வஜ்ராசனம்

tnkesaven

New member
கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு ஒரு காலை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மடக்கிய காலின் குதிகாலானது,உடலின் பின்பகுதியை தொடுவது போன்று அமர்ந்து இருக்க வேண்டும்.

பின்னர் இதே போன்று மற்றொரு காலையும் மடக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

குதிகால்களை ஒரு பீடம் போல் அமைத்து அதன் தேல் உட்காருவது போன்று இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

வலது கையை வலது கால் மூட்டியிலும், இடது கையை இடது கால் மூட்டியிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

2 கைகளின் மூட்டுப் பகுதியும் மடங்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம்.

இதையடுத்து முதுகுப்பகுதியை வளையாமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.

இந்த நிலையில் சில வினாடிகள் வரை இருந்து விட்டு பின்னர் ஒவ்வொரு காலாக நீட்டி பழைய நிலைக்கு வர வேண்டும்.

மூச்சு முதலில் சாதாரணமாகவும், பின்பு ஆழ்ந்த மூச்சாகவும் 5 முறை உள் இழுத்து விடலாம்.

கால் பாதங்களில் வலி நீங்க வஜ்ராசனம் உதவுகிறது.
மூட்டு வலியை போக்குகிறது.
ஜீரண சக்தி அதிகமாகவும்,

கழுத்துப் பகுதி வலி நீங்கவும் இது சிறந்த ஆசனம் ஆகும்.
 
இந்த ஆசனம் இறைவணக்கம் அனேகமாக எல்லா மதத்திலும் உபயோகிக்கப்படுகிறது. எல்லா மதக்கோட்பாடுகளும் வாழ்வியல் மேம்பாட்டையே நோக்கமாகக்கொண்டது என்பது விளங்குகிறது!
தொடர்ந்து பதியுங்கள்!
 
Back
Top