விஸ்வரூபம்

sarcharan

New member
விஸ்வரூபம்

என்ன தான் நடக்குது இந்த தமிழ்நாட்டில்? விஸ்வரூபம் படம் விஸ்வரூபம் எடுத்துள்ளது போலும்.

சென்னை உயர் நீதிமன்றம், கமலஹாசனை settlement optionsகளை முயலுமாறு கூறியுள்ளது.

தீர்ப்பு நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தாலிபன் தலைவன் முல்லா ஓமர் பற்றிய சாயல் உள்ளது போலும்.

கமல் இந்த படத்திற்காக 95 கோடி செலவு செய்துள்ளார்.

நண்பர்களே, இது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
 
இதைப் பற்றிய எனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறப்போந்தால் சில நண்பர்கள் விரும்பமாட்டார்கள் என்பதாலும் வீணான சர்ச்சை ( ஆரோக்கியமென்றால் சரி.. ஆனால் அநாகரிக சர்ச்சை ஆகிவிட்டால்..? ) தோன்றும் என்பதாலும் எனது கருத்துகளை வைக்க தயங்குகிறேன்.

நிர்வாகிகள் அனுமதித்தால் அவசியம் எனது விஸ்தாரமான கருத்துகளை முன்வைக்கத் தயார்.

அது வரை மவுனம் காக்கிறேன்.
 
எல்லாம் அரசியல் தான் என எண்ண தோன்றுகிறது ! ..
 
முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கேரளாவில், இப்படம் தடை செய்யப்படவில்லை; ஆனால் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு நீதிமன்றம் Stay வழங்கிய பின்பும், தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அரசு கவனிக்கவேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் உள்ளன. தொடர் மின்வெட்டு, காவிரி பிரச்சினை, ஏறிக்கொண்டே போகும் விலைவாசி ..இப்படி எத்தனையோ பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதையெல்லாம் கவனிக்காமல், விஸ்வரூபம் படத்தைத் தடை செய்வதிலேயே அரசு குறியாக உள்ளது. சமச்சீர் கல்வி விஷயத்தில் மூக்கு உடைபட்டது போல, மீண்டும் ஒரு மூக்கு உடைப்பு அரசுக்கு நடக்கத்தான் போகிறது.
 
எங்கே போய்கொண்டிருக்கிறது என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது.

சில காரணங்களுக்காக சில காரணங்களை பொதுவிலே கூற முடியாது. தவறு எங்கிறுக்கிறது என்று எல்லோராலும் ஊக்கிக்க கூடியதாக இருக்கிறது.


ஆனால் ஒன்று திறமையை எந்த கொம்பனானாலும் தோற்கடிக்க முடியாது...
தீயதை ரொம்ப நாள் காப்பாற்ற முடியாது.
 
தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறைக்காட்டுவதின் பின்புலத்தில் கமல் படத்தின் ஒளிப்பரப்பு உரிமத்தை ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்காமல் விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கியது ஒரு காரணமாக* கூறப்படுகிறது

=========================================

இன்னொரு முக்கியமான விடயமாக சொல்ப்ப*டுவ*து, சமீபத்தில் நடந்த ப.சிதம்பரத்தை பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ப.சிதம்பரம் பிரமராவதற்கு முழு தகுதி உடையவர் என்றும், வேட்டி கட்டிய ஒரு தமிழர் பிரதமராவதை பார்க்க விரும்புவதாகவும் பேசி இருக்கியிருக்கிறார்

இதனை தொடர்ந்து பேச வந்த கலைஞர், இங்கு பேசியவர் ஒரு வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவதை காண விரும்புவதாக கூறினார்கள், இதிலிருந்து சேலை கட்டிய தமிழர் பிரதமராவதை யாரும் விரும்பவில்லை என்று தெரிகிறது என்று பேசி இருக்கிறார்

இதுவும் அம்மாவின் கமல் மீதான ஒரு கோவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது

========================

இது எல்லாம் உண்மையாக இருந்து, அம்மாவுக்கும் கமலுக்கும் ஏதும் சமரசமும் நிகழ்ந்தால், கூடங்குளப் பிரச்சனையில் நிகழ்ந்ததை போல அம்மாவின் ஒரு பெல்டியை இந்த விவகாரத்திலும் காணலாம்
 
எனக்கு ஒண்ணுமே புரியலை..


