அண்ணல் அப்பா....!

govindh

New member
அனைத்தையும் அறிந்த ஆசான் - அப்பா...!
ஆற்றல் சக்திகளின் பெருங் களஞ்சியம் - அப்பா...!
இளைப்பாறுதலே இல்லாமல்…..
இயங்கிக் கொண்டே இயக்கும்...
இனிய மேலாளர் - அப்பா...!

ஈரேழு உலகும் வியந்து போற்றும்...
உன்னத உழைப்பாளர்....அப்பா...!

எதிர் நீச்சல் கற்பித்து ....வாழ்வில்
ஏற்றம் பெறச் செயல்படும்....
அறிவுத் திருவுருவம் - அப்பா...!

அண்ணல் அப்பா அவர்களுக்கு...
பணிவான வணக்கங்கள்...!
 
அப்பாவின் குணங்களை அழகு தமிழில் எடுத்துரைத்த கோவிந்துக்கு நன்றி.


ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம்அப்பா
எப்போதும் தன்னலம் எண்ணாது- இப்புவியில்
பெய்கின்ற நீர்போல நம்நலம் காப்பதினால்
தெய்வத்தின் நேரென்று கூறு.
 
தந்தையின் பண்புகளை நகல் எடுத்து எழதியது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்.
 
நன்றி தோழரே. என் தந்தையை சமீபத்தில்தான் இழந்தேன். இப்பொழுதுதான் அவரின் அருமைகள் புரிகின்றன.
 
Last edited by a moderator:
nantri tholare en thanthayyai samipathila than ilanthen ippoluthu than avaren arumaikal purikindrathu
தமிழில் எழுதுவோம் நண்பரே!..அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..
உங்களை தமிழ் மன்றம் வரவேற்க்கிறது...
 
* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். கோடை வெம்மையின் கடுமை வந்தால் பின்னாலேயே மழையின் குளுமையும் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* வாழ்க்கையில் வேதனைகளை தாங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உள்ளத்தில் வேதனைகளை சுமந்து கொண்டு திரிவது மிகவும் சிரமமானது. நம்முடைய உடல் உள்ளப்படைப்புக்கள் ஆண்டவனால் நிறைய தாங்கும் தி பெற்றவை என்பதை நாம் சிறிதும் உணர மறுக்கிறோம்.
* வாழ்க்கையை ரொம்பத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களை விட்டு விலகி நில்லுங்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.
* சோதனைகளை எல்லாம் ஆண்டவன் நம்முடன் விளையாடும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாடி வதங்கிய முகத்துடன் இருக்காதீர்கள். சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர்வதற்கு இதுதான் வழி.
-ஸ்ரீஅன்னை
 
Last edited by a moderator:
என்னால் இன்னும் தமிழில் பதிவு செய்ய முடியவில்லை. கூகுளே Translator கொண்டு தன் எழுதுகிறேன்
 
Back
Top