கோலிவுட்.கிசுகிசு

tnkesaven

New member
இணையத்தில் இருக்கும் ரஜினி குறித்த பதிவுகளிலும் சரி, தற்போது ரஜினி ரசிகர்கள் உருவாக்கும் எந்த ஒரு பேனர் ஆனாலும் சரி.. அதில் ரஜினி நடித்த 'தளபதி' படத்தின் படம் ஒன்று நிச்சயமாக இடம்பெறும்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடித்த 'தளபதி' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ரஜினியின் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. 'கோச்சடையான்' படத்தில் தனது காட்சிகளை முடித்து கொடுத்து விட்ட ரஜினி, அடுத்த யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ரஜினியும், மணிரத்னமும் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார்களாம். விரைவில் 'தளபதி' படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்,

அதுமட்டுமன்றி மம்மூட்டி இறந்து, அரவிந்தசாமி, ரஜினி இருவரும் இணைவது போல 'தளபதி' படம் முடிவடையும். அதில் இருந்து இரண்டாம் பாகத்தில் ஆரம்பிக்கலாம் என்று மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கிறது கோலிவுட்.

துப்பாக்கி' படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அப்படத்தினை இந்தியில் இயக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கோடம்பாக்கத்தில் மற்றொரு செய்தி பரபரவென பேசப்படுகிறது. விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா ஆகியோரது படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜீத்.

அஜீத் நடித்த 'தீனா' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். சூர்யா நடித்த 'கஜினி' படமே முதலில் அஜீத்தை வைத்து 'மிரட்டல்' என்ற பெயரில் பூஜைப் போடப்பட்டது தான்.

'துப்பாக்கி' படத்தினைப் பார்த்த அஜீத், விஜய் மற்றும் முருகதாஸை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

எனவே, எப்படியும் அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏ.ஆர்.முருகதாஸிடம் தனது நிறுவனத்திற்கு அஜீத் படத்தினை செய்யச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

இந்தி 'துப்பாக்கி' படத்தை முடித்ததும் இப்படத்துக்கான பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

'கொசுறு' கபாலி : " தீனா படத்துனால தான் அஜீத்துக்கு ரசிகர்கள் 'தல'ப் பட்டம் கட்டினாங்க.. மறுபடியும் அதே டீம்! "

நன்றி ';சினிமா விகடன்
 
தகவல்களுக்கு நன்றி நண்பரே! கிசுகிசுன்னு தலைப்பை பார்த்ததும் ஹி ஹி ஓடி வந்தேன் :)
 
விறுவிறுப்பான கிசுகிசுக்கள்...

பகிர்விற்க்கு நன்றி...
 
Back
Top