்த நேரத்தில் இதைச் சொல்லுதல் சாலும் . திரைப்படப் பாடல்களைப் பற்றி நம் இளையோர்கள்
என்பது குறித்து ஒருவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார் ; எனக்கும் கீழே உள்ள இது சரியெனப்படுகிறது .



" I have one complaint abt modern tamil film music fans.
A lot of them think that TFM starts with Ilayaraja and ends with A R Rehman.
They seem to be totally in the dark abt top MDs, singers etc of the pre-Ilayaraja era.
Why? The situation in Hindi is totally different. A lot of youngsters are quite conversant with old film songs, songs of the 50s and 60s.
My interest in TFM remains restricted to songs from the 50s and 60s. "


இன்னும் கொஞ்சம் பின்னர் .........

அன்புடன்,
சுந்தரம்
 
பல அலுவல்களுக்கிடையே நீங்கள் திரட்டி பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எல்லாமே மிகவும் அற்புதம். உண்மையில் ரசிக்கும் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதில்லை. பின்னூட்டங்கள் குறித்து கீதம் அவர்களின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. பல நல்ல நெகிழ்வு தரும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் உங்கள் பணி தொடரட்டும்.
 
உறவு மில்லை பகையு மில்லை ஒன்றுமே இல்லை........



தேவதாஸ் :
உறவு மில்லை பகையு மில்லை
ஒன்றுமே இல்லை
உள்ளதெல்லாம் நீயே அல்லால்
வேறே கதியில்லை
இனி யாரும் துணையில்லை ( உறவும் )

பார்வதி :
எனது வாழ்வின் புனித ஜோதி
எங்கே சென்றாயோ
இதயம் குளிர சேவை செய்யும்
நினைவும் வீணானதே
என் கனவும் பாழானதே ( எனது )

தேவதாஸ் :
முடிவில்லாத துன்பம் அதிலும்
இன்பம் வேறேதும்
கெடுதி செய்வார் தனிலும்
மேலாம் நண்பர் வேறேது
அடையா முடியா பொருளின்மீது
ஆசை தீராது
அபிமானம் மாறாது

பார்வதி :
குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே
வேறு வழியேகும்
குமுறி புகையும் எரிமலையும் ஓர்
நாள் அமைதியாகும்
மனதில் பொங்கும் துயர வெள்ளம்
வடியும் நாளேது
ஒரு முடிவுதானேது ( எனது )

தேவதாஸ் :
உள்ளதெல்லாம் நீயே அல்லால்
வேறே கதியில்லை
இனி யாரும் துணையில்லை ( உறவும் )


படம் : தேவதாஸ் ( 1953 )
பாடியவர்கள் : கண்டசாலா , K .ராணி
ஆக்கியோர் : உடுமலை நாராயணகவி , கே .டி . சந்தானம்
இசை : C R சுப்பராமன் / M S விசுவநாதன்



தொடர்ச்சி...



இங்கு இட்டுள்ளப் பாடலை ராணியுடன் இணந்து பாடியவர் இசைக்கே தன்னை அர்ப்பணித்த
- இன்றளவும் ஒரு தேவ புருஷனாக தெலுங்கர்களால் கொண்டாடப்படுகிற
( இவருக்கு S . P. பாலசுப்ரமணியம் ஹைதராபாத்தில் வெண்கலச்சிலையை நிறுவியுள்ளார் ) - கண்டசாலா !
அவரது கனமான குரல் , இப்பாடலின் அத்தனை சோகத்தையும் பிழிந்தெடுக்கும் .

