நான்காம் வகை ஆசிரியர்கள்

(பிப்ரவரி 2-ஆம் வார புதிய தலைமுறையில் வெளிவந்த, திரு.மாலன் அவர்களின் 'என் ஜன்னலுக்கு வெளியே' தொடரில் 'ஒளியும் இருளும்' என்ற உபதலைப்பில் வந்த கட்டுரைக்கான விமர்சனம் இது. 21-பிப்ரவரி புதிய தலைமுறை இதழில் 'பெண்கள் டைரி' பகுதியில் இடம்பெற்றது.)

இந்த வார ஜன்னலின் 'ஒளியும் இருளும்' ஆசிரியப்பணி புரியும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. ('ஒளியும் இருளும்' படிக்க: http://maalan.co.in/topicdetails.php?topicid=236&catid=10#content_container)

அரசுப்பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் கீழ் மத்திய வகுப்பைச் சார்ந்தவர்கள்.அவர்கள் பெற்றோர்களும் கல்வியில் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முடிவதில்லை. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு கல்வியில் சறுக்கல்களோ, சரியான புரிந்துணர்தல்களோ கிடைப்பதில்லை.அதையெல்லாம் சரி செய்யும் பொறுப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம்.ஆனால் சில ஆசிரியர்கள் அதையெல்லாம் உணரவே இல்லை என்பது கசப்பான உண்மை. அரசாங்க வேலை, நல்ல சம்பளம், சமுதாயத்தில் மரியாதை-இவற்றுடன் திருப்திப்பட்டு விடுகிறார்களோ என்ற வினா எழுகிறது.

நான் பார்த்தது வரையில் ஆசிரியர்கள் 4 வகை.முதல் வகை:அனைத்து மாணவர்கள் மீதும் ஒரே அக்கறையுடன் இருப்பவர்கள்.மாணவர்களின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்பவர்கள்.இரண்டாம் வகை:குறையேதும் சொல்ல முடியாமல் அவரவர் கடமைகளைச் சரியாகச் செய்பவர்கள்.மூன்றாம் வகை:எதையும் கண்டுகொள்ளாதவர்கள்.சம்பளம் வந்தால் சரி என்றிருக்கும் பேர்வழிகள்.இவர்களைக் கூட விட்டுவிடலாம்.மாணவர்கள் வாழ்க்கையில் அப்படி ஒன்றும் பேரிடர்களைப் பண்ணிவிட மாட்டார்கள்.ஆனால் அந்த நான்காம் வகை ஆசிரியர்கள் இருக்கிறார்களே, மாணவர்களை discourage பண்ணுபவர்கள்.பெர்சனலாகப் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்தாலும் குற்றம் காண்பவர்கள்.அதிகாரத்தைத் தவறாகவும் கடுமையாகவும் பயன்படுத்துபவர்கள்.சொந்த விருப்பு வெறுப்புகளை வகுப்பறையில் திணிப்பவர்கள்.இவர்கள் எல்லாம் ஒரே வகை-அபாய வகை.நான்காம் ஆசிரியர்களின் சதவீதம் குறைவாகவே இருக்கும்.ஆனால் நிறைய மாணவர்களுக்கு நிச்சயம் இந்த மாதிரி ஆசிரியர்களுடனான அனுபவம் இருக்கும்.

யாரையோ எதற்குச் சொல்ல வேண்டும், எனக்கே இப்படி ஒரு அனுபவம் இருந்தது எங்கள் பள்ளியில்.அந்த ஆசிரியருக்கு மெடிக்கல் படிப்பதில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது.உடனடியாகச் சம்பாதிக்கும் தொழில் இல்லையென்று எப்பவுமே சொல்வார்.ஒரு முறை 12-ஆம் வகுப்பில் அனைவரையும் என்ன படிப்பதில் ஆர்வம் என்று சொல்லச்சொன்னார்.என் முறை வந்த போது 'மெடிக்கல்' என்று சொன்னேன்.'அதெல்லாம் வேஸ்ட்.உக்காரு' என்று கூறிவிட்டார்..அதைக் கூட பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.'ஹால் டிக்கெட்' வாங்குவதற்கு பள்ளிக்குச் சென்றிருந்த போது அப்போதும் அதே கேள்வி.என் அதே பதில்.கடுப்பாகிவிட்டார் மனிதர்.என்னை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்துவிட்டார்.மெடிக்கல் வேஸ்ட் என்று.நான் என் கோணத்தினைச் சொன்னேன்.(அவரிடம் பணிவு தான் காட்ட முடியும்.அடிமையா பட முடியும்)அவரால் அவர் கருத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.தாக்குதல் வேறு மாதிரியாகத் தொடர்ந்தது.அப்போது நான் 2 அல்லது 3 -ஆம் ரேங்க் வாங்குவேன்.முதல் ரேங்க் வாங்கும் என் நண்பனை(அவன் engineering என்று அன்று சொன்னவன்.அதனால் அவன் மேல் இவருக்கு ஒரு பிரியம்) முந்துவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.அதைச் சொல்லி அவர் discourage பண்ண ஆரம்பித்து விட்டார்.'அவனையே உன்னால் முந்த முடியவில்லை.மெடிக்கல்ல சீட்டு கிடைக்கணும்னா எவ்வளவு போட்டி இருக்கும் தெரியுமா, உன்னால அதெல்லாம் முடியுமா?புத்திசாலித்தனமா யோசிச்சுக்கோ!பேசாம பொறியியல் படி.அதான் உன் குடும்பத்துக்குச் சரி'-என்றாரே பார்க்கலாம், எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது.பரிட்சைக்குச் செல்லும் முன் தன் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பேசும் பேச்சா இது?என் நிலைமை எப்படி இருந்திருக்கும்?!

