தமிழில் விளையாடு பாப்பா

அன்புள்ள மன்ற உறவுகளுக்கு,

ராஜியின் அன்பு வணக்கங்கள்.

வரும் 21-ஆம் தேதி 'உலகத் தாய்மொழி நாள்'. எது எதற்கோ விழா கொண்டாடுகிறோம். இது போன்று உருப்படியான நாளினையும் கொஞ்சம் கொண்டாடுவோமா?

என்ன செய்யலாம்???? தமிழை நினைக்க வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும். உலர்வாய் இருக்காமல், ரசனையாகவும் இருக்க வேண்டும்.

என்னுடைய கருத்துக்கள்:
• அன்று பேசும் (அலுவலகம் சாராத) அத்தனை தொலைபேசி அழைப்புகளிலும் ‘ஹலோ’விற்குப் பதிலாக ‘வணக்கம்’ என்று சொல்லலாம். உரையாடலை முடிக்கும் போது ஒரு திருக்குறள் சொல்லி முடிக்கலாம்.

• அன்று அனுப்பும் (அலுவலகம் சாராத) அத்தனை மின்னஞ்சல்களிலும் கடைசியில் Regards பகுதியில் ஏதேனும் பாரதியார் கவிதை வரிகளை சேர்க்கலாம்.(signature ஆக)

• அன்று போடும் அத்தனை முகநூல் பதிவுகளையும் தமிழில் பதியலாம்.

• முடிந்தால் அன்று முழுவதும் பிற மொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேசுவதற்கு முயலலாம். (‘ஐயா…என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற அளவுக்குப் போக வேண்டியதில்லை. அப்படிப் போனால் நம்மால் இதைத் தொடர முடியாது. வீண் கேலிக்குள்ளாவோம். ‘நண்பா! என்ன டா செய்ற?’ என்பதும் தமிழ் தான். ‘hello..wat’s up’ என்பதற்குப் பதிலாக தமிழிலேயே எளிமையாகப் பேசலாம் என்பது என் கருத்து.)

மேற்சொன்ன அனைத்தையும் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும். ஆனால் தொடரத் தொடர புது அனுபவமாக இருக்கும் என்பது உறுதி. கண்டிப்பாகக் கஷ்டமாக இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரு நாள் தானே, தமிழுக்காக இதைக் கூட செய்ய மாட்டோமா என்ன?

முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே! நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். உங்கள் அனுபவங்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் நாளின் கடைசியில்.

மன்ற உறவுகளே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதைப் பற்றி???
 
1,3,4 சாத்தியமான எளிமையான முயற்சிகள்

செய்து பார்க்கலாம்
இன்றைய சூழலில் கூடுமானவரை குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பயிற்றுவிப்பது என உறுதிஎடுப்பது ஒரு எளிய ஆனால் முக்கியமான விஷயம்
 
உருப்படியான பயனுள்ள செயற்படுத்தக்கூடிய பரிந்துரை; முயல்வது நல்லது.
 
நல்லதொரு நோக்கத்தை வலியுறுத்தும் ஆக்கமுள்ள கருத்து பகிர்வுக்கு வாழ்த்துக்கள் இராஜி..!!:icon_b:

ஜானின் எளிய பரிந்துரையை இன்றைய/நாளைய பெற்றோர்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்வது இன்றைக்கு மிகவும் இன்றியமையாத தேவையாயிருக்கிறது..!!:)
 
ரொம்ப யோசிக்கிறாப்புல தெரியுதே ராஜிம்மா...

முயற்சிக்கலாம்...
 
அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். உலகத் தாய்மொழித் தின வாழ்த்துக்கள்.

என்ன நண்பர்களே! நாம் முன்னமே திட்டமிட்டபடி செயல்படுத்த ஆரம்பித்து விட்டீர்களா? மறந்து போனவர்களுக்காக சின்ன நினைவூட்டல்.

நானும் என் தோழியும் காலையிலேயே ஆரம்பித்து விட்டோம். படு அமர்க்களமாக இருக்கிறது. ஏகப்பட்ட தவறுகள், நமக்கே தெரியாமல் வந்து விழும் ஆங்கில வார்த்தைகள் என்று வேடிக்கையாகவே இருக்கிறது. எனினும் விடப் போவதில்லை. ஒரு கை பார்க்கலாம். மாலன் அவர்கள் சொல்வது போல் 'முயற்சிகள் தவறலாம். முயற்சிக்கத் தவறலாமா?'

'இந்த விளையாட்டை இன்றுடன் விடாமல் இது போல் புதிது புதிதாக வேடிக்கையாக நிறைய விளையாடலாம்' என்று என் தோழி கருத்துரைத்தார். என் எண்ணம் கூட அது தான். (குறும்பு பண்ணுவது கசக்குமா என்ன!) பார்க்கலாம்.இன்றைக்கு நீங்கள் எல்லாரும் எப்படி உணர்கிறீர்கள் என்றறிந்த பிறகு இது பற்றி மேற்படி பேசலாம்.

பொதுவாகவே தகவல் தொழில் நுட்பத் துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு நம் தாய்மொழி பற்றி அவ்வளவு மதிப்பு இருப்பதில்லை என்ற கருத்து நீண்ட காலமாக இருக்கிறது. அது கொஞ்சம் உண்மை தான் போலும். அதையெல்லாம் சரி செய்யும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. பீட்சாவும் பர்கரும் தெரியும் நமக்கு, வள்ளுவனும் பாரதியும் பரிட்சயம் இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும். ஆங்கிலமும் மேல் நாட்டுக் கலாச்சாரமும் தெரியவேண்டியது அவசியம் தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அது வயிற்றுக்காக. குறளும் கவியும் தெரிய வேண்டும். இது இதயத்திற்காக.

இன்றைய நாள் உங்களுக்குத் தமிழின் மீது ஒரு தேடலை ஆரம்பித்து வைக்குமாயின் என் இவ்வளவு பெரிய மொக்கைக்கு வெற்றி.

பயனுள்ள சுட்டிகள்:
1. நான் பாரதியைப் படிக்க ஆரம்பித்தது இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு தான். ஒரு முறை படித்துப் பாருங்கள். உங்களுக்கும் சில மாற்றங்கள் வரலாம்.
http://maalan.co.in/topicdetails.php?topicid=225&catid=10#content_container

2. பாரதி கவிதைகள் படிக்க: http://www.mahakavibharathiyar.info/

3. திருக்குறள் விளக்கத்துடன் படிக்க: http://ta.wikisource.org/wiki/திருக்குறள்_பரிமேலழகர்_உரை

http://www.tamildesam.org/

அன்புடன்,
இராஜிசங்கர்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்
(பாரதி)
 
Back
Top