இந்தக் குரல் பற்றி :

தமிழின் உன்னத சிருஷ்டிகளில் ஒன்றான ஜானகிராமனின் ' மோகமுள் ' ளில்

கதாநாயகன் சிந்திப்பது போல் ஜானகிராமன் பேசுவது இது :

" ...கச்சேரி பண்ணினாலும் , பண்ணாவிட்டாலும் இந்தக் குரலில் மாயங்கள் செய்து காட்ட வேண்டும் . மழையும்
புயலும் , அமைதியும் காதலும் , அருவருப்பும் வெறுப்பும் , பிரிவும் வாஞ்சையும் நான் நினைத்தபடியெல்லாம் ஒலிக்க
வேண்டும் . அப்படி இந்தக் குரலை வசப்படுத்த வேண்டும் . இந்த உடம்பே பாட்டாக நாதமாக மாறிவிட வேண்டும் "


இப்படித்தான் ஆசைப்படுகிறான் அவன் ; இதனை செயலாக்கவும் அவன் முற்படுகிறான் !

ஆக , நவரச உணர்ச்சிகள் , பாடப்படும் பாடலில் கேட்போரும் உணரும்படி வாரி இறைக்கமுடியும் என்பது தெரிகிறது ;
இது எல்லாப் பாடகருக்கும் சாத்தியமாக முடியாது . இதற்கு கடும் உழைப்பும் , ஒருமுகப்படுத்திய இடையறா உழைப்பும் ,
இத்தனைக்கும் மேலே இயற்கையிலேயே திருவான ஞானமும் - இசை ஞானமாவது - வாய்க்கப்பெற்றிருக்க வேண்டும்.

கண்டசாலாவிற்கு குறைவின்றி ஈதெல்லாம் இருந்தன ; அதானாலேயே அவர் பாடல்கள் எல்லாம் ஜொலித்தன.

இந்தப்பாடல் கண்டசாலாவுடன் , K .ராணி இணைந்து பாடுவது . குரலில் அசாத்திய தெளிவும் அசைவும் குழைவும்
இனிமையும் உணர்ச்சியும் நிரம்பி வழியும் . இதில் , ஏங்கிய மனதின் கைகூட முடியாத ஒரு உறவினை எண்ணி
புலம்பும் விகசிப்பாய் விரியும் இவரது குரல் ! பின்னனிப் பாடகராக முன்னிலை வகிக்கக் கூடிய நேரத்தில் , திடீரென மணம்
முடித்து , பின்னனிப் பாடுதலுக்கு முழுக்குப் போட்டவர் .
இன்று , பெயரன் , பெயர்த்தி எல்லாம் பெற்று ஹைதராபாத்திற்கும் பெங்களூருக்கும் ஊடாடுபவர் .

இவர் தொடர்ந்து திரைத் துறையில் இருந்திருப்பின் , கானக்குயில் P.சுசீலா கூட முதலிடம் பெற சிரமபட்டிருப்பார் என்பதே
ஒரு இசை அறிஞரின் கணிப்பு ஆகும் .

போன இடுகை பற்றி இன்னும் கொஞ்சம் ...


சென்ற இடுகையில் உள்ள பாடல் R.பாலசரஸ்வதி பாடியது...இவரைப் பற்றியும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் ...
she was a phenomenon . She would refuse to sing songs containing obscene or vulgar phrases .
நிரம்ப மனத்திண்மை உள்ளவர் . எல்லாவற்றிற்கும் மேலாக இனிய குரல் உள்ளவர் . இந்நாட்டின் திரைப்படப் பாடலின்
அரசியை அந்நாட்களில் மிரள வைத்தவர் ! அவர் ஒரு பேட்டியில் கூறுகிறார் :


"....I went there and sang two songs for the Tamil version. And Lata
sang for Hindi. First day Lata sang for the Hindi version and the second day, I sang the Tamil
version. When she did her recording I listened and sang differently on the second day. That time
Ghulam Mohd, Kalyanji - Anandji were assisting Naushad. Then Ghulam came to me after recording and
praised my voice a lot, and requested me to stay in Bombay. Lata saw this. And next day the
remaining songs that I was to sing were cancelled because Lata refused to sing unless I was sent
back to Madras. At that time no one was there for them to sing in Hindi except Lata.
So they were forced to oblige her . "

- Ravu Balasarswathi, in coversation with Sri, in Telugucinema.com


' முதலாளி ' திரைப்படத்தில் அவர் T M S உடன் இணந்து பாடும் ' எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் '
பாடல் மறக்கக்கூடியதா !?
உண்மையிலேயே, கொள்கைப்பிடிப்பும் தன்மானமும் கொண்டவரதாலால் கடைசி காலத்தில் வறுமையின் நிழலில் வசிக்க
நேரிட்டது ; அப்போதைய தமிழக அரசு அவருக்கு ஒரு வீட்டினை வழங்கிற்று ...ம்ம்...ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் இருந்தவர்...

