சித்திரம் எழுப்பிய கவிதை

ரமணி

New member
இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

Vibram-FiveFingers-for-Kids.jpg


(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****
 
708331df31872f15c7702014bf63-grande.jpg


(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மண்ணின் வெடிப்புகள் மனதின் வெடிப்புகள் என்றவள் அறிவாளா?
கண்ணில் வரும்நீர் மண்ணில் விழுந்து பயிர்கள் செழிக்குமோ?
இயற்கையை வேண்டுதல் போல மனிதனை வேண்டுதல் எளிதோ?
இயற்கையை அழித்திடும் மனிதன் கடவுளா அன்றி அரக்கனா?

--ரமணி, 01/03/2013

*****
 
புதுமையான முயற்சி நன்றாகயிருக்கிறது வாழ்த்துக்கள் .தொடருங்கள் ரமணி ஐயா...
 
93126d1362196257t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-athta-thathta-400x187.png


(கலிவிருத்தம்)

ஆத்தாளின் பாம்படமோ அடகு வங்கியிலே
தாத்தாவும் பையனும் மதுபானக் கடையிலே
நேத்திருந்த நிலைமாறி நெறிமுறைகள் தடம்புரண்டு
சோத்துக்கே வழியின்றிச் சீரழியும் தினவாழ்வு.

--ரமணி, 02/03/2013

*****
 
Last edited:
girlpray.jpg


(கலிவிருத்தம்)
சின்னக் கரம்கூப்பிக் கண்ணை இமைக்காமல்
தன்னந் தனியாகத் தருவடியில் அமர்ந்தருளும்
விக்ன ராஜாவிடம் விடைவேண்டும் சின்னரோஜா
பக்தியுடன் கேட்பதுதான் பண்டிதர்க்கும் புரியுமோ?

--ரமணி, 02/03/2013
 
Last edited:
சித்திரம் எழுப்பிய கவிதைகள் அனைத்தும் சிந்தனையை எழுப்பும் வகையில் அமைந்திருப்பது ரசிக்கவைத்து வியக்கவைக்கிறது..!!

வாழ்த்துக்கள் ரமணி ஐயா... தொடருங்கள்..!!
 
Human-Tail-53275931928_xlarge.jpeg


05. வால்நரன்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவளவில் ஆறில் ஒருபங்கு வாலுடன்
உருவாகும் மனிதரில் ஒருசிலர் குழந்தையாய்ப்
பிறக்கும் போதும் வாலுடன் பிறப்பதுண்டு
ஒருகோடி மனிதர் உலகில் இன்று
சிறுவாலுடன் திரிவதாகக் கணக்கொன்று கூறுமே.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
வாலுள்ள பிள்ளை என்னென்ன பிழைக்குமோ?
வால்நரர்கள் கூட்டம் உலகளவில் பெருகுவது
வாலறிவன் விளையாட்டோ விதியோ வீணோ?

*****
 
Last edited:
06. வெண்மையில் பெண்மயில்

94168d1362662780t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-img-white-peacock-bnatyam.png


(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
எண்ணத்தின் வீச்சே உலகு.

பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
பெண்மையே பூமியின் அச்சு.

*****
 
2604d1362890554t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-ganapati-child-500x341.jpg


07. ஆனைப் பாப்பா!

image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG1...BrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

--ரமணி, 10/03/2013

*****
 
2614d1363704424t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-boyandcow-400x263.png


08. பசுவும் கன்றும்!

image link:
MediaFire - Space for your documents, photos, video, and music.

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
கன்றுக்குக் காலிரண்டும் கையான தெப்படி
யென்றே பசுவதுவே பார்க்கிறதோ? - அன்றிந்தக்
கன்றான பையன் குறும்பில் அகம்நெகிழ்ந்து
அன்புடன் நோக்குமே மாடு!

--ரமணி, 19/03/2013

*****
 
06. வெண்மையில் பெண்மயில்

94168d1362662780t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-img-white-peacock-bnatyam.png


(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
எண்ணத்தின் வீச்சே உலகு.

பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
பெண்மையே பூமியின் அச்சு.

*****

எண்ணத்தின் வீச்சே உலகு என்கிற ஈற்றடி பல எண்ணங்களை ,சிந்தனைச் செறிவை உள்ளடக்கியது!

ஐயா நன்று
 
2624d1365134217t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00hindu-baby-01.jpg


09. காலத்தில் ஜனித்த விதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வாழப் பிறந்தாயோ வாழ்விக்கப் பிறந்தாயோ
ஆழியின் சுழற்சியில் மாறும் கோலத்தில்
வாழையாய்த் தாழையாய்த் தழைத்து வளர்வாயோ
கூழையாய்க் கூனிக் குறுகி இளைப்பாயோ
ஊழ்வினை உன்னது என்னவோ யாரறிவார்?

--ரமணி, 05/04/2013

*****
 
708331df31872f15c7702014bf63-grande.jpg


(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மண்ணின் வெடிப்புகள் மனதின் வெடிப்புகள் என்றவள் அறிவாளா?
கண்ணில் வரும்நீர் மண்ணில் விழுந்து பயிர்கள் செழிக்குமோ?
இயற்கையை வேண்டுதல் போல மனிதனை வேண்டுதல் எளிதோ?
இயற்கையை அழித்திடும் மனிதன் கடவுளா அன்றி அரக்கனா?