படத்தில ஒரு சாரரை வன்முறையாளர்கள் என்று காட்டி இருப்பதாக வழக்கு நடந்தது

விஸ்வரூபம் படம் ஓடினா சட்டம் ஒழுங்கு கெடும்னு அரசு வக்கீலும் கலெக்டர்களும் சொல்றாங்க.

சட்டம் ஒழுங்கு கெடும்னா வன்முறை நடக்கணும். வன்முறை நடக்கணும்னா யாராவது வன்முறை நடத்தணும்.

யார் வன்முறை நடத்துவாங்க? சொல்லவே இல்லையே..

அதாவது அந்த ஒரு சாராரில் சிலர் கமல் கதையில் வன்முறையில் ஈடுபடுவதாக காட்டியதாவே வச்சுக்குவோம்.

உண்மையிலேயே பலர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று அரசே சொல்ற மாதிரி இருக்கே இந்த வழக்கு..

இப்ப அந்த ஒரு சாரர்களை வன்முறையாளர்கள் அப்படின்னு கமல் சொல்றாரா இல்லை தமிழக அரசு சொல்லுதான்னே புரியல.
 
Last edited:
அண்ணா, அந்த ஒரு சாராரும் அப்படியே தான் தங்களைத் தானே சொல்லிக்கிறாங்க
 
ஒத்துகிட்டா சரி.. கமல் உச்ச நீதிமன்றம் போகப் போகிறார்.. அங்க இந்த சப்பைக் கட்டுகளை கட்ட முடியாதே!!!
 
இப்பதான் கமல் நிஜமாவே விஸ்வரூபம் எடுத்துகிட்டு இருக்கார்...!!!
 
எனக்கு ஒன்னும் புரியலை...

நீதி மன்றம் ஏன் இப்படி குழப்பிக்கொள்கிறது...?

அரசின் காமெடிகளில் இது கொஞ்சம் ஓவராகவே பொய்விட்டது.

இங்கே நாங்கள் அனைவரும் உங்களில் ஒருவனைப்போல தான் பழகிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் இப்படி கொடிதூக்கும் சிலர்தான் எங்களை வெறுக்க கற்றுக்கொடுக்கிறார்கள்.

எல்லா திரைப்படங்களும் ஒவ்வொரு வகையில் யாரையாவது மனம் நோகடிக்கத்தான் செய்யும்.
பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறை காட்சிகளும் உள்ளன...


ஆகவே எல்லா திரைப்படங்களையும் தடை போட்ருவோமா ?

நண்பர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது....

பேசாமல் திரையரங்கங்களையும் மருத்துவமனைகள் ஆக்கிடலாம். :)
 
இன்னொரு முக்கியமான விடயமாக சொல்ப்ப*டுவ*து, சமீபத்தில் நடந்த ப.சிதம்பரத்தை பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ப.சிதம்பரம் பிரமராவதற்கு முழு தகுதி உடையவர் என்றும், வேட்டி கட்டிய ஒரு தமிழர் பிரதமராவதை பார்க்க விரும்புவதாகவும் பேசி இருக்கியிருக்கிறார்

இதனை தொடர்ந்து பேச வந்த கலைஞர், இங்கு பேசியவர் ஒரு வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவதை காண விரும்புவதாக கூறினார்கள், இதிலிருந்து சேலை கட்டிய தமிழர் பிரதமராவதை யாரும் விரும்பவில்லை என்று தெரிகிறது என்று பேசி இருக்கிறார்

இதுவும் அம்மாவின் கமல் மீதான ஒரு கோவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது

நீங்கள் சொல்வதுதான் அப்படாமான உண்மை... நிச்சியம் அதற்காக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனுபவிக்க போகிறார்கள்..
 
என் கருத்தை ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் ‘’ பேய் ஆட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்..’’
 
சரியாகச் சொன்னீர் கலைவேந்தே ! பாரதியின் வரிகள் என்றும் பொய்த்துப் போனதில்லை.
 
கமல் என்ற ஒரு மிகப்பெரிய நடிகருக்கே இந்த நிலைமை என்றால் என்னவென்று சொல்ல !

தாமரை சொன்னது போல் அரசே சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கெட்டு போய் விட்டது என ஸ்டேட்மென்ட் கொடுத்ததாக ஆகி விட்டது

கமலில் விஸ்வரூபத்தை பொருத்திருந்து பார்ப்போம்
 
இன்றைக்கு கமலஹாசனின் அலுவலகம் சென்று நடிக, நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவ்வளவு காலம் எங்கே போயிருந்தார்களாம்?

