தேவையான பொருட்கள்
1.நண்டு 500g
2.தேங்காய் பால்: 4 கப் (1 துருவியது)
3.பூண்டு: 7 (பல்)
4.இஞ்சி: 1 துண்டு (பூண்டு + இஞ்சி விழுதாக அரைத்தது)
5.வெந்தயம்: அரைத் தேக்கரண்டி
6.பெரும்சீரகம்: அரைத் தேக்கரண்டி
7.வெங்காயம் பெரியது: 1
8.பச்சை மிளகாய்: 3 (நிளவாக்கில் வெட்டியது)
9.மிளகாய்த்தூள்: 8-9 தேக்கரண்டி
10.மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
11.நற்சீரகத் தூள் 2 தேக்கரண்டி
12.புளி கரைசல் தேவையானஅளவு
13.உப்பு சுவைக்கேற்றபடி
14.நல்லெண்னெய் 4 மேசைக்கரண்டி
நற்சீரகத் தூள் தயாரிக்கும் முறை
சின்னசீரகம் 3 மேசைக்கரண்டி,முழு மிளகு 1 மேசைக்கரண்டி இரண்டையும் பொன்னிறமாக வறுத்து ஆறியபிறகு கிரைண்டரில் போட்டு பொடியாக்கவும்
நண்டை சுத்தம் செய்து மஞ்சள்தூள்,உப்பு தடவி வைக்கவும்
பின்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்,பெரும்சீரகம்,வெங்காயம்,மிளகாய் அனைத்தையும் வதக்கி சிறுநேரத்தில் இஞ்சிபூண்டு விழுதுசேர்த்து லேசாக வதக்கி அதில் நண்டை பேட்டு வதக்கி அடுப்பைக் குறைத்து மூடி 7 நிமிடங்களுக்கு விடவும்
பின் இரண்டாம் தேங்காய்ப் பால், கரைத்த புளியையும் சேர்த்து அடுப்பை கூட்டி விடவும்
கறி கொதிக்கும் போது மிளகாய்தூளைப் போட்டு வானலையை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்
பின்பு நற்சீரகத்தூளை சேர்த்து அடுப்பில் சிறுநேரம் விட்டு சுவைக்கேற்ற படி உப்பு சேர்த்து முதலாம் தேங்காய்ப்பாலை சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் விடவும்
கடைசியில் முருங்கை இலைகலை போடவும்.இந்த நண்டு கறியை கோதுமை மா புட்டுடன் சாப்பிட்டால் நல்லாயிருக்கும்.
http://www.ampalam.com/2013/06/யாழ்ப்பாணத்து-முறையில்-ந/