மதி
New member
பிரபல விளம்பர வாசகத்தை வச்சு படம் எடுத்திருக்காங்க. எல்லோருக்கும் இந்த படத்தை பத்தி தெரிஞ்சிருக்கும்.
இந்த படம் பாக்குற எண்ணமே எனக்கு இல்லே. என் பெரியப்பா மகன் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனான். வேற வழியில்லாம போனேன்.
பாக்கியராஜின் "இன்று போய் நாளை வா" கதையே தான். நடந்த பஞ்சாயத்துக்களுக்கு அப்புறம் டைட்டில் கார்டில் அவர் பேர் போட்டிருக்கிறார்கள். மூணு நண்பர்கள்.. ஒரு பொண்ணு. அந்த பொண்ணு யாரைக் காதலிக்குது. இது தான் மேட்டரே. காமெடிப்படம்னு முடிவு செஞ்சதுக்கு அப்புறம் லாஜிக்கெல்லாம் நமக்கெதுக்கு.
டைட்டிலில் பவர்ஸ்டார் பேர் போடும் போது அவ்ளோ சத்தம். ஒரு வேளை மாயாஜால் டிக்கெட்டெல்லாம் அவரே வாங்கி ஆள அனுப்பிச்சிருக்காரோ..? அவர் பேர் புகழ் உலகம் பரவியிருக்க சந்தானத்துக்கு கூட அவ்ளோ விசில் சத்தம் இல்லே. மாத்தி மாத்தி கலாய்க்கறதும் கிச்சுகிச்சு மூட்டறதும் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது.
பவர்ஸ்டாரை நல்லாவே பயன்படுத்தியிருக்கிறார்கள். வசனங்கள் சிரிக்க வைக்கிறது. சந்தானத்தின் ஒன்லைனர்ஸ் நல்லாவே இருக்கு.. சில இடங்கள் தவிர. ஹீரோ வா வர்றவர் சத்யானு நினைக்கிறேன். சொன்ன வேலையை செஞ்சிருக்கார். ஹீரோயின் விளம்பரத்தில வர்ற மாதிரி நடிச்சிட்டு போயிருக்காங்க. அவ்ளோ ஸ்கோப் இல்லே.
நிறைய நகைச்சுவை நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும் ஸ்கோர் பண்றது பவர்ஸ்டார் தான். அவர் வசனம் பேச வேண்டாம். நடிக்க வேண்டாம்.. ஸ்கிரீனில் வந்தாலே சிரிப்பு வருது. அவரை நன்கு பயன்படுத்தியிருக்கிறார் சந்தானம். அதே சமயம் அடக்கியும் வாசிச்சிருக்கார். இறுதி வசனமே அதை உறுதி செய்யுது.
ஆக மொத்தத்தில் போனா சிரிச்சிட்டு வரலாம். ஆனாலும் ஒரிஜனில் அளவிற்கு இந்த படத்தின் காமெடி பேசப்படுமா என்பது சந்தேகம் தான். "ஏக் காவ் மேன்" அளவிற்கு சொல்லி சொல்லி சிரிக்க பெரிதாய் ஒன்னுமில்லை.