விஸ்வரூபம்

இப்போதும் நல்ல சூழல் உருவாகி இருக்கிறது என்று சொல்ல இயலாது.

ஜெயலலிதாவின் விளக்கப் பேட்டியை கேட்டபோது அந்தம்மா எத்தனை சாகசமாக சட்ட பிரச்சினையை கையில் எடுத்து அந்தப் படத்தை ஒடுக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது,

1. குறைந்த எண்ணிக்கை போலீசாரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை சமாளிக்க முடியாது என்று சொல்பவர் நாளையே வேறு ஒரு காரணத்தால் மாபெரும் கலவரங்கள் நிக்ழந்தால் இதை சொல்லி பொறுப்பிலிருந்து தட்டிக் கழித்துக் கொள்ள முடியுமா..? இது அழுகுணி ஆட்டம்.

2. மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று எதிர்பார்த்ததாகச் சொல்லும் முதலமைச்சர் தமிழக முஸ்லீம்களை எல்லாம் மிகத்தீவிரவாத மக்கள் என்று ஜெயலலிதாவே சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார் எனக் கொள்ளலாமா..?

3. இப்படிப்பட்ட தொடை நடுங்கி அரசாங்கம் கூடங்குளத்தில் மட்டும் வேடிக்கை பார்த்தது ஏனாம்.. ?

4. மிக மிக இலகுவாக முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையை இப்படி பூதாகரப்படுத்திய இந்த அம்மையார் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கவேண்டும். அப்படி இல்லாமல் சகட்டுமேனிக்கு அனைவர் மீதும் மான நட்ட வழக்கு போடுவேன் என்று பயம் காட்டியது அந்த பேட்டி.
 
அம்மா பேட்டியில் கீழுள்ளவாறு கூறியிருக்கிறார்

//கருணாநிதி கண்மூடித்தனமாக இப்படி புகார் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, 1980களில் நான் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்குப் புகார் கூறி கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். இது மிகவும் கேலிக்குரிய புகாராகும். பெரும் கோமாளித்தனமான புகாராகும். //

கோமாளித்தனத்துக் கெல்லாம் கோர்ட்டுக்கு போகிறேனென்பது என்னவாம் ?
 
கமலஹாசனுக்கு ஆதரவு பெருகியதும், அரசுக்கு எதிர்ப்பு அதிகமானதும் கண்டு அம்மையார் அஞ்சிவிட்டார். எனவேதான் அந்தப் பேட்டி. அதுவும் ஆங்கிலத்தில். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஆங்கிலத்தில் பேசுகின்ற முதலமைச்சர் இவர் ஒருவர்தான்.
 
கமலுக்கு குவிந்த ஆதரவை பார்த்து அரசு பயந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் ! ஒட்டு மொத்தமாக எல்லோரும் கமலுக்கு ஆதரவாக குரலை எழுப்புவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்

உண்மையாகவே படத்தை வெளியிடும் அக்கறை இருந்து இருந்தால் இரவோடு இரவாக மீண்டுமோர் தடை உத்தரவு வாங்க என்ன காரணம்

என்ன தான் பூசி மொழுகினாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ன
 
அரசின் சில வாதங்களை நீதிபதி கண்டிக்க வேண்டும்....

வன்முறை நடக்கும்,பாதுகாப்பு அளிக்க முடியாது என்பன போன்ற காரணங்கள் கண்டிக்கத் தக்கவை...

அதே நேரம் முஸ்லிம் தீவிரவாதம் என்பது பற்றி தமிழ்ப்படம் எடுத்து பிழைப்பு நடத்தத்தான் வேண்டுமா என்பது பற்றி எனக்கு ஆதங்கம் உண்டு
 
இனி திரைப்படம் எடுப்பவர்களுக்கு தேவை சென்சார் சர்டிஃபிகேட் அல்ல. கம்யூனிட்டி சர்டிஃபிகேட் தான்.

படிச்சதும் பக்குன்னு சிரிச்சுட்டேன். நல்ல பகிடி.
 
இப்போதும் நல்ல சூழல் உருவாகி இருக்கிறது என்று சொல்ல இயலாது.

ஜெயலலிதாவின் விளக்கப் பேட்டியை கேட்டபோது அந்தம்மா எத்தனை சாகசமாக சட்ட பிரச்சினையை கையில் எடுத்து அந்தப் படத்தை ஒடுக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது,

1. குறைந்த எண்ணிக்கை போலீசாரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை சமாளிக்க முடியாது என்று சொல்பவர் நாளையே வேறு ஒரு காரணத்தால் மாபெரும் கலவரங்கள் நிக்ழந்தால் இதை சொல்லி பொறுப்பிலிருந்து தட்டிக் கழித்துக் கொள்ள முடியுமா..? இது அழுகுணி ஆட்டம்.

2. மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று எதிர்பார்த்ததாகச் சொல்லும் முதலமைச்சர் தமிழக முஸ்லீம்களை எல்லாம் மிகத்தீவிரவாத மக்கள் என்று ஜெயலலிதாவே சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார் எனக் கொள்ளலாமா..?

3. இப்படிப்பட்ட தொடை நடுங்கி அரசாங்கம் கூடங்குளத்தில் மட்டும் வேடிக்கை பார்த்தது ஏனாம்.. ?