இந்தப்பாடல் , படத்தில் ஒரு தாசி பாடுவதாக அமைவது ; இருப்பினும் அந்த வரிகள் சிற்றின்பத்தை சுட்டினாலும் அதில்
ஆபாசம் ஏதுமில்லையே ...!



அன்புடன்,
சுந்தரம்
 
Last edited:
பதிவரின் வேகத்துக்கும் தரத்திற்கும் ஏற்ப வேகமாக வாசிக்க இயலவில்லை என்பது உண்மை!
 
பல அலுவல்களுக்கிடையே நீங்கள் திரட்டி பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எல்லாமே மிகவும் அற்புதம். உண்மையில் ரசிக்கும் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதில்லை. பின்னூட்டங்கள் குறித்து கீதம் அவர்களின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. பல நல்ல நெகிழ்வு தரும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் உங்கள் பணி தொடரட்டும்.

நன்றிகள் பல , திரு.மும்பைநாதன் !
 
பதிவரின் வேகத்துக்கும் தரத்திற்கும் ஏற்ப வேகமாக வாசிக்க இயலவில்லை என்பது உண்மை!

நன்றி , கீதம் !
இன்னொரு நன்றி , தரம் எனச் சொன்னதற்கு !
நான் வேறு என்ன சொல்லிட முடியும்...
 
துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே........

துணிந்தபின் மனமே
துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே

அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி
மறைப்பதில் பயனுண்டோ - கையால்
மறைப்பதில் பயனுண்டோ - அதனால்
துணிந்தபின் மனமே
துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே

பாழும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால்
நீந்துவதால் பயனேது
சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்
சின்னக்குடை தாங்காதே ( துணிந்த )

காதல் தந்த துயர்தீர போதைக்
கடலில் மூழ்கிடலானாய்
சாவது நிஜமே நீ ஏன் வீணாய்
சஞ்சலப்பேய் வசம் ஆனாய் ( துணிந்த )


படம் : தேவதாஸ் ( 1953 )
பாடியவர்கள் : கண்டசாலா
ஆக்கியோர் : உடுமலை நாராயணகவி , கே .டி . சந்தானம்
இசை : C R சுப்பராமன் / M S விசுவநாதன்


நண்பர்களே,

இப்படத்தின் பாடல்கள் :

1. ஓ..ஓ..தேவதாஸ்
2. சந்தோஷம் தரும் சவாரி போவோம்
3. எல்லாம் மாயைதானா
4. சந்தோஷம் வேண்டுமென்றால்
5. கனவிதுதான் நிஜமிதுதான்
6. பாராமுகம் ஏனய்யா
7. துணிந்தபின் மனமே
8. உறவுமில்லை பகையுமில்லை
9. அன்பே பாவமா
10.உலகே மாயம்

பாடலை எழுதியவர்களும் சாதாரண ஆட்களில்லை ; உடுமலை நாராயணகவி , கே. டி .சந்தானம் ; பெரும் ஆசான்கள்
அக்காலத்தில் ! உடுமலை ஸ்டூடியோ வந்தால் படமுதலாளிகளும் எழுந்து நின்று கைகட்டி பணிவாக நிற்பார்களாம் !
' வாத்தியார் ' களுக்கு அக்காலத்தில் இருந்த மதிப்பது !!