அவர் சாபம் விட்டதுபோல் என்னால் மெடிக்கல் படிக்க முடியவில்லை.பொறியியல் தான் படித்தேன்.அவரால் தான் என்று சொல்லவில்லை.என் மேல் கூடத் தவறு இருந்திருக்கலாம்.என் உழைப்பு குறைவாக இருந்திருக்கலாம்.ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் என் தைரியத்தையும், ஆர்வத்தையும் அசைத்துப் பார்த்து விட்டது.அதுவும் கூட ஒரு காரணம்தான் நான் இழந்ததுக்கு.அந்தச் சம்பவம் நடந்து 7 வருடம் ஆகிவிட்டது.ஆனால் அது மனதில் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.அந்த முதல் ரேங்க் நண்பன் இன்னும் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவன்.அந்த ஆசிரியரை மட்டும் என்னால் இன்னும் மன்னிக்கவே முடியவில்லை.விளைவு-அதன் பின் என் பள்ளியில் நிறைவாக நான் செல்லவே முடியவில்லை.என் தொடக்கப்பள்ளியை நான் நேசிக்கும் அளவுக்கு, இலகுவாக செல்லும் அளவுக்கு அந்தப் பள்ளிக்குச் செல்லவே மனம் தடுக்கிறது.ஒரு பள்ளியையே பிடிக்காமல் செய்து விடும் வல்லமை அவர் வார்த்தைகளுக்கு இருந்தது என் 'கட்டக் கோளாறு' என்றுதான் சொல்ல வேண்டும்.வேறு என்ன சொல்வது?

என் வாழ்வில் இந்த மாதிரி ஆசிரியர்கள் ஒரு புறமென்றால் இன்னொரு புறம், 12 ஆரம்பம் முதல் பார்த்துப் பார்த்து செதுக்கி எனக்காகவே அவர் சொந்த வேலைகளைக்கூடத் தள்ளிவைத்து படிப்பும், ஊக்கமும் கொடுத்த என் வேதியியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஒரு புறம்.

எல்லா ஆசிரியர்களும் நான்காம் வகை இல்லை.நான்காம் வகை ஆசிரியர்கள் இல்லாத எந்தப் பள்ளியும் இல்லை.
 
இப்போதெல்லாம் மிக மிக அறிவுக்கூர்மை படைத்தவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் ஆக முடிகிறது!!

அந்த நான்காம் வகை ஆசிரியர்கள் இருப்பது உண்மைதான் ...போன தலைமுறையில் வேறு வழியில்லாமல் ஆசிரியர்கள் ஆன ஒரு சிறிய சதவீதம் அது!!

அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் கடமையே உயிராகப் பணியாற்றும் ஆசிரியர்களின் தியாகம் சொல்லி மாளாது!!

இனி சரியாகிவிடும் !!எதிர்காலம் சுகமே
 
அறிவுக்கூர்மைக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை ஜான் சார். நான் சொல்லும் நான்காம் வகை ஆசிரியர்கள் பெரும்பாலும் நன்றாக பாடம் நடத்தக் கூடியவர்கள் தான்!

அதிகார குணம் கர்வமாக தலைதூக்கியிருக்கிறது அவர்களிடம். அது தான் பிரச்சனை. அது வளர்ப்பு முறையையும் தனி மனித குணங்களையும் பொருத்தது. அதற்கும் அறிவுக் கூர்மைக்கும் தொடர்பில்லை என்பது என் கருத்து.

// அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் கடமையே உயிராகப் பணியாற்றும் ஆசிரியர்களின் தியாகம் சொல்லி மாளாது! // - கண்டிப்பாக சார். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கும் என் வாழ்வில் முக்கியப் பங்கு உண்டு. என்றும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
 
என்னிடம் படித்த பல மாணவர்கள் , என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் இன்று பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் பணிபுரிகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். வழியில் என்றாவது ஒருநாள் அவர்களைச் சந்திக்கும்போது , என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டுவார்கள். இதைவிட ஓர் ஆசிரியனுக்கு என்ன பெருமை இருக்கமுடியும் ?
 
ராஜிசங்கர் கூறியதுபோல் எனக்கும் அவ்வனுபமுண்டு.. +2 வில் இயறபியல் பாடவாசிரியர். வகுப்பிற்க்கு பெரும்பாலும் வருவதில்லை வந்தாலும் பாடப்பகுதியை முழுவதுவும் நடத்தவில்லை. எனது தந்தை ஒரு தமிழாசிரியர் (அரசாங்கப்பள்ளி). அவரை சந்திக்க எனது தந்தை என்னையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவரிடம் தனிப்பட பயிற்றுவிக்க (டியுசன்) முடியுமா என்று கேட்பதாக என் தந்தையின் என்னம். முதலில் எனது தந்தையை ஒரு ஆசிரியர் என்ற முறையில் கூட அவர் மதிப்பளிக்கவில்லை. மிகவும் அலட்சியமாக எங்கே வந்தீர்கள் என்பது போல நடத்தினார். உங்களுக்கெல்லாம் இது சரிபட்டுவராது என்னைக்காட்டி இவனையெல்லாம் ஏன் இந்த 'குருப்' எடுக்க விட்டீர்கள் உங்களால் எல்லாம் மருத்துவத்திற்கோ பொறியியலுக்கோ படிக்க வைக்கமுடியுமா? நான் வேறயாருக்கும் தனிப்பட பயிற்ச்சி எடுப்பதில்லை போங்கள் என்று அனுப்பிவிட்டார். என் தந்தை விக்கித்துவிட்டார் 'என்ன மனிதன்டா இவன்" என்று வெளியில் வந்து புலம்பினார். என் நிலமையோ!... அந்த ஆசிரியர் அவ்விதம் எங்களை விரட்டும் போது அங்கு அவரிடம் பாடம் பயின்று கொண்டுருந்தவர்கள் என்னுடன் படிக்கும் சக மாணவியர் இருவர்...ஓருவர் எங்கள் பள்ளியின் தாளாளர் மகள் மற்றயவர் தலைமையாசிரியரின் மகள்!... என் தந்தையிடம் இதை நான் தெரிவிக்கவில்லை!

என் தந்தையோ இதற்க்கு நேர்மாறானவர் ... ஒரு கிராமத்தில் ஒருவரை பார்கச்சென்றபோது வயல்வெளியில் மாடுமேய்த்த ஒரு சிறுவனைக்கண்டு இழுத்க்கொண்டு வந்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அச்சிறுவன் இப்பொழுது ஒரு கல்லூரிப்பேராசிரியர்.
 
கண்டிப்பாக ஐயா..

என் 10-ஆம் வகுப்பு ஆசிரியர் பள்ளிக் கடைசி நாளின் போது கேட்டார்: 'என்னிடம் படிக்கும் நீங்க எல்லாரும் நல்லா வர வேண்டும். அதனால எனக்கு ஒன்னும் கிடைக்கப் போறதில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் உங்களைப் பார்க்கும் போது நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பது தெரிந்தால் மகிழும் முதல் ஜீவன் நானாகத் தான் இருப்பேன். அந்த மகிழ்ச்சியை எனக்குத் தருவீர்களா?

உங்கள் பதில் கண்டு அவர் தான் நினைவுக்கு வருகிறார்.
 
