யாழ்ப்பாணத்து கூழ்: செய்முறை

ampalam

New member
யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். எங்களின் கலாசார விழுமியங்களோடு கைகோர்க்கும் யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பாரம்பரிய யாழ் சமையல் முறைகள் கைப்பக்குவம் பகுதியில் இடம்பெறும்.

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்

ஒடியல் மா – 100 கிராம்

கழுவின இறால் – 100 கிராம்

கழுவின பாதி நண்டு – 8

மீன்தலை – 1

புழுங்கல் அரிசி – ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் – 10

புளி – ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை – 100 கிராம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு – 250 கிராம்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் – சிறிதளவு

மிளகு – சிறிதளவு

நற்சீரகம் – சிறிதளவு

செத்தல் மிளகாய் – சிறிதளவு

செய்முறை

1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

அம்பலம்: www.ampalam.com
 
Back
Top