அன்பே அன்பே (சிறு கதை)

nandagopal.d

New member
images+(4).jpg

திடிரென ஊரில் இருந்து ,ஒரு செய்தி பெற்றவளுக்கு உடல் நலமில்லை!’ அதை கேட்டவுடன் சரவணனின் மனம் கவலையில் முழ்க ஆரம்பித்தான்.
“உடன் வைத்து பார்த்து கொள்ளலாம் என்றால் மனைவிக்கும் அவனின் அம்மாவுக்கும் ஆகாது.இந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததில் காலம் போயி விட்டது. இதில் வேறு ஊரில் அவள் கிராமத்தில் மனைவியின் அம்மாவுக்கும் உடல் நலமில்லை! ஏற்கனவே இங்கு இருக்கும் வீட்டு ஓனர் எப்போ வாடகை எற்றுவர் என்றே தெரியவில்லை மேலும் வருமானமும் போதாது.என்ன செய்வது அதிகப்படியாக இதை பற்றி யோசித்து கொண்டே அலுவலகத்தில் வேலையும் ஓடவில்லை வாழ்க்கை எனும் தேடுதலில் எல்லாமே தொலைந்துதான் போய்கிறதா? அம்மாவை கூட்டி வரலாம் என்றால் கத்துவாள் உங்கள் அம்மா மட்டும் ஒசத்திய? என்று சண்டைக்கு வருவாள் அவள் அலுவலகத்தில் சந்தோசமாக இருப்பாள் ..
அன்று மாலையில் அலுவலகம் விட்டு நடந்து வருகையில் பிள்ளைகள் ஓடி வந்து பாட்டி வந்திருக்குது என்றனர்..

அவன் மனைவி "வாசலில் வாங்க காபி போடவா?ஏன் களைச்சி போயிட்டிங்க"என்று சொல்லி "அம்மா வந்து இருகாங்க".உடனே சரவணன் ஒரு அலட்ச் சிய பார்வையை வீசி விட்டு உள்ளே போயி பார்த்தான் கட்டிலில் படுத்திருந்த அம்மா அவனை பெற்றவள் அதிசயித்து நின்றான் சரவணன்.இரவு வேளையில் என்னடி ஆச்சி உனக்கு எப்படி இதெல்லாம் என்று கேட்டான் அன்போடு

வெளிய இருந்து வரும் பொழுது அம்மா வந்து இருகாங்க நான் உன் அம்மா என்றுதான் நினைத்தேன்.

என் அம்மாவுக்கு ஓன்று குறை இல்லங்க கூட என் பொறந்தவங்க நாலு பெரும் நல்ல பாத்துக்குரங்க,வேறு ஏதோ ஏதோ சொல்லி கொண்டு இருந்தாள்

அன்பு என்றால் பெண்தானே அதை வெளிபடுத்தும் விதத்தில்தான் மாறுபாடு எல்லாம் என்று நினைத்து விட்டு,
அவளிடம் வேறு எதுவும் கேட்க அவனுக்கு தோன்றவில்லை
அன்போடு அணப்பதை தவிர
 
அழகிய மனம்தான் உண்மையில் ஆசை ஊக்கி.

நல்ல மனம் வாழ்க.

நந்தகோபாலுக்கு பாராட்டுக்கள்
 
சில சமயங்களில் மனைவியும் மாமியாரை நன்றாக கவனிப்பார்கள்.
 
Back
Top