ஊர்ப்புறணி

ஆதி

New member
75% சிங்களவர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்- இலங்கை தூதர் கரியவாஸம்.

இலங்கை தூதர் மத்திய அரசின் மனசாட்சியாய் செயல்ப்பட்டுள்ளார்

மத்திய அரசு இனப்படு கொலைக்கு துணைப்போனதற்கு துல்லியமான காரணத்தை சொல்லியிருக்கிறார் இந்தியாவுக்கான இலங்கை தூதர்

எதுக்கு வெயிட்டிங் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களையும் அடிச்சு துரத்த ஏற்பாடு செய்ங்க*
 
Last edited:
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யலாம்

-சுப்ரமணிய சாமி

பாக் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முடிவு எடுத்ததற்காக இந்தியாவையே பதட்டமான பகுதியா இல்லையா அறிவிக்க வேண்டும், உச்சநீதி மன்ற*த்தின் சமீபத்தைய தீர்ப்புக்களை கொஞ்சம் திருப்பி பார்க்கவும், மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கு சார்
 
தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

இது ஒரு நல்ல முன்னகர்வு, நாளை இந்த தீர்மானம் நம் சொந்தங்களின் உறழ்வு தீர ஒரு துரும்பாக ஏனும் உதவியாக இருக்கும்.

வழக்கம் போலவே மத்திய அரசு இதனை கண்டு கொள்ளாது
 
போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். போர் நடந்தபோது அரசுக்கு எதிராக பல நாடுகள் அழுத்தம் கொடுத்தன. தற்போது நாட்டை குழப்ப சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆளும் சுதந்திர கட்சி எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது

ராஜபக்சே

புள்ளைக்கு கொஞ்சம் கிலி கண்டிருக்கிறது போல, அதுதான் தியாகம்னு எல்லாம் பேசுது
 
ஆதி!
இது போல் பல விடையங்களில் தமிழர்கள் என்றாலே மெத்தன போக்காக இருக்கிறது. மேலும் எந்தப்பிரச்சனையானாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டே அதை நீர்த்துப்போக செய்யும் வடவர்போக்கிற்க்கு இங்கே இருக்கிற சிலரும் கொடிபிடிக்கிறார்களே! மேலும் மேலும் இதுபோல் நடந்தால் தமிழர் நெஞ்சங்களில் தனிதமிழ் நாடு போன்ற பிரிவினை வாதத்திற்க்கு வித்திடாதா?
 
தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஆதி சார் எனக்கொரு சந்தேகம், சட்டப் பேரவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன நன்மைகள் ஏற்படும்? உதாரணமாக, ஐ.நா வில் தீர்மானம் நிறைவேறினால், இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். தவறினால் மனித உரிமை மீறல் பிரச்சனை எழுப்பலாம். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் இத்தீர்மானம் எந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக இருக்கும்? நானும் ஏதாவதொரு செய்தித் தாளில் விளக்கும் கிடைக்கும் என்று தேடிப் பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
 
சட்டசபை தீர்மானம் சொல்வது என்னவென்றால், இந்திய அரசு இலங்கையில் ஐநா வழியாக பொதுவாக்கெடுப்பு எடுக்க வழி செய்ய வேண்டும் என்றுத்தான்

அதாவது சட்டசபையில் பொதுவாக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

அதனால்தான் இந்த தீர்மானம் துரும்பை போல உதவியாக இருக்கும் என்றேன்
 
ஆதி!
இது போல் பல விடையங்களில் தமிழர்கள் என்றாலே மெத்தன போக்காக இருக்கிறது. மேலும் எந்தப்பிரச்சனையானாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டே அதை நீர்த்துப்போக செய்யும் வடவர்போக்கிற்க்கு இங்கே இருக்கிற சிலரும் கொடிபிடிக்கிறார்களே! மேலும் மேலும் இதுபோல் நடந்தால் தமிழர் நெஞ்சங்களில் தனிதமிழ் நாடு போன்ற பிரிவினை வாதத்திற்க்கு வித்திடாதா?

கூடிய சீக்கிரம் இது போன்ற விடயங்களுக்கு முடிவுகள் வரும்

பொதுப்பிரச்சனையில் இந்தியா முழுக்க* மாணவர் பங்கெடுப்பு தற்பொழுது அதிகமாகியிருக்கிறது, இது ஒரு ஆரோக்கியமான ஆரம்பம்
தற்போது மாணவர்கள் வெவ்வேறு பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள், எல்லோரும் ஒன்றாய் இணையும் ஒரு பொதுப்பிரச்சனை வரும் போது இந்தியா முழுக்க மிக பெரிய மாணவர் போராட்டம் வெடிக்கும், அப்போது இந்த அரசும், ஆட்சியாளர்களும் பணிந்தே போக வேண்டிய சூழல்வரும்
 
இத்தனை நாட்களாக ஈழப் பிரச்சினையில் காட்டாத வேகத்தை அம்மா காண்பிப்பது பெரும் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது. மாணவர்களின் போரட்டபலனை தன் பக்கம் திருப்பி நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளை அள்ளத்தான் என்பது நாடறியும். தேர்தலுக்காக மக்கள் பிரச்சினைகளை கையிலேடுபதும் அது முடிந்தவுடன் மறப்பதும், மறுப்பதும், மக்களை ஒடுக்குவதும் இவரது பாணி. தமிழ் உணர்வுக்கும் ஜெயாவுக்கும் ரொம்ப தூரம், உண்மையான, தெளிவான தமிழ் பற்றாளர் யாரும் இதை நம்பவில்லை. ஆனால் நமது விடுதலைக்கான வெளிச்சம் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது என்பதும் மட்டும் உண்மை, ஈழத்தை பற்றி பேசினால் பொடா ஏவிவிட்டவர்கள் எல்லாம் ஈழம் பேசி வாக்குகள் அள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
 
தேர்தல் வரும்போது இலங்கைப் பிரச்சினையையும், காவிரிப் பிரச்சினையையும் கையிலெடுப்பது தமிழக அரசியல்வாதிகளின் வாடிக்கை. தற்போது அதிகரித்துள்ள 12 மணி நேர மின்வெட்டிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் அம்மாவின் நோக்கம்.
 
