அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம்

ravikrishnan

New member

அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் பற்றிய எனது குறிப்பு
இந்தியா தனது இரண்டாவது அறிவியல் மற்றும் கடல் ஆராச்சிக்காக அன்டார்டிகாவில் பாரதி டேசனை உருவாக்கி உள்ளது முதல் டேசன் மைதிரி இதற்கு முன்னர் தட்சின் கங்கொதிரி இது அதிக பனிபொழிவினால் கீழ் சென்றுவிட்ட்து யாருக்கும் எவ்விதமான இழப்பு இல்லை. ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பல கோடிச்செல்வில் பாரதி டேசன் உருவாக்கப்ட்டுள்ளது.பல நாடுகளும் பல ஸ்டேசன்களை உருவாக்கி உள்ளது. மொத்தம் என்பதுக்கு மேல் ஸ்டேசன்கள் உள்ளது,நமக்கு உருதுணையாக இருப்பது ரஷியன்டேசன் அவற்களின் துணையால் அவசரசிகிச்சை மற்றும் ஆபத்துகாலங்களில் உதவி கிடைக்கிறது. இங்கு ஆறுமாதம் இரவு ஆறு மாதம் பகல் 24 மணி நேரமும்.
இங்கு காந்த அலைவரிசை காற்று வேகம்,மற்றும் கடல் அடியிலும், நிலத்தின் அடியின் ஆராச்சி செய்ப்பட்டு இஸ்ரோ நிறுவத்தின் மூலம் செயற்கைகோல் மூலம் இந்தியா அனுப்ப்படுகிறது ,இங்கு அதிகமாக கனிமங்கள் உள்ளது அதனால்தான் இங்கு போட்டி இங்கு எதையும் எடுக்கும் உரிமை தற்போது கிடைக்காவிட்டாலும் அனுமதி கிடைக்கும் என பல நாடுகள் போட்டியில் இருக்கின்றன் அதிலும் சீனா முதல்மை,
இங்கு மனிதன் இயற்கையை .எதிர்த்து போர வேண்டியுள்ளது.மனித உடலில் விட்டமின் டி மற்றும் சி குறைவு காணப்படுகிறது,மழைகால விளைவால் ஞாபகமறதி கோபதன்மைஅதிகமாகஎற்படுகிறது.உணவு பற்றிச்சொல்லுவது என்றால் பாதி உணவு இண்டியாவில் இருந்து பேங்கிக் செய்யப்பட்டு அனைத்து சாமான் உடன் கண்டேனர் மூலம் கப்பலில் அனுப்படுகிறது,பாதி தென்ஆப்பிரிக்காவிலிருந்து காய்கறிகள் கண்டேனர் மூலம் அனுப்ப்படுகிறது இங்கு டெபிள் டேன்னிஸ், சேஸ் மற்றும் சிடி,டிவிடியினால் பொழுது போகிறது,இணையதொடர்பு அடிகடி நின்று விடுகிறது இதனால் பல பிரச்சனைகள் .
இங்கு போக்குவரத்து நாங்கு மாதம் தவிர மற்ற மாதங்கள் கப்பல்,மற்றும் விமானசேவைநிறுத்தபடுகிறது.வெளிஉலகத்திலிருந்து அண்டர்டிகா துண்டிக்கப்படுகிறது.இணையதொடர்பு இங்கு மிகமிக முக்கியம். இங்கு வர இதன் தலமை இடம் கோவாவில் உள்ள NCAOR யிருந்து விமானமூலம் மும்பை மும்பையிருந்து தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன்னில் வந்து இறங்கி சாமன்களுடன் கோவாவிலிருந்து வரும் கப்பல் மூலம் ஒன்பது நாட்கள் கடந்து அண்டார்டிகா சென்று அடைய வேண்டியுள்ளது.
IMG_5326-Copy.jpg
[/URL][/IMG]
IMG_0828.jpg
[/URL][/IMG]
IMG_0817.jpg
[/URL][/IMG]
IMG_5043.jpg
[/URL][/IMG]
DSC011022.jpg
[/URL][/IMG]
IMG_0210.jpg
[/URL][/IMG]
DSC01782.jpg
[/URL][/IMG]
DSCN16643.jpg
[/URL][/IMG]
IMG_1201.jpg
[/URL][/IMG]
 
Last edited:
வாவ் என்று சொல்ல வைக்கும் படங்கள். பல விஷயங்கள் உங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். இன்னும் நிறைய எழுதுங்கள். நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.
 
நன்றி ரவி கிருஷ்ணன். அருமையான பதிவுகள். சுவையான சம்பவங்களையும் சொல்லுங்கள்.
 
புகைப்படங்கள் மற்றும் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே. இன்னும் பகிருங்கள்.
 
கடுமையான பனியில் கடுமையான பணியில் ஆழ்ந்திருக்கும் வேளையிலும் எங்கள் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் அனுபவத்தைத் தெளிவாகவும் அற்புதமான படங்களுடனும் மன்ற உறவுகளுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி ரவிகிருஷ்ணன். இத்தகைய ஒரு சூழலில் மன அழுத்தம், கோபம் போன்றவை ஏற்படுவது இயல்பே. சரியான முறையில் மன மற்றும் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். நல்லபடியாக பணி முடித்து ஊருடனும் உறவுகளுடனும் விரைவில் இணைந்திருக்க வாழ்த்துக்கள்.
 
மிக்க நன்றி நண்பரே. மிக அழகான புகைப்படங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இன்னும் எழுதுங்கள். நன்றி.
 
படங்கள் மிகவும் அழகாக உள்ளன.
நல்ல பயனுள்ள தகவல் மேலும் எழுதுங்கள்.
 
Back
Top