கமலின் ஆப்த நண்பர்களுள் ஒருவரான ரஜினிகாந்த் இவ்விஷயத்தில் மௌனம் காத்ததும் வேடிக்கையான விஷயம்.

நேற்று அவர் கமலுக்காதரவாக சற்று பேசியிருக்கிறார்.

மத்தியில் கமலது இந்த படத்துக்கு ஆதரவு தருவதாக பேச்சும் அடிபடுகிறது.

கமல் படத்தை திரையரஙகத்திலேயே வெளியிட்டிருக்கலாம். DTH ல் வெளியிடும் எண்ணத்தை பிறரது படத்தில் சொல்லியிருக்கலாம்.

ஒழுங்காக ஜெயா தொலைக்காட்சிக்கு உரிமம் வழங்கியிருந்தால் அம்மையாரின் கோபத்திற்கு ஆளாகி இருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

அது சரி, தி. மு. க, தே.மு. தி. க கட்சிகள் எல்லாம் இது பற்றி மூச்சே விடவில்லையே....

ஹே ராம் படம் வந்தபொழுதும் இது போல் ஒரு சர்ச்சையை கிளப்பினர் நம் மக்கள்.

மை நேம் இஸ் கான் படத்தை வெளியிடும் போது, பால், ராஜ் தாக்ரேக்கு திரையிட்டுக்காண்பித்தனர். மாநில அரசின் ஒத்துழைப்பும் கிடைத்தது.

ஆக மொத்தத்துல இந்த படம் ஒரு அரசியல் ஆடுகளத்து கால்பந்தாகிவிட்டது என்பதில் ஐயம் இல்லை.
 
இனி திரைப்படம் எடுப்பவர்களுக்கு தேவை சென்சார் சர்டிஃபிகேட் அல்ல. கம்யூனிட்டி சர்டிஃபிகேட் தான்.
 
விஸ்வரூபம் உலகளாவிய (Internation Recognize) அந்தஸ்து பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்க நினைத்திருக்க வேண்டும் கமல். ஆகவே தான் இண்டர்நேஷ்னல் வில்லனான தலிபன்களை வைத்து கதை அமைத்திருக்க வேண்டும்.

சும்மா சொல்லக்கூடாது. மிகவும் சிரமப்பட்டு வேலை பார்த்திருக்கிறார். நேர்த்தியாக சர்வதேச தரத்துடன் தயாரித்திருக்கிறார்.

ஆனால் இந்த கதைக் களம் தான் விவாததிற்குறியதாகி விட்டது.

தொடர்ந்து நம் சமூகத்தையே குறிவைத்து தீவிரவாதிகால சித்தரிப்பை கண்டு வெகுண்ட முஸ்லீம் சகோதர்களின் ஆதங்கமும் சரியானதாகவே படுகிறது.

ஆனால் இந்த பிரச்சனையில் அனைவருக்கும் சம பங்கு இருக்கிறதாகவே கருதுகிறேன்.

படம் எடுக்கும் வரைக்கும் கமலுக்கு இப்படி ஒரு பிரச்சனை உருவாகும் என்று உணர்ந்திருக்க மாட்டார் என்றாலும், இப்படி ஒரு சூழல் அனைந்தப் பின் முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு சரியான ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் காட்சிகளை வெட்ட வேண்டிவரும் என்ற காரணத்துக்காக அவர் கொஞ்சம் பின் வாங்கிவிட்டார்.

அதன் விளைவு, முஸ்லீம் நண்பர்களுக்கும் ஆத்திரம் கொடுத்திருக்கும். ஆனால் இவர்களும் சுமூக வழிகளை ஆராயாமல், அதிரடியாக ஆர்பாட்டம் போஸ்ட்டர் என்று போகவே நிலைமை கட்டுப்பாட்டை இழக்க தொடங்கிவிட்டது.

அரசாங்கம் லா அண்ட் ஆடர் ப்ராப்ளம் வரக்கூடாது என்பதற்க்காக(?) அதிரடி (ரசிகர்களுக்கும்/கமலுக்கும் ஆத்திரமூட்டும் வகையில்) நடவடிக்கக எடுத்தப்பின் தான் இந்த பிரச்சினை உச்சம் தொட்டது. உண்மையில் அரசு நினைத்திருந்தால் இருவருக்கும் இடையே சுமுகமான சூழல் அமைந்திட வழிவகுத்திருக்கலாம். அதை விட்டு ஈகோ விளையாட்டு ஆடிவிட்டது.

இப்போது தான் ஒரு நல்ல சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. பார்ப்பொம்.
 
Back
Top