கி.மு. கி.பி. ஒலிப் புத்தகம்.

balakmu

New member
நண்பர்களே!
ரொம்ப நாளைக்கி முன்னால ஆனந்த விகடனில் திரு. மதன் அவர்கள் எழுதியதின் ஒலி வடிவம். உலகம் தோன்றியது (பூமி) எப்படி என்பது பற்றியெல்லாம், மிகவும் நயம்பட சொல்லியிருக்கிறார்கள். அனைவரரும் பதிவிறக்கம் செய்து காது குளிர கேட்டு ஆனந்தம் அடைவீர்கள் என் நம்புகிறேன்.



உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல "ஏவாள்' தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு , "அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்!' என "லோக்கல்' ஆக சந்தோஷப்பட வைக்கிறார் . இந்த ஒலிப் புத்தகத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் மூண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம். இன்னொரு சிறப்பு, இதையெல்லாமல் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காம ல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்.

தாஙகளின் மேலான கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


http://www.mediafire.com/?sharekey=6...b784fef9ed9be3
 
Back
Top