--ரமணி, 01/03/2013

*****

உழுது பயிரிட்ட நிலத்தை நீயும் மறுவக்க உழுவதென்ன சூரியரே!
பொழுதும் சாஞ்சபின்னும் நெஞ்சு பூத்த வேர்வை காயவில்லே!
தொழுதே கேட்டுகிறேன் நட்ட பயிரெல்லா சுட்டெறிக்க வேணாஞ்சாமி!
பழுதே இல்லாத பச்சையெல்லாம் பாழாக்கவேணாஞ்சாமி!
பொங்ஙியே ஆத்துல தண்ணிவருமின்னு நாளெல்லாங் காத்திருந்தோம்
திங்கிற சோத்திலேயே கைய வச்சுபுட்டான் தடித்தாண்டவ’ராயனுமே’
ஏங்கியே அழுது விட்ட கண்ணிரும் அடையவில்லை வயலிலே!
தங்கியே மழையாச்சும் சொட்டவிடு! அந்த மேகத்தை மட்டும் கிட்டவிடு!
சூரியரரே! சந்திரரே! நீங்க உள்ளமட்டும் ஏஞ்சனத்த வாழவிடு!
 
girlpray.jpg



ஆற்றங் கரையினிலே அரச மரத்தடியில்
காற்று வெளியினிலே கைகள் ஐந்துடனே
வீற்று இருக்கின்ற விநாயகப் பெருமானே!
நூற்றுக் கணக்கினிலே தேங்காயை உடைப்போர்கள்
ஆற்றிய பாவங்கள் ஆற்றோடு போய்விடுமோ ?
 
708331df31872f15c7702014bf63-grande.jpg



மாரித் தாயே ! மனமிரங்கி வருவாயே !
எரிகுளங்கள் யாவும் வறண்ட தம்மா !
வாரிக் கொடுக்கின்ற வள்ளலாய் இருந்த நீ
மாறிப் போனதன் மர்மத்தைக் கூறிடுவாய்!
ஊரிலே நல்லவர் ஒருவர் இருந்திட்டால்
மாரி பொய்யாது பெய்யும் என்றாரே !
நல்லவர் எல்லோரும் மாண்டு போயினரோ?
பொல்லா மானிடரின் எண்ணிக்கை பெருகிற்றோ ?
அல்லா இயேசுமுதல் அவனியில் இருக்கின்ற
எல்லா தெய்வமும் கைவிட்டுப் போயினரோ ?
கணவனை மட்டும் தொழுது எழுகின்ற
கற்புடைப் பெண்யான் கட்டளை இடுகின்றேன்
" பெய் !" எனச்சொன்னால் பெய்வாய் மழையே!
பொய்யில் புலவன் பொருளுரை காப்பாய் !
 
சித்திரங்கள் கவிதை எழுப்புவது குறித்து மகிழ்ச்சி. கவிதைகள் மரபில் அமைவது இன்னொரு மகிழ்ச்சி.
 
Human-Tail-53275931928_xlarge.jpeg



வாளெடுத்துப் போர்செய்து வாகைகள் பலசூடி
தோள்கொடுத்துக் காத்திடுவாய் என்றெண்ணும் வேளையிலே
வாலோடு பிறந்தாயே ! வானரத்தின் திருவுருவாய் !
நூலோர்கள் வகுத்துரைத்த நீதிகள் மறந்தேனோ?
மேலோர்கள் பிழைத்தேனோ ? செய்தவக் குறைதானோ ?
வேலோடு பிறந்திருந்தால் திருமுருகன் என்றெண்ணி
பாலோடு பன்னீர்க் காவடிகள் தான்சுமந்து
பழனியின் ஆண்டவனை சேவித்து மகிழ்ந்திருப்பேன்.
ஆனால்
வாலோடு இவ்வுலகில் வந்துதித்த என்மகனே!
இனிநான் என்செய்வேன்?ஆண்டவன் விட்டவழி !
 
Last edited:
திருவாளர்கள் கும்பகோணத்த்துப் பிள்ளை, ஜகதீசன் இவர்களின் கவிதைகள் அனைத்தும் கவிதை மிக அருமை! அவர்களிடம் இருந்து மேலும் பல மரபுக் கவிதைகள் எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்,
ரமணி
 
திருவாளர்கள் கும்பகோணத்த்துப் பிள்ளை, ஜகதீசன் இவர்களின் கவிதைகள் அனைத்தும் கவிதை மிக அருமை! அவர்களிடம் இருந்து மேலும் பல மரபுக் கவிதைகள் எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்,
ரமணி

ஜகதீசன் ஜயாவிடமிருந்து மரபுக்கவிதைகளை நாம் எதிர்பார்க்கலாம்

புகைப்படம் தந்த உணர்ச்சிவேகத்தில் எழுதியதை பாராட்டியது ஊக்கமளிக்கிறது.
தமிழ்மன்றத்தில் இணைந்த பிறகு தமிழ் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டேன்.
இனி மரபுக்கவிதை எழுத கற்றுக்கொள்வேன். என்ன!? கொஞ்சம் நாள் பிடிக்கும்!
 
உடனடியாக யாப்பிலக்கணம் பற்றி அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவலாம்:
யாப்பிலக்கணம்
முருகேசபிள்ளை

http://noolaham.net/project/50/4950/4950.pdf

இந்தப் புத்தகத்துடன் என் 'கவிதையில் யாப்பு' தொடர்க் குறிப்புகளையும் படித்தால் ஆர்வத்துடன் மரபில் கவிதை முனைய ஏதுவாக இருக்கும். ஆல் த பெஸ்ட்!

*****

ஜகதீசன் ஜயாவிடமிருந்து மரபுக்கவிதைகளை நாம் எதிர்பார்க்கலாம்

புகைப்படம் தந்த உணர்ச்சிவேகத்தில் எழுதியதை பாராட்டியது ஊக்கமளிக்கிறது.
தமிழ்மன்றத்தில் இணைந்த பிறகு தமிழ் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டேன்.
இனி மரபுக்கவிதை எழுத கற்றுக்கொள்வேன். என்ன!? கொஞ்சம் நாள் பிடிக்கும்!
 
Back
Top