பாடல்களின் இசை அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ற அமைப்பு கொண்டவை . C R சுப்பராமன் கர்நாடக இசையில் பூரண
ஞானம் கொண்டவர் ; 14 வயதிலேயே ஆர்மோனியத்தின் ஸ்வரக் கட்டைகள் அவருக்க்கு சேவுகம் புரிந்தன ; 19 வயதில்
அன்றைய H M V -க்கு இசை இயக்குனராவர் . கர்நாடக இசையின் நுணுக்க்ங்களையும் வீச்சையும் அறிந்தவரெனினும்
இந்துஸ்தானி இசையையும் மற்றைய இசை வடிவங்களையும் தன் இசை வார்ப்பில் சேர்த்து அழகு கூட்டியவர்.


அன்புடன்.
சுந்தரம்
 
சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்....



சரச மோகன சங்கீதாம்ருத சாரலில்
மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரம் ஆகும் விசித்திரம் பார்

சரச மோகன......

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான்கவி சுகக்குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீதம்

சரச மோகன...

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீதம்

சரச மோகன.....




படம் : கோகிலவாணி 1956
இசையாப்பு : ஜி .ராமநாதன்
வரிகள் :S D சுந்தரம்
பாடியவர் : சீர்காழி


நண்பர்களே,


சீர்காழியின் மிக அற்புதமான பாடல்களில் இது முதலிடத்திற்கு போட்டி போடக்கூடியது ...
பாடல் முழுவதுமே கேட்க இன்பமாய் இருக்கும் !
அதிலும் இரண்டாவது சரணமும் ( இந்த வார்த்தை சரியானு தெரியல ..)
மூன்றாவது சரணமும் தங்கள் கதியில் வேறு பட்டிருக்கும் !
இரண்டாவது துரித கதியிலும் மூனாமது இயல்பான வேகத்திலும் இருக்கும் ...

சரி , நான் விரும்பும் வேறொரு விரிவான விமரிசனம் கீழே ...


If anybody had asked me to cite an example in the raga Sudha dhanyasi
some 25 years before, probably I would have said GNB's Himagirithanaye
Hemalathe, or for a film song, a KVM's Kalaimagal enakkoru or a
MSV-TKR's Neeye unakku endrum or at best IR's Maancholai kilidhaano. But
certainly not had I listened to this SOTD before. Such was the
fascination I had for this song from the moment I heard it in Radio
Ceylon way back in early 80s. What a beautiful melody! How simple the
tune is! Yet the majesty!

As has been his wont, GR has churned out a classical number and serves a
feast for eternal joy to his listeners. A very neat work by GR. Just a
harmonium, clarionet, flute and tabla. That GR brings the sa ga ma pa ni
sa arohanam of the raga to begin the interludes is noteworthy though on
the predictable lines but always remember a tabla in a GR song is a
co-singer more than an accompaniment (thanks Bhairavan). Follow the
tabla carefully in every GR song.

Another high point of the song is the class rendition of the song by
Seergazhi Govindarajan. SG was a much sought after singer in the mid
fifties after Thuraiyur Rajagopala Sarma gave him a launchpad in
Ponvayal (1954) with an exquisite number Siripputhan varugudhaiyya
ulagai kaNdAl. GR made it a point to bestow SG with atleast one good
song in most of the films he did. The same voice which he used for comic
songs in a previous film will be the hero's voice in the next film
sometimes even for Sivaji or MGR. SG's ringing voice suits the SOTD to a
T and particularly the ease with which he touches the higher octaves in
the lines .sundara vaankavi sugakkuralil ezhum.. sudhandhira naadhamey
sangeetham is really marvellous.

The lyricist of this song Kavignar S .D. Sundaram was a noted playwright
during 40s and 50s best known for his play Kaviyin kanavu which had been
shown umpteen number of times during the freedom struggle. In this song,
he depicts how sublime good music to be, the sheer joy it gives, the
power of music and how it influences the nature in simple but sweet
words. I was touched by the lines .sandhaiyiley virkkum porulalla
geetham, sindhaiyiley ezhum jeeva layam. I can see Papanasam Sivan
influence in SDS lines. SDS is well-known for such songs as his another
song in Manidhanum Mirugamum (1953) sung by CSJ is a classic.Kaalamenum
chirpi seidha kavidhai thaai kovilada. SDS is not to be confused with
one another lyricist of his times, a contemporary, 'Clown' Sundaram who
had penned many comic songs for NSK in many of his films.


