2012-ம் ஆண்டில் ‘கலகலப்பு’ படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து விஷாலை வைத்து ‘மதகஜராஜா’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் இயக்குனர் சுந்தர்.சி.
தற்போது அந்த படத்தின் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். அப்புதிய படத்திற்கு ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்று பெயரிட்டிருக்கின்றர்.
இதில் கதாநாயகனாக ‘பாய்ஸ்’ சித்தார்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். இருவரும் தமிழில் முதன்முறையாக இணையும் முதல் படம் இதுதான். இவர்கள் இருவரும் ஏற்கெனவே தெலுங்கில் இணைந்து நடித்துள்ளனர். கூடுதலாக சந்தானமும் இவர்களோடு இணைகிறார்.
சுந்தர்.சி. படங்கள் என்றாலே காமெடிக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அதுபோலவே இப்படமும் முழுநீள காமெடி படமாக உருவாகிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி.யின் மனைவி குஷ்பு தயாரிக்கிறார்.
மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க முடிவெடுத்திருக்கின்றனர்
2;‘பூலோகம்’ படத்தில் ஜெயம் ரவியுடன் சண்டைபோடும் ஹாலிவுட் நடிகர்
‘ஜெயம்’ ரவி, த்ரிஷா நடிக்கும் புதிய படம் ‘பூலோகம்’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார்.
வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது இந்தப் படம். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். ஏற்கெனவே அவர் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திலும் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.
இந்த படத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பிரபல அமெரிக்க நடிகருமான ‘நாதன் ஜோன்ஸ்’ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏழு அடி உயரமும், அசத்தலான தோற்றமும் கொண்ட இவர் 2004-ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் படமான ‘டிராய்’ என்கிற படத்தில் ‘போக்ரியஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருக்கும், ‘ஜெயம்’ ரவிக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் இதுவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவில் பார்க்காத, அனுபவிக்காத புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.
3;