ராஜிசங்கர் கூறியதுபோல் எனக்கும் அவ்வனுபமுண்டு.. +2 வில் இயறபியல் பாடவாசிரியர். வகுப்பிற்க்கு பெரும்பாலும் வருவதில்லை வந்தாலும் பாடப்பகுதியை முழுவதுவும் நடத்தவில்லை. எனது தந்தை ஒரு தமிழாசிரியர் (அரசாங்கப்பள்ளி). அவரை சந்திக்க எனது தந்தை என்னையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவரிடம் தனிப்பட பயிற்றுவிக்க (டியுசன்) முடியுமா என்று கேட்பதாக என் தந்தையின் என்னம். முதலில் எனது தந்தையை ஒரு ஆசிரியர் என்ற முறையில் கூட அவர் மதிப்பளிக்கவில்லை. மிகவும் அலட்சியமாக எங்கே வந்தீர்கள் என்பது போல நடத்தினார். உங்களுக்கெல்லாம் இது சரிபட்டுவராது என்னைக்காட்டி இவனையெல்லாம் ஏன் இந்த 'குருப்' எடுக்க விட்டீர்கள் உங்களால் எல்லாம் மருத்துவத்திற்கோ பொறியியலுக்கோ படிக்க வைக்கமுடியுமா? நான் வேறயாருக்கும் தனிப்பட பயிற்ச்சி எடுப்பதில்லை போங்கள் என்று அனுப்பிவிட்டார். என் தந்தை விக்கித்துவிட்டார் 'என்ன மனிதன்டா இவன்" என்று வெளியில் வந்து புலம்பினார். என் நிலமையோ!... அந்த ஆசிரியர் அவ்விதம் எங்களை விரட்டும் போது அங்கு அவரிடம் பாடம் பயின்று கொண்டுருந்தவர்கள் என்னுடன் படிக்கும் சக மாணவியர் இருவர்...ஓருவர் எங்கள் பள்ளியின் தாளாளர் மகள் மற்றயவர் தலைமையாசிரியரின் மகள்!... என் தந்தையிடம் இதை நான் தெரிவிக்கவில்லை!

என் தந்தையோ இதற்க்கு நேர்மாறானவர் ... ஒரு கிராமத்தில் ஒருவரை பார்கச்சென்றபோது வயல்வெளியில் மாடுமேய்த்த ஒரு சிறுவனைக்கண்டு இழுத்க்கொண்டு வந்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அச்சிறுவன் இப்பொழுது ஒரு கல்லூரிப்பேராசிரியர்.

இதைத் தான் எங்கள் மாலன் சார் சொல்வார், 'கூட்டிக் கழித்துப் பார்த்தால் தங்கள் பொறுப்பை உணர்ந்த மனிதர்கள் இருக்கும் எந்த இடமும் - பள்ளியோ , ஊடகமோ, அலுவலகமோ, இல்லமோ - ஒளிர்கிறது; சுயநலத்தை சுவாசமாகக் கொண்ட எந்த இடமும் இருள்கிறது' என்று

உங்கள் தந்தைக்கு என் வணக்கங்கள் கு.கோ.பி
 
நானும் அரசு பள்ளியில் ஆசிரியர் , தலைமையாசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றவன் . என்னைப் பற்றி நான் பெருமை அடித்துக்கொள்ளக் கூடாது . நான்காம் வகை ஆசிரியர்கள் மட்டுமல்ல், வேறு வகையும் உண்டு . என் சக ஆசிரியர் ஒருவர் ஒரு நாள் என்னைத் தன் வகுப்புக்கு அழைத்துச் சென்று " பார் " என்றார் .
இரண்டாம் வகுப்பு . எல்லா மாணவர்களும் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தனர் . எனக்கு ஒன்றும் புரியவில்லை . பின்பு அவர் விளக்கினார் . " கண்கள் மூடி இருந்தால் பேசமாட்டார்கள் , வகுப்பில் சத்தம் இருக்காது , ஆசிரியர் இல்லை என்பது வெளியில் தெரியாது , நாம் வேறு வகுப்புக்குப் போய் அந்த ஆசிரியரிடம் அரட்டை அடிக்கலாம் "
அப்பொழுது எனக்கு ஏற்பட்ட பரிதாப உணர்ச்சி இப்பொழுது நினைத்தாலும் ஏற்படுகிறது . பாவம் : ஆறு வயதுக் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கொடுமை !
 
அடக் கொடுமையே!
 
சில ஆசிரியர்கள் ஏன் மோசமாக உள்ளனர் என்பதை சொல்ல விழைந்தேன்,ராஜிசங்கர் ..அவர்கள் வளர்ந்த சூழல் அதை வெல்ல முடியாமை !

ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியத் தம்பதியின் மகன் என்பதில் எனக்கேற்படும் பேருவகை சொல்லில் அடங்காது..