அன்பன்,
சுந்தரம்
 
இனிமையும் குதூகலமும் பிணைந்த.......

அவன்
கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி

அவள்
கனவோ நனவோ இதுவெல்லாம்
கதையில் காணும் கற்பனையோ

அவன்
கனவிலே நான் கண்ட கலைமணியே
கருத்தினிலே கலந்த கண்மணியே

கற்புக்கரசியே கண்ணகியே
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
கற்புக்கரசியே கண்ணகியே என்
கரங்களைப் பற்றிய காரிகையே

கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி

அவள்
அணையில்லா வெள்ளமா உமது அன்பே
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
அடைந்ததும் என் தவப் பயனன்றோ

இணையில்லா பாக்கியம் பெற்றவர்கள்
எனைப் போல் உலகில் எவரும் உண்டோ

கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி

அவன்
உண்மை அன்பின் இருப்பிடமே
உனைப்போல் காணவும் கிடைத்திடுமோ
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
உண்மை அன்பின் இருப்பிடமே
உனைப்போல் காணவும் கிடத்திடுமோ

அவள்
அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையாச் சுடராய் விளங்கிடுமோ
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையாச் சுடராய் விளங்கிடுமோ

அவன்
இன்பம் எல்லாம் நம் சொந்தமே
அவள்
என்றும் பிரியா ஆனந்தமே

இருவரும்

கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி


படம் : கற்புக்கரசி 1957
பாடியோர் : P B ஸ்ரீநிவாஸ் M L வசந்தகுமாரி
வரிகள் : உடுமலை நாராயண கவி
இசை : ஜி . ராமனாதன்



அன்பு நண்பர்களே ,
மெல்லிசையின் உதாரணமாகவே விளங்கும் பன்மொழி வித்தகர் ஸ்ரீநிவாஸ் , M L V உடன் இணைந்து பாடிய இப்பாடல்
மெல்லிசையின் உச்சம் எனவும் சாஸ்திரிய இசையின் ஜனரஞ்சகப் பதிப்பெனவும் சொல்லலாம் ...
இனிமை சொட்டும் பாடல் இது ! உடுமலையின் வரிகள் எவ்வளவு பாங்காய் அமைந்திருக்கின்றன !!

ஜி. ராமனாதனின் இசை அமைப்பில் P B S முதன் முதலாகப் பாடியப் பாடல் ! அவரின் உச்சரிப்பும் , M L V யின்
உச்சரிப்பு தெளிவுக்குச் சிறிதும் குறைவில்லாது நிறைவாயிருக்கும் ! கேட்க கேட்கத் தெவிட்டாதப் பாடல் இது !

ஆனாலும் , ' கற்புக்கரசி ' படத்தில் ஏனோ இப்பாடல் இடம் பெறவில்லை ;
படமும் சரியாக வரவேற்கப்படாமல் போயிற்று !

P B S பிற்காலத்தில் பிரபலமான நேரத்தில் அய்யருக்குப் படங்கள் அவ்வளவாக இல்லை ...

ஜெமினி கணேசனுக்கு P B S தான் என்றாகி விட்ட நிலையிலும் உண்மையிலேயே சிறந்தப் பாடகரானதாலும்
' இன்பம் பொங்கும் வெண்ணிலா ' வும் , ' காற்று வெளியிடைக் கண்ணம்மா ' வும் ஜிஆரால் இசையமைக்கப்பட்டு
நாமும் செவி நிறையக் கேட்கும் பேறு பெற்றோம் !


அன்புடன்,
சுந்தரம்
 
Back
Top