பய(ர)ணம்...

பய(ர)ணம்...

பேருந்து நிலையத்தின் பெஞ்சுகளிலும், ரயில் நிலையத்தின் தூன்களின் சாய்வுகளிலும், விமான நிலையத்தின் ஓய்வறைகளின் காத்திருப்பின் நிமிட நேரங்களில் எங்கோ மனதின் ஓரத்தில் கீறி செல்லும் இந்த பய ரணங்களை உணர்ந்திருந்தாலும் அதை பின்னோக்கி பார்க்க மனம் ஒரு போதும் அனுமதித்ததில்லை...

நேற்றைய பேருந்து பயணத்தில், ஸ்லீப்பர் கோச்சின் கடைசி வரிசையில், உறங்கியும் உறங்கமலும் வரும் கனவு என் ஆழ்மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாய்…
********மாநில பேருந்தின் கடைசி இருக்கையில் காதலர்க்குள்ளான சில்மிசங்களோடு நானும் அவளும்... பயணத்தில் பாதியிலே அவளோ தன் இறக்கத்தின் முன்னவே இறங்கி கொண்டு சாலை கடப்பதில் மும்மூரமாக..., என் பேருந்து இரைந்துகொண்டே நகர.. என் மனதில் இறுக்கத்துடன் என் பயத்தை தொடரலானேன்...*********
எப்படிதான் ஓவொரு முறை நீண்ட பயணங்கள் வரும் போதும் நமது மனதின் நெறுக்கமான , சென்டிமென்டலான பல விடயங்களை விட்டு விட்டு நம் பயணத்தை தொடர வேண்டியுள்ளது...

ஊலகில் நன் செய்த பயணங்களில் எல்லா தேசங்களிலும் எனக்கு என் ஊர் தான் பிடித்திருந்தது... இருப்பக்களிலும் வயலும், தோப்பும், வாழை தோட்டங்களும்... ஒரு புறம் மலையின் மதிலும், மறுபுறம் கடலின் எல்லையும் என் காலை பயணக்களில் என் மனதில் எப்போதும் அழியாத ஓவியம் தான்... இன்று பல காங்கிறீட் குத்தீட்டிகள் வந்து இந்த ஓவியத்தை சீரளித்து கொண்டுதான் இருந்தன.. இருந்தாலும்... அழகு அழகுதான்... மழை காலங்களில் முதல் மழையில் வரும் இந்த வாசனையும், இலைகளில் விழும் துளிகளின் நாட்டியமும், தென்னை கீற்றில் உரசி செல்லும் காற்றின் இசையும்... என் அடுத்த வருகைக்காக காத்திருக்குமா என்று தெரியாவிட்டாலும், என் அருகில் இருக்க போவதில்லை என்று நிச்சயமாக தெரியும்...
ஊருக்கு வரும் ஒவ்வொருபோழுதும் என் 96 வயதான பாட்டியை பார்த்து செல்வேன்... எனக்கு என் பாட்டியோடு அதிகமான நெருக்கமோ இல்லை நினைவுகளோ இல்லாவிட்டாலும் மரியாதை நிமித்தமாக அவரை நான் பார்க்க தவறியதில்லை... நான் பார்க்க செல்லும் பொழுது கொடுக்கும் சிறு காசுக்காகவோ இல்லை தன்னை பார்க்க வருகிறார்களே என்றா சந்தோசத்தாலோ ..” எனிம எப்ப மோனே வருவே..?” என்று கேட்டுகொள்வார்... நீண்ட பயணக்களில் இந்த கேள்விக்கு என்ன பதில் என்று , அமைதியாக இருந்தாலும்.. எனக்காக அவர்கள் காத்திருக்க மாட்டார்கள் என்ற ரணம் கண்டிப்பாக உண்டு....
ஒவ்வொரு பயணத்தின் போது நான் இரண்டு பெட்டிகள் மட்டும் எடுத்து சென்றலும், மனம் நிறைய எடுத்து சென்றாலும்... பலரையும் பலதையும் விட்டுதான் செல்கிறேன்... என் வருகைக்காக எதுவும் எவரும் காத்திருக்க போவதில்லை...என் பயண, பய ரணங்களை தவிர...
 
அயலூர்களிலும் அயல் தேசங்களிலும்தான் வாழ்க்கையின் மீதம் என்று முடிவாகிவிட்டவர்களின் ஏக்கப்பிரதிபலிப்பு. வாழ்க்கைப் பயணத்தில் பயமும் ரணமும் மனம் கவ்வ, வாழ்க்கையையே பணயம் வைத்துப் புறப்பட்டுவிட்ட வெற்றுமனத்தின் வெளிப்பாடு. என்னுள்ளும் கவிகிறது இழப்பின் தவிப்பு.

இனி எப்போது மறுபடி வருவோம் என்று உறுதியளிக்கவியலாத தருணங்களில் மூதாட்டியின் எதிர்பார்ப்பைப் போலவே ஒவ்வொரு உறவின் எதிர்பார்ப்புக்கும் ஊரின் எதிர்பார்ப்புக்கும் அர்த்தமற்ற ஒரு அசட்டுச்சிரிப்பை உதிர்த்தபடியோ, ஆழமான நம்பிக்கையொன்றைப் போலியாய்க் கையடித்து சத்தியம் செய்தபடியோ விலகும் மனங்களின் வேதனையை யார்தான் அறியக்கூடும்?

வெகுநாட்களுக்குப் பின்னரான வருகைக்கும் நெகிழவைத்ததோர் நினைவுப்பகிர்வுக்கும் நன்றி பென்ஸ் அவர்களே.
 
ப்யணம் நம் வாழ்வின் ஒத்திகை. தூக்கம் மரணத்தின் ஒத்திகை போல. காதலி, இயற்கை, பாட்டி, சுயம் என வாழ்க்கைப் பக்கங்களை ரிவீயூ செய்ய பயணம் நல்ல களம்.

பென்ஸூக்கு பாராட்டுக்கள்
 
Back
Top