மதிப்பெண் என்பது மேற்படிப்பிற்கான தகுதியா ? வாழுவதற்கான தகுதியா ?

ஆதி

New member
காலம் தோறும் மூடப்பழக்கமென்பது உருமாற்றங் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் உலாவுகிறது, இக்காலத்தில் கல்வியின் பெயாராலும் அம்மூடப்பழக்கம் உலாவுவதை காண முடிகிறது.

மூடப்பழக்கங்கள் பிறரிலிருந்து நம்மை தனித்து காட்ட உதவின, கல்வியும் தற்போது அவ்வாறே இருக்கிறது

பள்ளிகள், பெற்றவர்கள், உறவுகள், சமூகமென்று அனைவரும் தம் லட்சியத்தை, நோக்கத்தை, ஆசையை, விருப்பத்தை, விழைவை, பலவந்தமாக/பலாத்காரமாக(வல்லுறவு என்று அழைப்பதிலும் தவறில்லை என்பதே என் கருத்து) திணிக்கிறார்கள்

என் பையன் எஞ்ஜினியர், என் பொண்ணு டாக்டர் என்று பெருமை அடித்து, அடுத்தவன் வயிற்றெரிச்சலை கிளரி, மறைமுகமாக அவனின் பிள்ளைகள் பலாத்காரத்துக்கு கையளிக்கப்படும் வேலையை இங்கு பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்

மனநோயாளி நிறைந்த, குற்றங்கள் பெருகிவிட்ட, மனித நேயமற்ற, தன்னலம் அதிகரித்துவிட்ட, பாதுகாப்பும் நம்பிக்கையின்மையும் ஆக்ரமித்துவிட்ட, அமைதியையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு டாஸ்மார்க்கிலும், சாமியார்களிடமும், சல்லாபத்திலும் தேடிகிற நிலைக்கு இந்த சமூகத்தை ஆளாக்கியிருக்கிறது கல்வி.

மருத்துவமோ, பொறியியலோ படித்தால்தான் கௌரவம் எனும் புது வர்ணாஸ்ரமத்தை உருவாக்கி, கலையிலக்கியம் படிப்பவனை எல்லாம் ஏளனம் செய்கிறது, மொழிப்பட்டமோ, வரலாற்றில் பட்டமோ பெற்றவனெல்லாம் பிழைப்பதற்கு தகுதியற்றவன், படிப்பதற்கு லாயக்கற்றவன் என்று அனைவரையும் நம்ப வைத்த்விட்டது.

"உன்னை நீ விற்பது எப்படி ?" என்று புத்தகம் போட்டு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது

இந்த சமூகத்தின் ஆதி தொழிலே தன்னை விற்பது என்பது, இவர்களுக்கு எப்போது புரியப்போகிறது ?

ஒரு தோல்வியை பக்குவத்தோடு ஏற்றுக் கொண்டு அதை வெற்றியாக மாற்றும் நம்பிக்கையை தராத கல்வி என்ன கல்வி ?

ஒரு தோல்வியை அவமானமாய், கௌரவக் குறைச்சலாய், எதற்கும் லாயக்கற்றவரென்று நம்பும் சிந்தனையை விதைப்பதாய் இருக்கும் கல்வியை கற்பித்துக் கொண்டுத்தான் இந்த சமூகம் தன் அடுத்த நகர்வை யோசித்துக் கொண்டிருக்கிறது

அத்தகைய சமூகத்தின் மக்கள் எப்படி தெளிவாக சிந்திக்க தெரிந்தவர்களாக, சீரான எண்ணவோட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள், இந்த சமூகத்திலிருந்து எப்படித்தான் ஒரு நல்லத்தலைவனை எதிர்ப்பார்ப்பது ?

மதிப்பெண் என்பது மேற்படிப்பிற்கான தகுதியா ? வாழுவதற்கான தகுதியா எனும் உரத்தொலிக்கும் வினாவிற்கு விடை தேட வேண்டிய தருணத்திலும், நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள இயலாத ஒரு மங்கிய அறிவையும், தற்கொலை செய்து கொள்கிறவனை எல்லாம் கோழையென்று ஒரு வார்த்தையில் விமர்சித்துவிட்டு தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தையுமே கற்றுத்தந்திருக்கிறது இந்த கல்வி முறை

தோல்வியின் காரணமாய் நிகழும் தற்கொலைகள் இந்த சமூகத்திற்கு எதிராகவும், வாழ்க்கைக்கு எதிராகவும் வைக்கப்படுகிற கடுமையான விமர்சனங்கள் என்பதை புரிந்து கொள்ளாதவரை, இந்த சுயகொலைகளை நிகழ்ந்து கொண்டே இருக்கும், அயோக்கியத்தனமான இந்த சமூகம் அதனை கோழைத்தனம் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்
 
Last edited:
//இக்காலத்தில் கல்வியின் பெயாராலும் அம்மூடப்பழக்கம் உலாவுவதை காண முடிகிறது.//

நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் உண்மை..ஆதி..
 
கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர் தெளிவுப்படித்துள்ளார். கல்வி மட்டுமே ஒரு சமூகத்தை அகன்ற உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆகவேதான் குறிப்பிட்ட சமூகம் சொந்தமாக்கி கொண்ட கல்வியை கிறித்தவ மிஷனரிகள்(மறைப் பணியாளர்கள்) காடு மேடு பள்ளம் சேரி என்று எல்லா பக்கத்திருக்கும் எடுத்துச் சென்று விழிபுணர்வுக்கு அடித்தளம் அமைத்தனர், ஆனால் அது இன்று வியாபாரமாக்கப் பட்டு மாணவர்களின் உணர்வுகள் மதிக்கப் படமால் மிதிக்கப் படுகிறது, அறிவுக்கு அழைத்து செல்லாமல், பணம், பட்டம், பதவி என்ற அழிவிக்கு அழைத்து செல்வதுதான் வேதனை, இலக்கியம், வரலாறு, மெய்யியல் படிக்க ஆள் இல்லை என்பது இன்றைய கல்வி அறிவை முன்னிரத்தவில்லை என்பது கொடுமை. கல்வி என்றால் என்ன என்பதை வள்ளுவன் குறள் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும் இந்த தரம் கெட்ட கல்வி முறையை ஓழிக்க வேண்டும்.
 
Back
Top