பரதேசி - விமர்சனம்

lenram80

New member
நேற்று இரவு படம் பார்த்திலிருந்து அதே நினைப்பாகவே இருக்கிறது. இப்படி ஒரு படத்தை நான் எந்த மொழியிலும் இதுவரை பார்க்கவில்லை. இப்படி என்னை எந்த படமும் இந்த நாள் வரை பாதிக்கவில்லை. இந்த படத்தை பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை. பாலாவே இப்படி ஒரு படத்தை எடுத்து விட்டு அடக்கமாக இருக்கும் போது, நான் சும்மா 3 மணி நேரம் 'பார்த்து' விட்டு அளப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். தேனீர் நீங்கள் எப்போதாவது குடித்து இருந்தால் கூட, இந்தப் படத்தை பார்க்க கடமைப் பட்டவர்கள் நீங்கள்.

"நரகக் குழியிலே வந்து மாட்டிகிட்டியே அங்கம்மா" என்ற இறுதிக்காட்சியின் இறுதி அலறல் இன்னும் என்னுள் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டிலேயே சொல்ல வேண்டிய, பள்ளிக் கூடங்கள் சொல்ல மறந்த கதையை அரவான், பரதேசி போன்ற படங்கள் பார்க்கும் போது இயக்குநர்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.

அனைவரிடமும் உழைப்பை இப்படி அநியாயமாய் உறுஞ்சியிருக்கும் 'கங்கானி' பாலாவுக்கு ஒரு கமர்சியல் வெற்றியாகவும் இந்த படம் அமையவேண்டும். இனி தமிழ் படங்களைச் சொல்லும் போது "உலக" தரத்துடன் என்ற வார்த்தைக்குப் பதிலாக "பரதேசி" தரத்துடன் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஒரே ஒரு திஷ்டி:-
எல்லாம் தெரிந்த நாயகனை ஏன் சில இடங்களில் "சின்னதம்பி (பிரபு)" வாக காட்டவேண்டும் என்று புரியவில்லை.
 
Last edited:
படம் பிரமாதம்... இப்படியொரு படத்தை இதுவரை பார்த்ததேயில்லை. பாலா.. யூ டிஸர்வ் இட். ஒரு உணர்வெழுச்சி தோன்றியிருக்கிறது. அம்மக்களை, அக்கதையைப் படமாக்கியிருக்கும் பாலாவுக்கு ஒரு சமூக பொறுப்புணர்ச்சி இருக்கிறது. உலகப்படத்திற்கு நெருக்கத்தில் இப்படம் அமைந்திருந்தது. சில குறைகள் படத்தில் இருந்தாலும் நிறைவுதான்.

இருந்தாலும் மூலக்கதையான red tea எழுதிய டேனியலை பாலா ஏன் இவ்வளவு கேவலப்படுத்தினார் என்பது மட்டும் கொஞ்சம் உறுத்தல்..

நடிப்பு - பிரமாதம் - அந்த கூனிய மூதாட்டி முகம் கூட நினைவிலில்லை, ஆனால் பிரமாதமான நடிப்பு - 4.5/5
ஒளிப்பதிவு - செழியன்.. உலகசினிமா எழுதியவர். அருமை.. அட்டகாசம் 4.5/5
கலை - செட் என்று தெரியாத அளவுக்கு இருந்தது 4.5/5
இசை - மரண மொக்கை, படத்தைக் கெடுத்திருப்பதே இசைதான் 1.5/5
படத்தொகுப்பு : ஒரு செமி சாச்சுரேஷன் லெவலில் அந்த கால படமென்ற டோன் கொடுக்கப்பட்டிருக்கிறது, போர் அடிக்காமல் செல்கிறது. 4/5
இயக்கம் - தைரியம்.. அட்டகாசம். பாலாவால் இது முடியும்!! 4.5/5

இத்தனை இருந்தும்.. இன்னும் நேர்த்தியாய் எடுத்திருக்கலாம் என்று தோணுகிறது.

- வெறுப்பு விஜய்
 
விருப்பங்களும் வெறுப்புகளும் படம் காணும் ஆவலை தூண்டுகிறது . ஒரு நல்ல படைப்பை திரையரங்கில் காணவேண்டும் .... காத்திருக்கிறேன் நேரத்திற்கு .... :)
 
மனதை பிழிந்த படம்
ராஜா இருந்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்
 
Back
Top