என் அம்மாவின் பல மாணவர்கள்,டெல்லியிலும் வெளிநாட்டிலும் இருந்து திருமணம் செய்து கொள்ள வரும் போது "என் மூன்றாம் வகுப்பு ஆசிரியைதான் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் " என்று சொல்லி அழைத்துச் செல்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன் !!!டாட்டா பிர்லாவுக்குக் கூட இந்த மரியாதை கிடைக்காது
 
ஒருவர் வளர்ந்த சூழல் மற்றவரின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றால் அது தவறல்லவா? எல்லோராலும் ஆசிரியப் பணி செய்ய முடியாது. அது ஒரு தவம்.

ஆசிரியர்கள் ஏணி போல். எல்லாரையும் ஏற்றி விடுகிறோம், நாம் இன்னும் கீழே தானே இருக்கிறோம் என்று ஏணிகள் ஒரு போதும் நினைத்திடாது.

தங்கள் அம்மாவிற்கு என் மரியாதைகளும் வணக்கங்களும் ஜான் சார்.
 
ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியத் தம்பதியின் மகன் என்பதில் எனக்கேற்படும் பேருவகை சொல்லில் அடங்காது..
ஜான! உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்!
தாயும் தந்தையும் வாழ்வாங்கு வாழ்ந்தால் தனயர்களான நாம் கொடுத்து வைத்தவர்களே!

மூன்றாம் வகுப்பு டீச்சரை என்னாலும் மறக்கமுடியாது.... ஒரு தேவதை அவர்கள்!
 
ஒருவர் வளர்ந்த சூழல் மற்றவரின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றால் அது தவறல்லவா? எல்லோராலும் ஆசிரியப் பணி செய்ய முடியாது. அது ஒரு தவம்.

:icon_b:
 
ராஜிசங்கர் கூறியதுபோல் எனக்கும் அவ்வனுபமுண்டு.. +2 வில் இயறபியல் பாடவாசிரியர். வகுப்பிற்க்கு பெரும்பாலும் வருவதில்லை வந்தாலும் பாடப்பகுதியை முழுவதுவும் நடத்தவில்லை. எனது தந்தை ஒரு தமிழாசிரியர் (அரசாங்கப்பள்ளி). அவரை சந்திக்க எனது தந்தை என்னையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவரிடம் தனிப்பட பயிற்றுவிக்க (டியுசன்) முடியுமா என்று கேட்பதாக என் தந்தையின் என்னம். முதலில் எனது தந்தையை ஒரு ஆசிரியர் என்ற முறையில் கூட அவர் மதிப்பளிக்கவில்லை. மிகவும் அலட்சியமாக எங்கே வந்தீர்கள் என்பது போல நடத்தினார். உங்களுக்கெல்லாம் இது சரிபட்டுவராது என்னைக்காட்டி இவனையெல்லாம் ஏன் இந்த 'குருப்' எடுக்க விட்டீர்கள் உங்களால் எல்லாம் மருத்துவத்திற்கோ பொறியியலுக்கோ படிக்க வைக்கமுடியுமா? நான் வேறயாருக்கும் தனிப்பட பயிற்ச்சி எடுப்பதில்லை போங்கள் என்று அனுப்பிவிட்டார். என் தந்தை விக்கித்துவிட்டார் 'என்ன மனிதன்டா இவன்" என்று வெளியில் வந்து புலம்பினார். என் நிலமையோ!... அந்த ஆசிரியர் அவ்விதம் எங்களை விரட்டும் போது அங்கு அவரிடம் பாடம் பயின்று கொண்டுருந்தவர்கள் என்னுடன் படிக்கும் சக மாணவியர் இருவர்...ஓருவர் எங்கள் பள்ளியின் தாளாளர் மகள் மற்றயவர் தலைமையாசிரியரின் மகள்!... என் தந்தையிடம் இதை நான் தெரிவிக்கவில்லை!

என் தந்தையோ இதற்க்கு நேர்மாறானவர் ... ஒரு கிராமத்தில் ஒருவரை பார்கச்சென்றபோது வயல்வெளியில் மாடுமேய்த்த ஒரு சிறுவனைக்கண்டு இழுத்க்கொண்டு வந்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அச்சிறுவன் இப்பொழுது ஒரு கல்லூரிப்பேராசிரியர்.

இயற்பியல் ஆசிரியர் பேரு "வரதராஜனா"...???

இல்லை ஜெயந்த்!
அவர் எனக்கு மட்டும் 'வரம்' தராதரஜன்!
ஆனால் இயற்பியலில் முடிசுடா ராஜன்!
சில படித்தோரெல்லாம்
மனம் படிக்க மறந்(றுத்)தோர்!
 
Back
Top