எரிகிறது வயிறு

Mano.G.

Facebook User
எரிகிறது வயிறு

கடந்த 24ம் நாள் மார்ச் மாதம் திருச்சியிலிருந்து கோயம்பத்தூர் செல்லும் வழியில் கண்ட காட்சியின் பிரதிபலிப்பு

அழகான காவேரி,
முன்னால் புகழப்பட்டவள்,
இயற்கையின் வனப்பும்,
பச்சை பசேலென்ற கரைகளும்,
இருமருங்கில் விவசாயத்தின் செழிப்பும்,
கேட்கும் போதே உடம்பு சில்லென சிலிர்க்கிறது,

ஆனால் தற்பொழுது,

காவேரி என்ற பெயர் உண்டு,
காவேரியின் மேல் பாலங்களும் உண்டு,
காவேரி கரையில் ,
பயிர்கள் காய்ந்து,
நிலங்கள் வரண்டு,
மீன் களுக்கு பதிலாக மணல் லாரிகள்,
தண்ணிருக்கு பதிலாக கானல் நீர்,

எரிகிறது வயிறு எரிகிறது.
 
Last edited by a moderator:
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

என்றாள் ஒளவைப்பாட்டி. இப்போது நல்லவர்கள் எண்ணிக்கை அருகிவிட்டது. அதனால் மழையும் பொய்த்துவிட்டது. இப்படியே போனால் காவிரி மட்டுமல்ல; நாட்டிலுள்ள எல்லா ஆறுகளுமே வறண்டுவிடும்.
 
வாரிக்கொடுத்தவளே மாரியாத்தா!
மாரிப்பொய்த்ததேனா மாரியாத்தா!
தேடித்தினமும் பொங்கவைத்தேனே மாரியாத்தா!
வாடிப்போச்சே என் பயிரெல்லாம் மாரியாத்தா!
கோடித்துணியெடுத்து வாரானே எம் உடம்பொறந்தா மாரியாத்தா!
வரப்பேறி வாளிச்சோற்றோடு சேத்தனைச்ச மச்சான இப்போ மாரியாத்தா
வாரிக்கொடுத்தேனடி மாரியாத்தா நீ என்
பூவும் பொட்டும் ஏனெடுத்த மாரியாத்தா!
காஞ்க காவிரியில் மனலெடுத்தே மாரியாத்தா
கொண்டவங் கர்மந்தொலைக்கிறேன மாரியாத்தா
நல்லவங்க சேதியெல்லாம் நாசமத்துப்போச்சே மாரியாத்தா
நீ யிருக்கிறாயோ இல்லையோ! அதையுஞ் சொல்லிப்புட்டு போடியாத்தா!
 
பொன்மாலை பொழுது பூஞ்சோலை ஒன்று
பூங்கா என பொய்யான போர்டு போட்டு
போய்த் தான் பார்க்கவே ஆசைப் பட்டு
போனேன் உள்ளே ! பாய்ந்தேன் வெளியே!

பொத்திக்கொண்டேன் கண் மூக்கு காது !
போதாது போதாது மரஞ்செடி கொடி ஆயின்
புதர்கள் மண்டியாய் அப்புதரிடை மனிதர் பதராய்
போகிற போக்கில் கொட்டி! இருந்தது பூப்பாய்!

கழிப்பிடம் வழிந்து காணுமிடமெல்லாம் கழிவு :mad:
குடிமன்னர் தம் குப்பியும் சப்பியும் கொண்டாட்டம்
கண்டதே காட்சியாய் கொண்டதே கோலமாய்
குறைவேயில்லை நமக்கு இத்திருநாட்டில் !

images
 
Back
Top