நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!

நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!

NT_130207164447000000.jpg

விஸ்வரூபம் படத்திற்கு தானே
எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை
தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக கமல்
கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில்
இன்று(பிப்.7) ரிலீஸாகியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன்.
அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு
ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும்,
தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும்
கடமைப்பட்டுள்ளேன்.

விஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு
அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள்
தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய
உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது
பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும்,
சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு
விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள
விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை
பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல்
பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான்.
கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம்
படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று
பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று
மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.

விஸ்வரூபம்
படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த
விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது
தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள்
திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.

விஸ்வரூபம்
படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து
ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது
நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார்.
-தினமலர்
 
விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன்.


இது தேவையற்ற பேச்சு.கமல் ஒரு மிகப்பெரிய கலைஞன் தான்.அதில் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை.ஆனால் அந்த மிகப்பெரிய கலைஞன் தவறே இளைக்க வாய்ப்பில்லையா? 'நான் என் இஷ்டத்திற்கு நடப்பேன். மக்களாகிய நீங்கள் ஏதேனும் கேட்டால் ( தவறோ சரியோ, மக்கள் கேள்வி கேட்க உரிமை உள்ளது, அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை படைப்பாளிக்கு உள்ளது என்பது என் கருத்து) நான் இந்தியாவை விட்டுப் போய் விடுவேன்' என்று கூறுவது போல் உள்ளது. கமல் தன ரசிகர்களின் அன்பை, அடிமைத்தன வழியில் பயன்படுத்த நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மொத்தத்தில் தேசப்பற்று உள்ள ஒரு நபர் பேசும் பேச்சல்ல இது என்பது என் அபிப்ராயம்.
 
எந்த ஒரு கலைஞனையும் நம்பி , தமிழ் சினிமா இல்லை; அதேபோல எந்த ஒரு முதல்வரையும் நம்பி தமிழ்நாட்டு மக்கள் இல்லை . ஒருவர் போனால் இன்னொருவர் வருவர். இந்த உண்மையை கமலஹாசனும், ஜெயலலிதாவும் புரிந்து கொள்ளவேண்டும்.
 
கமல் சொல்வதில் தவறு ஒன்றும் இருப்பதாக எனக்கு படவில்லை ! அவரது வலியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் அவ்வளவே ..
 
Back
Top