ஹரிதாஸ் - விமர்சனம்

Ravee

New member
Haridas+Movie+First+Look+Posters+Haridas+New+Poster+images+(1).jpg


ஹரிதாஸ் - விமர்சனம்


முதலில் திரையரங்கில் சென்று பார்த்தேன் என்று பெருமை பட்டுக்கொள்ள ஒரு தமிழ்படம் . இயக்குனர் - ஜி என் ஆர் குமாரவேலுவிடம் இருந்து ஒரு அருமையான படைப்பு ... அதற்கு உறுதுணையாய் ஒளிபதிவாளர் ரத்னவேலு , கிஷோர் , சினேகா , சிறுவன் பிருதிவிராஜ் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள் .

கதையின் களம் இரண்டு நேர்கோட்டில் பயணித்தாலும் இறுதி காட்சி வரை சிறப்பாக நம்மை ஈர்த்திருக்கிறார்கள் . காவல் துறையில் சாதிக்க நினைத்து பயணிக்கும் சிவதாஸின் மகன் மற்ற குழந்தைகளை போல் இல்லாமல் ஒரு சிறப்பு குழந்தையாய் இருக்க ( இதில் ஆட்டிசஸம் என்ற குறைபாடை நேர்த்தியாக காட்டியிருக்கிறார் இயக்குனர்).அவனை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் உறவுகளுக்கு நடுவில் அவனை சராசரி வாழ்க்கை பாதைக்கு மேல் சாதிக்க வைக்கும் தகப்பனின் கதைதான் ஹரிதாஸ்.

இந்த கதாபாத்திரத்தில் கிஷோர் வாழ்ந்திருக்கிறார் . வசன உச்சரிப்புகளும் அருமை . சினேகா ...... இவரை குத்தாட்டத்திற்கும் கவர்ச்சிக்கும் பயன் படுத்திய இயக்குனர்கள் தலையில் இடி விழட்டும் . சேரனுக்கு பிறகு குமாரவேலு அருமையாய் இவரை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் . சிநேகாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல் . சிறுவன் பிருதிவி .... காற்றில் அலையும் கைகளும் வெறித்து நோக்கும் விழிகளுடன் என் கண் முன்னே இவனை போல என் வாழ்க்கையில் கண்ட அத்தனை பேரையும் கொண்டுவந்தான் .படத்தின் ஆரம்பத்தில் அந்த ஐந்து நிமிடங்கள் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டு இருந்தால் இவன் என்னை மிகவும் தவிக்க வைத்து இருப்பான். இவன் தமிழ் திரை உலகிற்கு அருமையான கண்டுபிடிப்பு .

மேலும் மனநல மருத்துவரகவரும் யூகி சேது , வாகனஒட்டியாக வரும் சூரி , மற்றும் கிஷோருக்கு துணை நிற்கும் காவல்துறை நண்பர்கள் ... என அனைவரும் அருமையாய் தங்கள் பங்களிப்பை தந்து இருக்கிறார்கள் . பள்ளிக்காட்சிகளில் சிறுவர்கள் பேசுவது கொஞ்சம் அதிகம் என்றாலும் எல்லை கோட்டை தாண்டாமல் இருந்தது . இவர்கள் அனைவரையும் கட்டி வைத்து இருந்தது ஒளிப்பதிவாளரின் கேமரா . காட்சிகளின் அழுத்தங்களையும் , நெகிழ்வையும் பின்னணியை சரியாய் தேர்வு செய்து பின்னி இருந்தார் விஜய் ஆண்டனி . இசை இரைச்சல் இல்லாமல் இதம் .

சொல்ல வந்த கதையை ஒரு வாழ்க்கையாய் சொல்லி முடித்து இயக்குனர் வெற்றி கண்டாலும் அந்த குத்துப்பாட்டும் ... முடிவும் .... நம்மை தமிழ்படம்தான் பார்த்தோம் என்று சுயநினைவுக்கு கொண்டுவருகிறது . சரி இவ்வளவு தூரம் நம் ரசிகர்களை நம்பி படம் எடுத்ததே சிறப்பு ....

என் மதிப்பில் படம் முதல் படிகளை தொடும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது . தயவு செய்து அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை காணுங்கள் .... :)




index-7078-67237-Haridas_Movie_Stillsfa73e2f37426d5e356e0d72d50f98e0c.jpg
 
அருமையான திரைப்படம் என்பதை ரவியண்ணாவின் அழகான விமர்சனம் உறுதிசெய்கிறது..!!

பகிர்வுக்கு மிக்க நன்றியண்ணா..!!:icon_b:
 
நன்றி சுகந்தபிரியன் .யாரும் இப்படத்தை பார்த்ததாக தெரியவில்லையே . அநேகமாக எல்ல திரை அரங்கிலும் தூக்கிவிட்டார்கள் . சென்னை நிலவரம் தெரியவில்லை .
 
Back
Top