சொ.ஞானசம்பந்தன்
New member
பாரதியார் நூறு ஆண்டுக்குமுன்பெ பாடினார் :
" மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமையில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கம் செய்தல்வேண்டும் "
என்று ; ஆனால் நாம் இன்னமும் மறைவாக நமக்குள் பழங்கதை பேசித்தான் வருகிறோம் .
மூன்று சங்கங்கள் தொல்பழங் காலத்தில் இருந்தன . கடைச் சங்க காலம், பொ.யு.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் , பொ.பி. 2ஆம் நூற்றாண்டுவரை . அப்போது இயற்றப்பட்டவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் என்பது நம் முடிவு . இதை அயல் நாட்டார் ஒப்புகிறார்களா ? இல்லையே . அவர்கள் பாட்டும் தொகையும் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுக்கு உரியவை என்கிறார்கள் .
யார் அவர்கள் ?
1 - ஹாலந்து நாட்டு இந்தியவியல் பேராசிரியர் ஹெர்மன் டீக்கன் ;
2 --சிக்காகோ பல்கலைக்கழகச் சமற்கிருதப் பேராசிரியர் ஷெல்டன் போலாக்
3 -- ஜப்பான் நாட்டு ஆய்வறிஞர் தக்கநோபு தக்கஹாசி ;
4 - பிரஞ்சு நாட்டறிஞர் பிரான்சுவா க்ரோ .
( ஆதாரம் : முனைவர் த . அன்புச்செல்வன் எழுதிய நூல் - பண்டைத் தமிழரின் அரசமைப்புச் சிந்தனைகள் - முதல் பதிப்பு 2010 . பக் .12 )
அவர்கள் தனித் தனியாய் ஆய்ந்து கண்ட முடிவைத் தம் நூல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள் . அவர்களுடைய கூற்றை மறுத்துத் தக்க ஆதாரங்கள் காட்டி, நம் இலக்கியங்களின் பழமையை நிலைநாட்டுவதற்கு ஆற்றல் வாய்ந்த அறிஞர் யாரும் தமிழரிடையே இருப்பதாகத் தெரியவில்லை .
--------------------------------------------------------------------