4. மிக மிக இலகுவாக முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையை இப்படி பூதாகரப்படுத்திய இந்த அம்மையார் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கவேண்டும். அப்படி இல்லாமல் சகட்டுமேனிக்கு அனைவர் மீதும் மான நட்ட வழக்கு போடுவேன் என்று பயம் காட்டியது அந்த பேட்டி.

அம்மா பேட்டியில் கீழுள்ளவாறு கூறியிருக்கிறார்

//கருணாநிதி கண்மூடித்தனமாக இப்படி புகார் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, 1980களில் நான் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்குப் புகார் கூறி கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். இது மிகவும் கேலிக்குரிய புகாராகும். பெரும் கோமாளித்தனமான புகாராகும். //

கோமாளித்தனத்துக் கெல்லாம் கோர்ட்டுக்கு போகிறேனென்பது என்னவாம் ?

சபாஷ்!! சரியான போட்டி. :):eek:
 
விஸ்வரூபப்பிரச்சனை முடிஞ்சுது அடுத்து சிங்கம்-2 மேல அட்டாக்

ஒரு மத கலவரம் உருவாக போவதற்காக எல்லா ஆயதத்தையும் செய்ய துவங்கி இருக்கிறார்கள் இவர்கள், பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் தம் பாதங்களை அழுத்தமாய் தமிழகத்தில் பதிக்க போகிற கால வெகுதூரத்தில் இல்லை
 
ஆமா !!!!

எல்லரும் இப்படியே பேசிக்கிட்டு போன யாரு விமர்சனம் எழுதரது ????
படத்த பார்த்தவங்க சீக்கிரம் எழுதுங்கப்பா,
உங்க விமர்சனத்த பார்த்துதான் நான் படம் பார்க்க போகனும்

மனோ.ஜி
 
அட எந்த பரபரப்பும் இல்லாமல் இந்த படம் வந்திருந்தால் இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் தோல்விப்படம் இதுவாகத்தான் இருந்திருக்கும் .... இருந்தாலும் அல்கொஇதாவையும் , அமெரிக்க உளவு துறையையும் இப்படி கேவலப்படுத்தி இருக்க கூடாது . தாலிபான் களுக்கும் அல்கொஇதாவிர்க்கும் இருக்கும் ஆறு வித்தியாசங்கலாவது தெரியுமா இவருக்கு என்ற கேள்வி எனக்கு இப்போது வருகிறது .( உலகத்தரத்தில் -? )ஒரு அரைவேக்காடு இந்த படம் . ஒரே ஆறுதல் அந்த கதக் நடனம் மட்டுமே ... :icon_p:
 
விஸ்வநாத் அலைஸ் விஸாம் அஹமது கஷ்மீரி (கமல்) ஒரு RAW அதிகாரி. ஜிஹாதிகளை ஒழிக்க (முடியாத விஷயம் தான்) அவங்களது கூட்டத்தில் சேருகிறார். தீவிரவாதி ஓமர் (ராகுல் போஸ்(காந்தி அல்ல!!)) யுடன் நட்பு பகருகின்றார். உலகேங்குமுள்ள அல் கைதா கூட்டத்தின் மதிப்பை பெறுகிறார்.

அமெரிக்கர்கள் ஒசாமாவை பிடித்த நிகழ்ச்சி போல ஒன்றை காண்பித்துள்ளனர். 9அதற்கு காரணம் கமலும் அவரது சக ஊழியரும் என பின்னர் தெரிய வர, கமலோ இவர்கள் எல்லோர் கண்களிலும் மண்ணைத்தூவி விட்டு, அமெரிக்கா சென்று ஒரு பிராமணப்பெண்ணை (பூஜா குமார்) மணந்து கொள்கிறார்.

புருசனை விட தனது மேலதிகாரி மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. புருசனை உளவு பார்க்க ஒரு உளவாளியை அனுப்புகிறார். அவன் கொல்லப்பட உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகிறது. பின்னர் இத்யாதி.... இத்யாதி... விஷயங்கள் நடக்கின்றன.

ஓமர் புறாக்கள் மூலம் நியூயார்க் நகரத்தை,(சீசியத்தை அதன் கால்களில் கட்டி ஒரு கதிர் வீச்சு அழிவை உண்டுபண்ண
முயல, கமல் அதைத்தடுக்க, இப்படி கதை நகருகிறது.

கமல் பெண்மை கலந்த ஆணின் நடிப்பில் பின்னியுள்ளார். முக்கியமாக அந்த "மாமா எப்படி இருக்கேள்" உச்சரிப்பு சூப்பர்.

கமல் கதை சொன்ன விதம் அபாரம்! எனக்கென்னவோ படத்தில் ஒரு குழப்பமும் இல்லை எனத்தோன்றுகிறது. நான் படம் சர்ச்சைக்கு முன் வந்த வெர்சன் பார்த்தேன்.

கமலுக்கு foreseeing skill உண்டு போலும்! சுனாமி வரும்னார் சுனாமி வந்தது. இனி என்னென்ன வருமோ தெரியாது....
பொறுத்திருந்து பார்ப்போம்
 
Back
Top