மின்வெட்டு நேரத்தில் தமிழ்நாட்டிற்கான மண்னெண்னை அளவை பாதியாக குறைத்தது தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கை என கூறியிருப்பதுவும் பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கமா?!
 
உடையும் காங்கிரஸ்! உதயமாகும் த.மா.கா! அதிமுகவுக்கு ஆதரவு?

காங்கிரஸ் வேறுப்பட்ட யூகத்தை கையாள்வதாகவே தோன்றுகிறது

ஈழப்பிரச்சனையில் தமிழக காங்கிரஸை உடைத்து, த.மா.க மூலம் சில தொகுதிகளை கைப்பற்றி திட்டமிட்டிருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது

ஜி.கே.வாசன் ஓரம் கட்டப்படுவதால் அவர் கட்சியை உடைக்க நினைக்கிறார் என்று எண்ணினாலும், இந்த சூழலில் அவர் கட்சியை உடைபதில் ஆதாயம் யாருக்கு என்று யோசிக்க வேண்டியிருக்கிறது

கட்சியை உடைத்தால் அவர்கள் அதிமுகவுடனே அதிகமாய் கூட்டணி வைக்க வாய்ப்பும் உள்ளது, தேமுதிகவும் தேர்தலை புறக்கணிக்கிர நிலையில் திமுகவின் கூட்டணி பலமற்றதாகவே இருக்கும், ஆகையால் த.மா.க உதயமானால் அதிமுகவுடனே இணைவார்கள், தேர்தலுக்கு பிறகு ஜெ மூன்றாம் அணி உருவாகத பட்சத்தில் பஜகவுடந்தான் கூட்டணி வைப்பார் அல்லது பஜக அதிக தொகுதிகள் ஜெய்கும் பட்சத்தில் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயல்வார், இந்த இரண்டில் எது நடந்தாலும் ஜி.கே.வாசன் காங்கிரஸுடன் இணைந்தே செயல்படவே வாய்ப்பிருக்கிறது

ஆக இது காங்கிரஸின் போலி நாடகமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது
 
ஆம் இருக்கலாம் ..அதேவேளையில் எந்தவகையான அரசியல் கட்சிகளினால் இன்றையதினம் மக்களின் தேவைகள் நிறைவேறுகிறது .எவ்வவகையில் நோக்கினும் கை சின்னத்தின் தொடர்புடைய எவ்வொரு கட்சியும் ஆளுமையில் வரும் தேர்தலில் வராதென நினைக்கிறன் ..
 
சிவனும் பார்வைதியும் வன்னியர்களே - காடு வெட்டி குரு

காடுவெட்டி குரு அவர்களின் அரிய கண்டு பிடிப்பு விஞ்ஞானத்துக்கே சவால்விடுவதாக இருக்கிறது
 
சிவனும் பார்வைதியும் வன்னியர்களே - காடு வெட்டி குரு

காடுவெட்டி குரு அவர்களின் அரிய கண்டு பிடிப்பு விஞ்ஞானத்துக்கே சவால்விடுவதாக இருக்கிறது

அவருக்கு வரலாற்றை மாற்றியமைத்த வன்னியன் என்ற பட்டத்தை உடனடியாக வழங்கலாமா ஆதி!
 
ஒன்றே குலம்..ஒருவனே தேவன் ன்னு சொல்ற மதத்தையும் இப்டி சொல்றானுவளா? நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா....நல்லா வருவீங்க................
 
ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை - ஜெயலலிதா அறிவிப்பு

யூ மீன் அம்மா சிலை, ஸாரி தாய்.. தாய்..

( இதிலிருந்து சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்ன*வென்றால், நம் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களை, இனி அனைவரும் தாய் என்று அழைக்க வேண்டும்)
 
இதிலிருந்து சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்ன*வென்றால், நம் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களை, இனி அனைவரும் தாய் என்று அழைக்க வேண்டும்

:lachen001::traurig001:
 
தமிழரின் பெருமைக்குரிய நகர் மதுரை இன்று மிகவும் மோசமான நிலையில் சீரழிக்கப்பட்டு உள்ளது, அந்த பழம்பெரும் நகரை இந்த நூறுக்கோடிக் கொண்டு புதுபித்தால் மிகவும் நன்று, சிலை செய்து வீணடிக்க வேண்டாம், இந்நகரைப் புதுபித்தாலே தமிழன்னைக்கு சிறப்பு சேர்க்கும். தமிழ் வழிக்கல்வி, தமிழ்ப் பதிப்பகங்கள், தமிழ் நூல்கள், நலிவடைந்த தமிழ் புலவர் வாழ்வு மேன்மை ஆகியவற்றிக்கு உதவி செய்தாலே ஒருப் பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.
 
ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை - ஜெயலலிதா அறிவிப்பு

யூ மீன் அம்மா சிலை, ஸாரி தாய்.. தாய்..

( இதிலிருந்து சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்ன*வென்றால், நம் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களை, இனி அனைவரும் தாய் என்று அழைக்க வேண்டும்)

ஏனிப்படி மாற்றோர் எள்ளலுக்கு ஏதுவாக? .... தமிழ்த்தாய்.... உருவகப்படுத்துதல் அபத்தத்தின் உச்சம்
 
Back
Top